-எஸ்.இல்யீன், அ.மொத்திலோவ்
முன்னேற்றப் பதிப்பகம் - மாஸ்கோ- 1986
விவசாயத்துறையைக் கூட்டுறவுமயப்படுத்துவது சமுதா
யத்தை சோஷலிச ரீதியாக மாற்றியமைப்பதற்கு பெரும் வரலாற்று முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது.
மாபெ ரும் அக்டோபர் சோஷலிசப் புரட்சி வெற்றி பெற்ற தால்தான் சோவியத் நாட்டில் இதன்
நிறைவேற்றம் சாத்தியமாயிற்று. இப்புரட்சி ஆலைகளையும் தொழிற் சாலைகளையும் முதலாளிகளிடமிருந்து
பிடுங்கி இவற்றை மக்களின் சொத்தாக்கியதோடு கூட-அதாவது முதலாளித்துவ சொத்துடைமையை தேசியமயப்படுத்தியதோடு
கூட - நிலக்கிழார்களின் தனி நிலவுடைமையையும் ஒழித்துக் கட்டியது. சோவியத் ஆட்சியின்
முதல் ஆண்டு களில், முன்னர் பெரும் நிலக்கிழார்களுக்கும் குலாக்குகளுக் கும் (அதாவது
கூலியுழைப்பைப் பயன்படுத்திய பணக் கார விவசாயிகளுக்கும்) சொந்தமாயிருந்த நிலம் ஏழை
விவசாயிகளுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டது.
இதனால் நடுத்தர விவசாயிகள் தோன்றினார்கள் (அவர்கள்
கஷ்டப்பட்டு வாழ்க்கை நடத்திய நிலை மாறியது), இவர்கள்தான் பெரும்பாலான தானியத்தையும்
மற்ற விவசாயப் பொருட்களையும் உற்பத்தி செய்யத் துவங்கினார்கள். ஆனால் அதே நேரத்தில்
கிராமம் வர்க்க ரீதியாகப் பாகுபாடு அடைவது தொடர்ந்தது - மீண்டும் மீண்டும் சிறு பண்ட
உற்பத்தி முதலாளித்துவ அம்சங்களைத் தோற்றுவித்தது.
இதிலிருந்த மீள ஒரேயொரு வழிதான் இருந்தது. இதை வி.
இ. லெனின் தன் உலகப் புகழ் வாய்ந்த கூட்டுறவுத் திட்டத்தில் சுட்டிக் காட்டினார். படிப்படியாக,
தாமாகவே முன் வந்து விவசாயிகள் தனித்தனியான துண்டு நில விவசாயத்தை விட்டு விட்டு தோழமை
ரீதியான உற்பத்திக் கூட்டமைப்புகளுக்கு, உழைப்பின் கூட்டுறவிற்கு மாற வேண்டுமென இத்திட்டம்
முன் னனுமானித்தது. - இது ஒரு கடினமான கடமையாக இருந்தது. ஏனெனில் ஆண்டாண்டு காலமாக
விவசாயிகள் சின்னஞ்சிறு துண்டு நிலங்களில்தான் விவசாயம் நடத்தி வந்தனர். கூட்டுற விற்கு
மாற, இத்துண்டு நிலங்களை ஒன்றிணைக்க வேண்டியிருந்தது. ஆண்டாண்டு காலமாக விவசாயிகள்
தனித்தனியே தத்தம் குடும்பங்களோடு வாழ பழகியிருந்தனர். கூட்டுறவுப் பாதைக்கு இவர்கள்
வர, ஒரே கூட்டுறவுப் பண் ணையில் பலர் ஒன்றுசேர்ந்து உழைப்பதன் மேம்பாடுகளை இவர்கள்
உணருமாறு செய்ய வேண்டியிருந்தது.
ஆண்டாண்டு காலமாக விவசாயிகள் உற்பத்திச் சாதனங்களின்
(இவை மிக எளிய கருவிகளாயும் கால் நடைகளாயும் இருந்த போதிலும்) சொந்தக்காரர்களாக' இருக்க
முயன்றனர். உற்பத்திச் சாதனங்களை ஒன்றிணைத்து இவற்றைப் பொதுச் சொத்தாக்கினால் இவற்றை
அதிகப் பயன் மிகு வகையில் உபயோகிக்க முடியும், நவீன இயந்திரத் தொழில்நுட்ப அடிப்படையில்
உற்பத்தியை நடத்த முடியும் என்று இவர்களை நம்பச் செய்ய வேண்டியிருந் தது. ஆண்டாண்டு
காலமாக விவசாயிகள் தாம் உற்பத்தி செய்தவற்றைத் தமக்குச் சொந்தமாக வைத் திருப்பதை புனிதமானதாகக்
கருதி வந்துள்ளனர். கூட்டுப் பண்ணையின் உற்பத்திப் பெருக்கம், முன்னர் சிறு துண்டு
நிலங்களில் தனித்தனியே பெற்று வந்த விளைச்சலைப் பன்மடங்கு விஞ்சி நிற்கும் என்று அவர்
களை இப்போது நம்பச் செய்ய வேண்டியிருந்தது. - இவ்வாறாக பொருளாதாரத்திலும் சொத்துடைமை
உறவுகளிலும் மட்டுமின்றி கோடானுகோடி விவசாயிகளின் மனநிலையிலும் அடிப்படை மாற்றம் ஏற்பட
வேண்டி யிருந்தது. இவர்கள் தமது முந்தைய கருத்துக்களையும் பழக்கவழக்கங்களையும் விட்டொழித்து
புதிய வாழ்க்கைப் பாதைக்கு வர வேண்டியிருந்தது.
