Monday 27 May 2019

3. சோஷலிச பொருளாதாரத்தைத் தோற்றுவிப்பதற்கான திறவுகோல்


-எஸ்.இல்யீன், அ.மொத்திலோவ்
முன்னேற்றப் பதிப்பகம் - மாஸ்கோ- 1986

பின்தங்கிய, விவசாயப் பொருளாதார சூழ்நிலைகளில் சோஷலிச மாற்றங்களை மேற்கொள்ளும் நாடுகளின் முன் பெருவீத இயந்திரத் தொழிற்துறையை - இது விவசாயத் துறையையும் மாற்றியமைக்க வல்லதாய் இருக்க வேண்டும் - தோற்றுவிக்கும் கடமை முன்நிற் கிறது. இதற்கு முன்னரே தொழிற்துறை கட்டத்தைக் கடந்துள்ள நாடுகளைப் பொறுத்த மட்டில், முதலாளித் துவப் பொருளாதாரத்தால் தோன்றிய பொருத்தமின்மை களை (ஒரு சில துறைகள் மற்ற துறைகளுக்குப் பங்கமேற் படுத்தும் வகையில் ஒரு தலைப்பட்சமாக வளருவது, பல துறைகள் இயந்திரமயப்படுத்தப்படாமை, இத்தியாதி) அகற்றுவது முக்கியக் கடமையாகும். இச்சந்தர்ப் பங்களில் சாதாரணமாக, தொழிற்துறை உற்பத்தி யின் பல்வேறு துறைகளையும் விவேகமாக ஒழுங்கமைக் கும் அவசியம் ஏற்படுகிறது, நவீன இயந்திரத் தொழில் நுட்ப அடிப்படையில் பல உற்பத்தித் துறைகளை மாற்றி யமைக்க வேண்டியுள்ளது.

தொழிற்துறைமயப்படுத்தலின் தன்மையும் சிறப்பியல்பு களும் எந்த சமூக-பொருளாதார சூழ்நிலைகளில் இது நடத்தப்படுகிறது என்பதைப் பொறுத்துள்ளது, அதுவும் குறிப்பாக உற்பத்திச் சாதனங்களின் மீது எம்மாதிரி யான சொத்துடைமை வடிவம் நிலவுகிறது என்பதைப் பொறுத்துள்ளது என்ற மார்க்சிய-லெனினியக் கருத்து நிலை சரியானதென சோவியத் யூனியன், மற்ற சோஷலிச நாடுகளின் அனுபவம் காட்டியுள்ளது. உற்பத்திச் சாதனங் களின் மீதான பொதுச் சொத்துடைமையின் அடிப் படையில் நிறைவேற்றப்படும் சோஷலிசத் தொழிற்துறை மயமாக்கல் தன் தன்மை , மூல ஊற்றுகள், வேகம், அளவு, சமூக-பொருளாதாரப் பின்விளைவுகள், ஆகியவற்றில் முதலாளித்துவத் தொழிற்துறைமயமாக்கலிலிருந்து கோட்பாட்டு ரீதியாக வேறுபடுகிறது.

முதலாளித்துவத் தொழிற்துறைமயமாக்கல் முதலாளித் துவப் பொருளாதாரத்திற்கே உரித்தான தன்னிச்சையான விதிகளின் செயற்பாட்டின் அடிப்படையில் நடக்கிறது. உற்பத்தி இயக்கத்தின் சுழற்சித் தன்மை இதிலிருந்துதான் வருகிறது, இது பொருளாதார வளர்ச்சியின் ஒப்பீட்டள் வில் குறைவான வேகங்களுக்கு இட்டுச் செல்கிறது. பெரும்பாலான முதலாளித்துவ நாடுகளில் தொழிற்துறை மயமாக்கும் போக்கு 100 -200 ஆண்டுகள் நீடித்தது. சோவியத் யூனியனில் இது பெரும்பாலும் 10-12 ஆண்டு களில் முடிவடைந்தது. இது சோஷலிசப் பொருளாதாரத் தின் மேம்பாட்டிற்குச் சான்று பகர்கிறது.

