-எஸ்.இல்யீன், அ.மொத்திலோவ்
முன்னேற்றப் பதிப்பகம் - மாஸ்கோ- 1986
உற்பத்திச் சாதனங்களின் மீதான சோஷலிச சொத்துடைமை
ஆதிக்கம் செலுத்தும் சூழ்நிலைகளில் பொருளாதார விதிகளின் சாரமும் செயல்படும் தன்மையும்
அடிப்படை ரீதியாக மாற்றமடைகின்றன. தன் பொருளாதார உறவுகளைத் தானே ஒழுங்கமைக்கும் வாய்ப்பு,
உற்பத்தியை ஒரே லட்சியத்திற்கு உட்படுத்தும் வாய்ப்பு சமு தாயத்திற்குக் கிட்டுகிறது.
சமுதாயத்தில் உள்ள அனைவருக்கும் நல்ல வாழ்க்கைத் தரத்தை அளிப்பதும் ஒவ்வொரு தனி நபரின்
சுதந்திரமான, பன்முக வளர்ச்சியும்தான் சோஷலிச உற்பத்தி வளர்ச்சியின் லட்சியமாகும்.
இது உண்மையிலேயே மனிதாபிமானம் மிக்க, உயர்ந்த லட்சியமாகும்.
இது சோஷலிசத்தின் பொருளாதார அமைப்பாலும், இதில்
செயல்படும் அடிப்படைப் பொருளாதார விதியாலும் நேரடியாக நிர்ணயிக்கப்படுகிறது. இந்த விதி
முதலாளித் துவத்தில் நிலவும் அடிப்படைப் பொருளாதார விதி யிலிருந்து கோட்பாட்டு ரீதியாக
மாறுபடுகிறது. தனிச் சொத்துடைமையின் கீழ் லாபம் பெறுவதுதான் உற்பத்தி வளர்ச்சியின்
நோக்கம் என்றால், பொதுச் சொத்துடைமை யின் கீழ் உழைக்கும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை
உயர்த்தி, தனிநபரின் பன்முக வளர்ச்சிக்கான சூழ்நிலை களைத் தோற்றுவிப்பதுதான்.
உற்பத்தி வளர்ச்சியின் லட்சியமாகும். இறுதி லட்சியத்தை
அடையும் முறைகளும் சொத்துடைமை வடிவத்தைத்தான் பொறுத் துள்ளன. முதலாளித்துவத் தனிச்
சொத்துடைமையின் கீழ் உழைப்பாளிகளைச் சுரண்டுவதன் மூலம் உற்பத்தி அதிகரிக்கவும், லாபம்
கூடவும் வழி செய்யப்படுகிறது, இவர்கள் எவ்வளவுக்கெவ்வளவு உடலுழைப்பையும் மூளையுழைப்பையும்
செலவிடுகின்றார்களோ, இவர்களின் வாழ்க்கைத் தரம் எவ்வளவுக்கெவ்வளவுக் குறை வானதோ, இவர்களை
ஒடுக்கும் முதலாளிகளின் வல்ல மையும் செல்வமும் அவ்வளவுக்கவ்வளவுக் கூடும்.
பொதுச் சொத்துடைமையின் கீழ் உற்பத்தி அதிகரிப்பும்,
இது மேம்படுத்தப்படுவதும் உழைப்பாளிகளின் நலன்களுக்காக மட்டுமே செய்யப்படுகின்றன, இவர்களின்
உழைப்பு எவ்வளவுக்கெவ்வளவுப் பயன் மிக்கதோ அவ்வளவுக்கவ் வளவு இவர்களுடைய வாழ்க்கைத்
தரம் உயர்வானதா யிருக்கும்.
பொதுச் சொத்துடைமையால் இணைக்கப்பட்டுள்ள சோஷலிச
சமுதாய உழைப்பாளிகளின் அடிப்படை நலன்களின் பொது அம்சம் இதில்தான் அடங்கியுள்ளது. இதுதான்
இவர்களின் நடவடிக்கைகள், நாட்டங்களின் ஒற்றுமைக்கு வழிகோலுகிறது. இதன் அடிப்படையில்
உழைப்பை ஊக்குவிக்கும் புதிய காரணிகள், உந்து சக்திகள் தோன்றுகின்றன. தனது முக்கிய
சமுதாயக் கடமையைப் பற்றிய உயரிய உணர்வு, எல்லோரின் வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்துவதற்கான
ஒரே மூல ஊற்று என்ற வகையில் சமுதாய செல்வம் இடையறாது வளர்வதற்காக உழைப்பின் உற்பத்தித்
திறனை உயர்த்தும் நாட்டம் ஆகியவைதான் இந்த உந்து சக்திகளாகும். அதே நேரத்தில் சோஷலிச
உற்பத்தி மேற்கொண்டு விரைவாக வளர்ச்சியடையவும் சோஷலிசப் பொருளா தாரத்தின் மலர்ச்சிக்கும்
அவசியமான பொருளாதார முன்நிபந்தனைகளில் ஒன்று என்ற வகையில், உழைப்பாளிகளின் வாழ்க்கைத்
தரத்தை உயர்த்துவதில் சமுதா யம் முழுவதும் அக்கறை கொண்டுள்ளது. சோஷலிச அமைப்பின் உண்மையான
மனிதாபிமானம் இதில் வெளிப்படுகிறது. இங்கே தனிநபரின் தேவைகளைப் பூர்த்தி செய்வதென்பது
சமுதாய உற்பத்தியின் இயல் பான, புறவய ரீதியான லட்சியமாகிறது. பொருளாயத செல்வங்களையும்
ஆன்மீக மதிப்புகளையும் தோற்றுவிக் கும் உழைப்பாளிகள் வரலாற்றிலேயே முதன்முதலாக மனித
சமுதாய முன்னேற்றத்தின் பலன்களை முழுமை யாக அனுபவிக்கும் வாய்ப்பைப் பெற்றனர்.
மக்களின் பொருளாயத மற்றும் ஆன்மீகத் தேவை களைப்
பூர்த்தி செய்வதற்கான வாய்ப்புகளை வைத்து மட்டும் சோஷலிசத்தில் உழைப்பாளிகளின் வாழ்க்கைத்
தரம் நிர்ணயிக்கப்படுவதில்லை. உழைப்பிற்கு உள்ள உத்திரவாதப்படுத்தப்பட்ட உரிமையின்
அடிப்படையில் நாளைய தினத்தின் மீது உழைப்பாளிகளுக்கு உள்ள நம்பிக்கை, கல்வி பெறும்
வாய்ப்புகள், எல்லா உழைப் பாளிகளின் ஆக்கபூர்வமான, ஆழ்ந்த உட்பொருளை யுடைய உழைப்பு
மற்றும் சமூக நடவடிக்கைக்கான நிலைமைகளை ஏற்படுத்தக் கூடிய சோஷலிச சமுதாயச் சூழல் ஆகியவையெல்லாம்
வாழ்க்கைத் தரத்தில் அடங்கியுள்ளன.
No comments:
Post a Comment