இந்த மாற்றம் நிகழ்ந்தது, ஏனெனில் ஏழை மற்றும் நடுத்தர
விவசாயி கள் தொழிலாளி வர்க்கத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தனர், கம்யூனிஸ்டுக்
கட்சியை நம்பினர், சோவியத் அரசின் கொள்கைக்கு தீவிர ஆதரவளித்தனர். சோஷலிசத் தொழிற்துறைதான்
கூட்டுறவுமயப்படுத்தலின் பொருளாயத அடிப்படையாகத் திகழ்ந்தது. இது கிராமத் திற்கு இயந்திரங்கள்,
டிராக்டர்களை அனுப்பியது. இது தவிர தொழிலாளி வர்க்கத்தின் தலைசிறந்த, வர்க்க உணர்வுள்ள
பிரதிநிதிகள் கிராமத்தில் கூட்டுறவுக் கருத்துக் களைப் பிரச்சாரம் செய்தனர், கூட்டுப்
பண்ணை களை ஏற்படுத்தும் பணிகளில் ஈடுபட்டனர். தொழிலாளர், விவசாயிகளின் அரசு, விவசாய
உற்பத்திக் கூட்டுறவு களுக்கு சர்வாம்ச பொருளாதார, நிதி ஆதரவு வழங்கி யது. - சுயவிருப்பம்,
சொல்லி நம்ப வைத்தல், உதாரணங்கள் ஆகிய கோட்பாடுகளைக் - கண்டிப்புடன் பின்பற்றிய சோவியத்
யூனியன் கம்யூனிஸ்டுக் கட்சியும் சோவியத் அரசும், விவசாயிகள் மிக எளிய கூட்டுறவு வடிவங்களிலிருந்து
சிக்கலான வடிவங்களுக்கு, சப்ளை-விற்பனைக் கூட்டுறவுகளிலிருந்து உற்பத்திக் கூட்டுறவுகளுக்கு
மாற உதவின.
சோவியத்யூனியனில் கூட்டுப் பண்ணைகள் இப்படிப் பட்ட
உற்பத்திக் கூட்டுறவுகளாக இருந்தன. கூட்டுப் பண்ணைகள் பெரும் பாதையைக் கடந்து வந்துள்ளன.
இன்று இவை வளர்ச்சியடைந்த சோஷலிச சமுதாயத்தில் முக்கிய இடத்தை வகிக்கின்றன. இப்பாதையில்
வெற்றி களுடன் கூட பல இடர்ப்பாடுகளும் இருந்தன. இவை பெரும்பாலும் கூட்டுப் பண்ணைகள்
அரசுடனான சரியான பொருளாதார பரஸ்பர உறவுகளை உருவாக்கு வது, கூட்டுப் பண்ணைகளில் உழைப்பிற்கான
ஊதிய முறை, வீட்டுத் தோட்டங்களின் பாத்திரத்தையும் இடத் தையும் நிலைநாட்டுவது போன்றவற்றுடன்
தொடர் புடையவையாக இருந்தன. ஆனால் மிக முக்கியமானது ஆரம்பத்திலேயே நிறைவேற்றப்பட்டது
- கூட்டுப் பண்ணை அமைப்பு விவசாயிகளை சோஷலிசப் பாதைக்கு இட்டு வந்தது, இதன் வெற்றியையடுத்து
சோஷலிச அமைப்பு நாட்டின் தேசியப் பொருளாதாரம் முழுவதும் பரவியது. - விவசாயத் துறையை
சோஷலிச ரீதியாக மாற்றி யமைத்து வளர்த்ததில் சோவியத் நாட்டின் அனுபவம் பெரும் சர்வதேச
முக்கியத்துவம் உடையதாயிருந்தது.