சோவியத் யூனியனில் தொழிற்துறைமயப்படுத்தலுக்கு சிறப்பியல்புகள் இருந்தன. அன்றைய தினம் இந்நாடு மட்டும்தான் உலகிலேயே ஒரே சோஷலிச நாடாக இருந்ததும், பகை மனப்பாங்குள்ள முதலாளித்துவ அரசு கள் இதைச் சூழ்ந்திருந்ததும் இதற்குக் காரணமாகும். உலக ஏகாதிபத்திய மற்றும் உள்நாட்டு யுத்தங்களால் சீர்குலைக் கப்பட்டிருந்த பொருளாதாரம் பெரிதும் பின்தங்கியிருந்த சூழ்நிலையில் சோவியத் யூனியன் தொழிற்துறைமயப் படுத்தலைத் துவக்கியது. நிலக்கிழார்களும் முதலாளிகளும் ஆதிக்கம் செலுத்தியதால் நாட்டின் வளர்ச்சி மட்டம், தொழிற்துறை ரீதியாக வளர்ச்சியடைந்த முதலாளித்துவ வல்லரசுகளை விட பல பத்தாண்டுகள் பின் தங்கியிருந்த ஒரு சூழ்நிலையில் இந்த தொழிற்துறைமயப்படுத்தல் நடந்தது.

பல நூற்றாண்டுகளாக இருந்து வந்த நாட்டின் பின்தங்கிய நிலையை அகற்றவும் ஒரே சோஷலிசப் பொருளாதார அமைப்பைத் தோற்றுவிக்கவும் உயர்வான தொழிற்துறைமயப்படுத்தும் வேகங்கள் தேவைப்பட்டன. இந்த வேகப் பிரச்சினை குறிப்பாகக் கடுமையாக இருக்கக் காரணம், பொருளாதாரத்தில் லட்சக்கணக் கான சிறு விவசாயப் பண்ணைகள் இருந்ததாகும்; இதனால் முதலாளித்துவம் புனரெழுச்சி பெறுவதற்கான பொருளாதார அடித்தளமிருந்தது. சோஷலிசப் புரட்சி யின் வெற்றிகளைப் பலவீனப்படுத்தி அழிப்பதை நோக் கமாகக் கொண்ட முதலாளித்துவச் சக்திகள் நாட்டைச் சுற்றி இருந்ததும் இயன்ற அளவு விரைவாக தொழிற் துறைமயப்படுத்தும் கடமையை நிறைவேற்றக் கட்டளை யிட்டது. இந்த வேகங்களை அடைய எல்லா உள் சக்திகளையும் ஒன்றுதிரட்டுவது அவசியமாக இருந்தது.

கடினமான ஆண்டுகளில் சோவியத் மக்கள் மகத்தான சுய உணர்வையும் ஒற்றுமையையும் வீரத்தையும் வெளிப்படுத்தாமலிருந்தால் - சோவியத் யூனியனால் என்றுமே மாபெரும் தொழிற்துறை வல்லரசாகியிருக்க முடி யாது, பகைமையான முதலாளித்துவச் சக்திகளை எதிர்த்து நிற்கும் சோஷலிசக் கோட்டையாக மாறி யிருக்க முடியாது. அது மிகக் கடினமான நேரமாக இருந்தது, மிக அத்தியாவசியமான பொருட்கள் கூடப் பற்றாக்குறையாக இருந்தன. ஆனால் புதிய சமுதாயக் கட்டுமானத் திட்டத்தால் ஊக்குவிக்கப்பட்ட மக்கள் திரளினரின் மாபெரும் உற்சாகம் இந்த இடர்ப்பாடுகள் அனைத்தையும் கடந்தது.

1937ஆம் ஆண்டு வாக்கிலேயே, அதாவது தொழிற்துறைமயப்படுத்தல் துவங்கி 10 -12 ஆண்டுகளிலேயே சோவியத் தொழிற்துறை உற்பத்தி, பிரிட்டன், பிரான்ஸ், - ஜெர்மனி போன்ற தொழிற்துறை நாடுகளின் உற்பத்தியை விஞ்சி ஐரோப்பாவில் முதலிடத்திற்கும் உலகில் இரண்டாவது இடத்திற்கும் வந்தது. 1917இல் உலகத் தொழிற்துறை உற்பத்தியில் சோவியத் யூனியனின் பங்கு 3%க்குக் குறைவாக இருந்ததெனில், 1937இல் இது கிட்டத்தட்ட 10% ஆக உயர்ந்தது.

