-எஸ்.இல்யீன், அ.மொத்திலோவ்
முன்னேற்றப் பதிப்பகம் - மாஸ்கோ- 1986
சோவியத் யூனியனில் நடைபெற்ற சோஷலிசத் தொழிற் துறைமயமாக்கலின்
முக்கிய சிறப்பியல்புகளில் ஒன்று நாட்டின் எல்லா தேசியக் குடியரசுகளிலும் பிரதேசங்களிலும்
நவீன தொழிற்துறை ஏற்படுத்தப்பட்டதாகும். இது மக்களினங்களுக்கு இடையிலான பொருளாதார சமமின்மையை
அகற்றுவதில் பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. முன்னர் பொருளாதார, கலாசார
ரீதியாகப் பின்தங்கியிருந்த மத்திய ஆசிய, சைபீரிய, தொலைக் கிழக்கு மக்களினத்தவரும்
ஜாரிச ருஷ்யாவில் முதலாளித்துவத்திற்கு முந்தைய உறவுகள் ஆதிக்கம் செலுத்திய மற்ற இடங்களில்
இருந்த மக் களினத்தவரும் இதன் அடிப்படையில் முதலாளித்துவ வளர்ச்சிக் கட்டத்தைத் தவிர்த்து
நேரடியாக சோஷலிசத் திற்கு வந்தனர்.
சோவியத் நாட்டின் தனிப்பட்ட குடியரசுகள், பிர தேசங்களின்
பொருளாதார, சமூக வளர்ச்சியில் ஆண் டாண்டு காலமாக இருந்து வந்த பிளவுகளை அகற்று வதில்,
குறிப்பாக முன்னர் ஜாரிச ருஷ்யாவைப் பெரிதும் சார்ந்த நிலையிலிருந்த பின்தங்கிய வட்டங்களின்
வளர்ச்சி யின்மையை அகற்றுவதில் சோவியத் மக்கள் அடைந்த வெற்றிகளை இன்று உலகம் முழுவதும்
அறியும். இப்பின் தங்கிய நிலையை அகற்றும் பொருட்டு பல சோவியத் குடியரசுகள் 10 - 15
ஆண்டுகளில் சில நூற்றாண்டுகளின் வளர்ச்சிப் பாதையைக் கடக்க வேண்டியிருந்தது. இன்று
எல்லா குடியரசுகளிலும் உயர் வளர்ச்சியடைந்த தொழிற் துறையும் விவசாயத்துறையும் உள்ளன.
நாடு தழுவிய பொருளாதார வளர்ச்சி வேகங்களை விட, பின்தங்கிய குடியரசுகளின் வளர்ச்சி வேகங்கள்
அதிகமாக இருந்ததன் மூலம் பொருளாதார சமத்துவத்திற்கு வழிகோலப்பட் டது.
உதாரணமாக, 1922 முதல் 1982 வரையிலான காலகட்டத்தில்
சோவியத் நாட்டின் பொருளாதார உற்பத்தி 537 மடங்கு உயர்ந்தது என்றால் இது கஸாக் சோவியத்
சோஷலிசக் குடியரசில் 938 மடங்கும் தாஜிக் சோவியத் சோஷலிசக் குடியரசில் 898 மடங்கும்
கிர் கிஸிய சோவியத் சோஷலிசக் குடியரசில் 712 மடங்கும் அதிகரித்தது. எங்கே குலமரபு அமைப்பு
ஆதிக்கம் செலுத்தியதோ, எங்கே அறியாமையும் இருளும் மண்டிக் கிடந்தனவோ, எங்கே ஜாரிச கொடுங்கோன்மையால்
மக்களின் பல நூற்றாண்டு கால கலாசாரம் மிதித்து நாசமாக்கப்பட்டதோ அங்கே முற்போக்கான
கீழைய மக்களினங்கள் வசிக்கின்றனர்.
வரலாற்று ரீதியாகக் குறுகிய காலகட்டத்திலேயே முந்தைய
தேசிய பின்தங்கிய வட்டங்களின் மக்கள் சமூக மற்றும் கலாசார வளர்ச்சியின் சிகரத்திற்கு
வந்தார் கள். புரட்சிக்கு முன் மத்திய ஆசியாவிலும் கஸாக்ஸ் தானிலும் 9 - 49 வயதுப்
பிரிவினரிடையே கல்வி கற் றோரின் எண்ணிக்கை 2-8%க்குக் குறைவாகவே இருந் தது. இங்கே ஒரு
உயர்கல்விக்கூடம் கூட இருக்கவில்லை. இன்று இங்குள்ள 126 உயர்கல்விக்கூடங்களில்
7,05,000 மாணவர்கள் பயிலுகின்றனர். சில வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நாடுகளை விட இக்குடியரசுகளில்
மக்கள் எண்ணிக்கையில் மாணவர்களின் பங்கு அதிக மானது. உதாரணமாக, இக்குறியீட்டில் உஸ்பெக்
குடியரசும் கஸாக் குடியரசும் இத்தாலி, கானடா, ஜெர்மன் சமஷ்டிக் குடியரசு, பிரான்ஸ்,
ஜப்பான் போன்ற நாடுகளை விஞ்சி நிற்கின்றன.
எல்லா மக்களினங்கள், தேசிய இனங்களுக்கும் நடைமுறை
சமத்துவத்தை வழங்கியதன் அடிப்படையில், சோஷலிசப் பொருளாதாரத்தை இடையறாது வளர்த் ததன்
அடிப்படையில் சோவியத் நாட்டில் ஒரே பொது தேசியப் பொருளாதார இணையம் தோற்றுவிக்கப்பட்
டுள்ளது. இது சோவியத் மக்களினம் எனும் ஒரு புதிய வரலாற்று மக்கள் கூட்டு உருவாவதற்கான
பொருளாதார அடிப்படையாகத் திகழ்ந்தது.
சமுதாய வாழ்க்கையின் வடிவங்களைப் புரட்சிகரமாக மாற்றியமைப்பதன்
அடிப்படையில் மட்டுமே தேசிய இனப் பிரச்சினைக்கு உண்மையான, அடிப்படையான தீர்வைக் காண
முடியுமென யதார்த்த சோஷலிசத்தின் அனுபவம் காட்டுகிறது.
No comments:
Post a Comment