மற்ற சோஷலிச நாடுகள் தத்தம் நாடுகளுக்கேற்ப இந்த
அனுபவத்தைப் பயன்படுத்துகின்றன. இது நிலத்தின் மீதான பொதுச் சொத்துடைமையின் மேம்பாடுகளையும்
கூட்டுப் பண்ணையின் அனுகூலங்களையும் வளர்முக நாடுகளின் விவசாயிகளுக்கும் காட்டுகிறது.
இன்றும் கூட காலனியாதிக்கச் சார்பு நிலையிலிருந்து விடுதலை யடைந்த பல நாடுகளில் அங்கு
மக்களில் பெரும்பான்மை யினர் விவசாயிகள் - விவசாய உற்பத்தியின் வளர்ச்சி பிரச்சினை
கடுமையாக நிற்கிறது. நிலப்பிரபுத்துவ மிச்ச சொச்சங்களிலிருந்து விடுபடுவது என்பது இந்நாடுகளில்
சமூக முன்னேற்றத்திற்கான கண்டிப்பான நிபந்தனை யாகும். சிறு விவசாய உற்பத்தியை பெருவீத
உற்பத்தி யாக மாற்ற இரண்டு பாதைகள் உள்ளன என்று வரலாற்று அனுபவம் காட்டுகிறது. ஒரு
பாதை முதலாளித்துவப் பாதையாகும்.
இதில் பெரும் முதலாளித் துவப் பண்ணைகள் தோற்றுவிக்கப்படுகின்றன,
விவ சாயிகள், விவசாய கூலித் தொழிலாளர்களாகவோ அல்லது சம்பிரதாயப்படியான சிறு மற்றும்
நடுத்தரப் பண்ணை விவசாயிகளாகவோ மாறுகின்றனர், சக்தி மிக்க ஏகபோகங்களின் போட்டிச் சுமையிலிருந்து
தப்பிப் பிழைப்பதற்காக சொல்லி மாளா இன்னல்களுக்கு ஆளா கின்றனர். இது திவாலடைந்து வறுமையடையும்
பாதை, அடிமைத் தளையில் விழும் பாதை, எதிர்கால நம்பிக்கை யற்ற பாதை.
மறு பாதை சோஷலிசப் பாதையாகும். இதில் உற்பத்திச்
சாதனங்களின் மீதான பொதுவுடைமையின் (கூட்டு) அடிப்படையில் நல்ல லாபகரமான, பெரிதும் இயந்திரமயப்படுத்தப்பட்ட
பெரிய விவசாயப் பண்ணை களும் அரசுப் பண்ணைகளும் உருவாக்கப்படுகின்றன. இது விவசாயிகளின்
வாழ்க்கைத் தரத்தையும் கலா சாரத்தையும் உயர்த்தும் பாதை, விவசாய உழைப்பை தொழிற்துறை
உழைப்பின் ஒரு வகையாக மாற்றி, சோஷலிச சமுதாயத்தில் வர்க்கங்களுக்கு இடையிலான வேறுபாடுகளைப்
படிப்படியாக அகற்றும் பாதை.
சோஷலிசத் திசையமைவு நாடுகளும் விவசாயத் துறையை சோஷலிச
மாதிரியில் மாற்றியமைக்கும் பாதையில் செல்கின்றன. விவசாயிகளை புதிய சமூக உறவுகளுக்குப்
பழக்கப்பத்துவதை நோக்கமாகக் கொண்ட விவசாய சீர்திருத்தங்கள் இந்நாடுகளில் நடத்தப்படுகின்றன.
ஆனால் இவ்வழியில் உள்ள பெரும் இடர்ப்பாடுகளை அகற்ற வேண்டி வருகிறது. ஏனெனில் இந்நாடுகளில்
இன்று வரை, பாரம்பரிய சாகுபடி முறைகளின் அடிப் படையிலான அரை இயற்கை விவசாய முறை மேலோங்கி
நிற்கிறது, குலமரபு, தந்தைவழி உறவுகள், அடிமை யுடைமை மற்றும் நிலப்பிரபுத்துவ உறவுகளின்
எச்சங்கள் நிலவுகின்றன. அதே நேரத்தில் கிராமங்களில் நடை பெறும் வர்க்கப் பாகுபாட்டின்
பயனாய் பணக்காரப் பிரிவு ஒன்று இடையறாமல் உருவாகிறது, இது முற் போக்கான விவசாய மாற்றங்களுக்கு
எதிராக குரல் எழுப்புகிறது.
பல வளர்முக நாடுகள் இந்த இடர்ப்பாடுகளை அகற்றி,
விவசாயத் துறையை கூட்டுறவுமயப்படுத்துவதில் கணிசமான வெற்றிகளை அடைந்துள்ளன.
No comments:
Post a Comment