Tuesday 21 May 2019

4. சோஷலிசப் பொருளாதாரத்தில் விலை- எல்.லியோன்டியெவ்


சோஷலிச நிறுவனம் ஒன்றில் உற்பத்தி செய்யப்பட்ட பண் டத்தின் விலை அதன் மதிப்பின் பண வடிவம் ஆகும். மதிப்பு விதியைத் தமது ஆட்சிக்குட்படுத்தி விட்டு சோஷலிச அரசானது பண்டங் களின் விலைகளை நிர்ணயிக்கிறது. இப் பண்டங்களின் உற்பத்தியில் சமூக அத்தியாவசியமான உழைப்புச் செலவீடு செய்யப்பட்டுள்ளது.

விலைகளின் அமைப்பு இடையறாது மேம்படுத்தப் பெற வேண் டும் என்று சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சியின் நிகழ்ச்சி நிரல் கூறுகிறது. கம்யூனிசக் கட்டுமானப் பணிகளுக்கேற்பவும், தொழில் நுட்ப முன்னேற்றத்திற்கேற்பவும், உற்பத்தி, நுகர்வு ஆகியவற்றின் பெருக்கத்திற்கேற்பவும், உற்பத்திச் செலவீட்டின் சிக்கனங்களுக்கேற்பவும், உற்பத்திக் குறியீடுகளில் துண்டு விழு வதற்கேற்பவும், விலைகள் ஒரு தரத்திற்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்று கட்சியின் நிகழ்ச்சி நிரல் கூறுகிறது. விலைகள் சமூக அத்தியாவசியமான உழைப்புச் செலவீட்டை, மேலும் மேலும் பிரதிபலித்தாக வேண்டும். உற்பத்தியின் விளைவை ஊர்ஜிதப்படுத்த வேண்டும், சுழற்சிச் செலவீடுகளையும், சாதாரணமாக இயங்கும் ஒவ்வொரு நிறுவனத்திற்கும் ஓரளவு இலா பத்தையும் அது ஊர்ஜிதப்படுத்த வேண்டும்.

எனவே, ஒரு பண்டத்தின் விலை அதன் மதிப்பின் மீது சார்ந்துள்ளது. அதாவது ஒட்டுமொத்த சமூக அத்தியாவசிய உழைப்புச் செலவீடு, உயிருள்ள உழைப்புச் செலவீடு, பண்டத்தை உற்பத்தி செய்யத் தேவையான உள்ளடங்கிய உழைப்பு ஆகிய வற்றின் மீது சார்ந்துள்ளது.

திட்டமிடப்பட்ட சோஷலிசப் பண்ட உற்பத்தியில் விலை யானது முதன் முதலில் ஒரு கணக்கீட்டு மூலமாகப் பயன்படு கிறது. இது தவிர, விலை எனும் இனம், வேறு பல பணிகளை யும் நிறைவேற்றுகிறது. தொழில் நுட்ப முன்னேற்றத்தைத் தாண்டி விட விலைகள் நிர்ணயிக்கப் பெறுகின்றன. உற்பத்தியைப் பெருக்க, செலவுகளைத் திட்டமாகக் குறைக்க விலைகள் பொருத்தப் படுகின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக குறிப்பிட்ட சில பண்டங் களுக்கு நுகர்வாளரின் தேவைகளையும், அவற்றின் உற்பாக்கியை விஸ்தரிக்கும் வாய்ப்புக்களை யும் இணைக்கும் வகையில் விலைகள் நிர்ணயம் செய்யப் படுகின்றன. இதனால்தான் சில பண்டங் களின் விலைகளை அவைகளின் மதிப்பிலிருந்து வேறுபடக் கூடிய படி குறிக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது.

சோஷலிச அரசினால் இயக்கப் பெறும் விலைக் கொள்கை உற்பத்தித் தொழில் நுணுக்கங்களை இடையறாது முன்னேற்ற மடையச் செய்யப் பயன்படுகிறது, விலைகள் சிறந்த வகைக் கருவிகள், இயந்திரங்கள், உபகரணங்கள் முதலியனவற்றை உற்பத்தி செய்யப் பயன்பட வேண்டும். அதே சமயத்தில், பய னற்ற பழம் பொருட்களை நிறுவனங்கள் உற்பத்தி செய்வதைத் தடை செய்யும் கருவியாகவும் ஆக வேண்டும்.

விலைக் கொள்கையின் முக்கியமானதோர் அம்சம், கிடைப் பரிய கச்சாப் பொருட்களின் வகைகள் செலவிடப் படுவதில் சிக்கனத்தைக் கொண்டு வருகின்றன. புதிய பொருட்களைப் புகுத்துவதையும், உள்ளூரில் கிடைக்கக்கூடிய எரி பொருள், கச்சாப் பொருள் ஆகியவற்றிற்கு மாற்றிக் கொள்வதையும் கொண்டுவர வேண்டும். விலைக் கொள்கை மிக நீண்ட தூரத்தி லுள்ள தும், பகுத்தறிவுக் கொவ்வாததுமான வண்டிச் சத்தத்தை எதிர்த்துப் போராடும் ஒரு மூலமா கும். தனித்தனிப் பண்டங்களின் விலைகளின் உறவு. பண்டங்களை நுகரச் செய்வதற்குத் தூண்டு கோலாக இருக்கும்படி குறிக்கப் படுகின்றன. இதன் உற்பத்தி விரைவாக விரிவாக்கப் படக் கூடியதாக இருக்கும், (கச்சாப் பொருட்கள், உற்பத்தி சக்திகள் முதலியன கிடைப்பதால்.)

விலைக் கொள்கையின் அடிப்படைப் போக்குக் கம்யூனிசக் கட்டுமானத்தின் போது, பொருளாதார பகுத்தறிவுக்கேற்ப விலைகளைக் குறைப்பது ஆகும். தொழிலாளர் உற்பத்தித் திறன் உயருவதனாலும், உற்பத்திச் செலவுகள் குறைக்கப் படுவதாலும் விலைகள் குறைக்கப்படுகின்ற போக்கு காணப்படுகிறது. சில்லறை விலைகள் குறைக்கப்படுவதற்கு ஓர் அத்தியாவசியமான நிபந்தனை உற்பத்தி, வண்டிச்சத்தம் ஆகியவைகளின் செலவுகள் ஓர் அலகு உற்பத்திக்கு குறைக்கப்பட்டாக வேண்டும் என்பதேயாகும்.
(அரசியல் பொருளாதாரச் சுருக்கம்- எல்.லியோன்டியெவ்- என்சிபிஎச் 1075 – தமிழாக்கம்:தா.செல்லப்பா- பக்கம் 372-374)

No comments:

Post a Comment