முதலாளித்துவத் தொழிற்துறைமயப்படுத்தலுக்கு மாறாக சோஷலிச தொழிற்துறைமயப்படுத்தலின் விளை வாக உழைக்கும் மக்கள் திரளினரின் வாழ்க்கை மற்றும் கலாசார நிலை உயரும். இதன் பயனாய் உழைப்பாளி களை வேலையில்லாத் திண்டாட்டத்தின் - இது முதலாளித் துவ நாடுகளின் தொழிற்துறை வளர்ச்சியோடு கூடப் பிறந்ததாகும் -கொடுமைகளிலிருந்து என்றென்றைக்குமாக விடுவிக்க முடிந்தது. தொழிற்துறை உற்பத்தி வளர்ச்சியின் அடிப்படையிலும், உழைப்பின் உற்பத்தித் திறன் உயர உயரவும் உழைப்பாளிகளின் வருமானங்கள் கூடின.

தொழிற்துறைமயப்படுத்தியதானது நாட்டின் பொரு ளாதாரச் சுதந்திரத்தை வலுப்படுத்தவும், தேசியப் பொருளாதாரத்தின் எல்லா துறைகளையும் தொழில்நுட்ப ரீதியாகப் புனரமைக்கவும், விவசாயத் துறையை புதிய, சோ ஷலிச அடிப்படைக்கு மாற்றவும் தேவையான பொருளாயத அடித்தளத்தைத் தோற்றுவித்தது. இது பொருளாதாரத் தின் தீர்மானகரமான துறையில் பொதுச் சொத்துடை மையைப் பலப்படுத்தியது, நகரத்தில் உள்ள முதலாளித் துவ அம்சங்களை அகற்றியது, தொழிற்துறையில் சோஷலிச அமைப்பு வெற்றி பெறவும் தொழிலாளி வர்க்கம் வளரவும் உதவியது, சமுதாயத்தில் இவ்வர்க் கத்தின் தலைமைப் பாத்திரம் வலுப்படவும் சோவியத் யூனியனின் பொருளாதார மற்றும் தற்காப்பு வல்லமை பலப்படவும் வழிகோலியது.

தொழிற்துறைமயப்படுத்தியதானது சோவியத் நாட்டின் எதிர்காலத்திற்கு பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்கியது. 1941 -1945ஆம் ஆண்டுகளில் நாஜி ஜெர் மானிய ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக நடந்த மாபெ ரும் தேசபக்த யுத்தத்தில் சோவியத் மக்கள் வெற்றி பெற்றதற்கான முக்கியக் காரணிகளில் ஒன்று சோஷ லிசப் பொருளாதாரத்தின் வெற்றிகரமான வளர்ச்சி யாகும். இந்த யுத்தத்திற்குப் பிந்தைய ஆண்டுகளில் சோஷலிசத் தொழிற்துறையின் வளர்ச்சியும் மேம்பாடும் சோவியத் அரசின் பொருளாதார வல்லமையும் தற் காப்புத் திறனும் மேலும் வலுப்பட வழிகோலின.

சோவியத் யூனியனின் சோஷலிசத் தொழிற்துறைமயப் படுத்தலுக்கு பெரும் சர்வதேச முக்கியத்துவம் இருந்தது. இது சோஷலிசப் பொருளாதாரத்தின் மேம்பாடுகளை உலகம் முழுவதற்கும் காட்டியது, தேசியப் பொருளா தாரத்தை சோஷலிச ரீதியாக மாற்றியமைப்பது பற்றிய முதல் அனுபவத்தை மனிதகுலத்திற்கு அளித்தது. சோஷ லிச மாற்றங்களை நிறைவேற்றும் நாடுகள் தத்தம் நாட்டின் திட்டவட்டமான சிறப்பியல்புகளையும் கவனத் தில் கொண்டு இந்த அனுபவத்தை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்துகின்றன.

No comments:

Post a Comment