- கி.ஷஹ்நஸாரவ், அ.போபரீக்கின்,
யூ.கிராஸின், வி.சுகதேயெவ்
உற்பத்தியின் நோக்கத்தையோ, இதை அடைவதற்கான சாதனங்களையோ
மக்களால் தன்னிச்சையாகத் தேர்ந்தெடுக்க இயலாது. இந்த நோக்கம் உற்பத்தி உறவுகளால் புறவய
ரீதியாக நிர்ணயிக்கப்படுகிறது. உற்பத்திச் சாதனங்கள் உழைப்பாளிகளுக்குச் சொந்தமாக இருக்கும்
போது உற்பத்தி சமு தாயம் முழுவ தன் நலன்களில் நடைபெறுகிறது, இதன் நேரடி நோக்கமாக மனித
நலம் விளங்குகிறதேயன்றி லாபம் இதன் நோக்கமாக இல்லை.
சமுதாயம் சோம்பேறிகளிடமிருந்தும் சுரண்டலாளர் க
ளிடமிருந்தும் விடுதலை பெறும் போது, மக்களுக்கு அவசிய மான எல்லாவற்றையும் பூர்த்தி
செய்வது தான் உற்பத்தி யின் நோக்கமாயிருக்கும் என்று கற்பனாவாத சோஷ லிஸ்டுகளே குறிப்பிட்டனர்.
உதாரணமாக, தாமஸ் மோர் தனது கற்பனையுலகம் எனும் நூலில், எல்லோரும் வேலை செய்யும் போது,
மேல் வர்க்க சோம்பேறிகளும் இவர் களது பெரும் ஏவலாட்களும் இல்லாத ஒரு அரசு அமைப் பில்
மக்களின் தேவைகளைத் தக்க முறையில் பூர்த்தி செய் வதற்கேற்றவாறும் பயன் மற்றும் வசதிக்
கோட்பாடுகள் கூறு மாறு இவர்களிடம் எல்லாம் போது மான அளவு அபரிமிதமாய் இருக்கவும் தக்கவாறு
பயிர்த்தொழிலும் கைத்தொழி லும் வளரும் என்று எழுதினார்.
சோஷலிச உற்பத்தியை மக்கள் நல் வாழ்வை உயர்த்தும்
கடமைக்கு உட்படுத்துவது என்பது சோஷலிச அமைப்பின் மனிதாபிமானத்திற்கான சான்று மட்டுமின்றி
பொருளாதார அவசியமுமாகும். ஏனெனில் சமுதாயத்தின் முக்கிய உற் பத்திச் சக்தியாகிய மனிதனின்
வளர்ச்சி உழைப்பாளிகளின் பொருளாயத மற்றும் ஆன்மீகத் தேவைகள் எவ்வளவு முழு மையாகப் பூர்த்தி
செய்யப்படுகின்றன என்பதைக் கணிச மான அளவு பொறுத்துள்ளது.
விஞ்ஞான- தொழில் நுட்ப புரட்சிச் சூழ் நிலைகளில்
உற்பத்தி பாரம்பரியமான தேவைகளை (உணவு, உடை, இருப் பிடம்) பூர்த்தி செய்வதோடு கூட இடையறாது
புதிய தேவை களையும் தோற்றுவித்து வருகிறது. உதாரணமாக, தொலைக் காட்சிப் பெட்டிகள், குளிர்பதனப்
பெட்டிகளின் தேவை கள் தோன்றும் முன் இவற்றைக் கண்டு பிடித்து உற்பத்தி செய்ய வேண்டும்,
வெகுஜனங்கள் வாங்குவதற்கு ஏற்ற வகையில் இவற்றின் மதிப்பைக் குறைக்க வேண்டும். இவை யனைத்திற்கும்
பொருட்களின் உற்பத்தியளவையும் இவற் றின் தரம் உயர்வையும் இடையறாது அதிகரிக்க வேண்டும்.
நுகர்வுப் பொருட்களை நேரடியாக உற்பத்தி செய்யும் பொருளாதாரத் துறைகளில் மட்டுமின்றி,
தேசியப் பொரு ளாதாரத்தின் எல்லாத் துறைகளுக்கும் தேவையான இயந் திரங்கள், உபகரணங்கள்,
மற்ற உற்பத்திச் சாதனங்களை உற்பத்தி செய்யக் கூடிய கனரகத் தொழில் துறையிலும் இதைச்
செய்ய வேண்டும்.
மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் கடமை யானது
பொருளா யதத் தேவைகளைப் போன்றே ஆன்மீகத் தேவைகளை யும் (ஞானத்தைப் பெறுதல், தாய் நாட்டு
மற்றும் உலகக் கலாச்சாரத்தின் செல்வங்களைக் கிரகித்தல்) பூர்த்தி செய்வதை முன்னனுமானிக்கிறது.
சோஷலிசச் சமுதாயத் தில் ஆன் மீகத் தேவைகள் விரைவான வேகங்களில் வளரு கின்றன. இவற்றைப்
பூர்த்தி செய்ய பொதுக் கல்வி மற்றும் அறிவொளியூட்டும் முறையிலும் திரைப்படம், பத்திரிகை
, வானொலி, தொலைக்காட்சி ஆகிய துறைகளிலும் முதலீடு செய்வதை இடையறாது அதிகப்படுத்த வேண்டும்,
புதிய நாடக மன்றங்கள், நூலகங்கள், கலாச்சார மாளிகைகள் போன்றவற்றைக் கட்ட வேண்டும்.
இவையனைத்தும் சமூக உடைமையை ஆதாரமாகக் கொண்டு விஞ்ஞான-
தொழில் நுட்ப முன்னேற்றத்தின் சாதனை களைக் கண்டிப்பாகப் பயன்படுத்தி மக்களின் கூட்டு
உழைப் பால் தோற்றுவிக்கப்படலாம், தோற்றுவிக்கப்பட்டு வரு கின்றன. குறிப்பாக விஞ்ஞானம்
மற்றும் தொழில் நுட்பத் தின் வளர்ச்சி தான் சோஷலிச நோக்கங்களுக்கேற்ப உற்பத்தி யைப்
பரவலாக்கி மேம்படுத்தவும் உழைப்பின் உற்பத்தித் திறனின் இடையறாத வளர்ச்சிக்கு வகை செய்யவும்
சமு தாயத்தின் செல்வத்தை அதிகரிக்கவும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும் தேவையான
வாய்ப்புகளை அளிக் கிறது.
இதிலிருந்து, சமுதாயத்தின் உறுப்பினர்கள் அனைவரின்
இடையறாது அதிகரித்து வரும் பொருளாயத மற்றும் ஆன்மீகத் தேவைகளை முற்றிலுமாகப் பூர்த்தி
செய்யும் நோக்கங்களுடன், கூட்டு உழைப்பு மற்றும் முற்போக்குத் தொழில்நுட்பத் தின் அடிப்படையில்
உற்பத்தியை இடையறாது வளர்ப்பதுதான் சோஷலிசத்தின் அடிப்படை பொருளாதார விதியாகும்.
இந்த விதியில் சோஷலிச உற்பத்தியின் முக்கிய நோக்க
மும் இதை அடையும் முறையும் வெளிப்படுகின்றன. அதனால் தான் இது அடிப்படை விதி எனப்படுகிறது.
சோ ஷலிசத்தின் மற்ற பொருளாதார விதிகளின் செயல் பாடு-இதைப் பற்றி அடுத்த பகுதிகளில்
பார்க்கலாம்-இறுதியில் சோஷ லிசத்தின் அடிப்படை பொருளாதார விதியால் முன் நிர்ண யிக்கப்படுகிறது.
முதலாளித்துவத்திலும் கூட பொருளாயத மற்றும் ஆன்
மீக நலன் கள் உற்பத்தி செய்யப்படுகின்றன, இவற்றின் உபயோகம் மொத்தத்தில் அதிகரித்து
வருகிறது. ஆனால் முதலாளித்துவ மற்றும் சோஷலிச உற்பத்தியின் நோக்கங் களை ஒப்பிட்டால்
அவற்றின் கோட்பாட்டு ரீதியான வேறு பாட்டை உணர்வது கடினமல்ல. முதலாளித்துவ உற்பத்தி
லாபம் அடைவதை நோக்கமாகக் கொண்டது, உபயோக மதிப்புக்களைத் தோற்றுவிப்பதானது இதற்கான சாதன
மாகத்தான் இருக்கிறது. சோஷலிச உற்பத்திக்கு மக்களது பொருளாயத மற்றும் ஆன்மீக தரத்தின்
வளர்ச்சி முக்கிய மான, மையக் கடமையாகும்.
“சமூக விஞ்ஞானம்
முன்னேற்றப் பதிப்பகம்-
1985”
No comments:
Post a Comment