Tuesday 17 April 2018

07 உழைப்புப் பிரிவினை


--எஸ்.இல்யீன், அ.மொத்திலோவ்

உழைப்பு நடவடிக்கையின் போது மக்கள் தேசியப் பொருளாதாரத்தின் பல்வேறு ஆலைகள், துறைகளில் பிரிக்கப்படுகின்றனர். இரண்டு விதமான உழைப்புப் பிரிவினைகள் உள்ளன: முதலாவது, சமுதாயத்தின் உள்ளே நிலவுவது (சமூக உழைப்புப் பிரிவினை ), இரண்டாவது, குறிப்பிட்ட தொழிற்சாலையினுள் நிலவுவது (தனி உழைப்புப் பிரிவினை). உற்பத்தித் துறைகள் (உதாரணமாக, தொழிற்துறை, விவசாயத்துறை), மற்றும் இதன் வகைகள், துணைப் பிரிவுகள் (உதாரணமாக, கால்நடை வளர்ப்பு மற்றும் பயிர்த்தொழில், "தோண்டி யெடுக்கும் மற்றும் பதப்படுத்தும் தொழிற்துறை) ஆகியவற்றிலான உழைப்புப் பிரிவினைகள் சமுதாயத்தின் உள் உழைப்புப் பிரிவினைகளாகும். ஒரு தொழிற் சாலையின் உள் உழைப்புப் பிரிவினை பல்வேறு வேலைப் பிரிவுகள், வேலையிடங்களில் பணி புரிபவர் சுளுக்கிடையிலான உழைப்புப் பிரிவினையாகும், இதில் தொழிலாளர்கள் மற்றும் பொறியியல், தொழில்நுட்ப பணியாளர்களுக்கு இடையிலான வேலைகளின் பிரிவினைஅடங்கும்.
சமூக உழைப்புப் பிரிவினை மட்டம் உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சி மட்டத்தின் மிக முக்கியக் குறியீடு களில் ஒன்றாகும். மனிதகுலத்தின் ஆரம்பக் கட்டத்தில் உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சி பட்டம் மிகவும் தாழ்வான நிலையில் இருந்த போது உழைப்புப் பிரிவினையின் மிக எளிய வடிவம் - பால் மற்றும் வயதின் அடிப்படையிலான இயற்கையான உழைப்புப் பிரிவினை - தோன்றியது. மூன்று பெரும் சமூக உழைப்புப் பிரிவினை கள் (கால் நடை வளர்ப்பு குலங்கள் பிரிந்தது, பயிர்த்தொழிலிலிருந்து கைத்தொழில் பிரிந்தது. வர்த்தகம் தோன்றியது ஆகியவை) உற்பத்திச் சக்திகள் மற்றும் உழைப்பின் உற்பத்தித் திறனின் வளர்ச்சிக்கும், தனியுடைமை தோன்றவும், சமுதாயம் வர்க்கங்களாகப் பிரிக்கப்படவும் பெரிதும் உதவின.
நவீன பெரும் இயந்திர உற்பத்திச் சூழ்நிலைகளில் சமூக உழைப்புப் பிரிவினையானது நூற்றுக் கணக்கான துறைகள், பிரிவுகளை உள்ளடக்கி, சிக்கலாக கிளை பரப்பி நிற்கும் முறையாகத் திகழுகிறது. கடந்த பத்தாண்டுகளில் மட்டும் விஞ்ஞான தொழில் நுட்பப் புரட்சியின் சாதனைகளைப் பயன்படுத்தியதன் விளைவாய் மின்னணு தொழில்நுட்பம், எரிவாயுத் தொழிற்துறை, உபகரண உற்பத்தி, அணுசக்தித் தொழிற்துறை, செயற்கை இரசாயனம், அரைக் கடத்திகளின் உற்பத்தி, தானியங்கி சாதனங்களின் உற்பத்தி போன்ற பல சுயமான துறைகள் தோன்றியுள்ளான்.
சமூக உழைப்புப் பிரிவினை உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியைப் பிரதிபலிக்கும் அதே சமயம் சமூக அமைப்பின் தன்மையுடன் நெருக்கமாகத் தொடர் புடையது. எந்த சமூக உறவுகளின் கீழ் உழைப்பு நடைபெறுகிறதோ அவற்றின் வெளிப்பாடுகளில் ஒன்றாகும். முதலாளித்துவத்தின் கீழ் சமூக உழைப்புப் பிரிவினை தன்னிச்சையாக வளருகிறது. பல்வேறு துறைகளும் உற்பத்திகளும் சமமின்றி வளருகின்றன, இவற்றின் இடையே தொடர்ந்து இசைவின்மைகள் தோன்றுகின்றன, இதனால் உழைப்பும் சாதனங்களும் பயனின்றி செலவழிகின்றன. உழைப்புப் பிரிவினை ஆழமடைவதானது உற்பத்திக்கு மேன்மேலும் சமூகத் தன்மையை அளிக்கிறது, உழைப்பின் விளைபயன்களை சுவீகரிப்பதோ முதலாளித்துவத் தனியுடைமை வடிவத்திலேயே இருக்கின்றது. இதனால் முதலாளித்துவ அமைப்பின் எல்லா முரண்பாடுகளும், எல்லாவற்றிற்கும் மேலாக முதலாளித்துவத்தின் முக்கிய முரண்பாடு - உற்பத்தியின் சமூகத் தன்மைக்கும் இதன் விளைபயன்கள் முதலாளித்துவத் தனியுடைமை வடிவில் சுவீகரிக்கப் படுவதற்கும் இடையிலான முரண்பாடு- கூர்மையடை கின்றன. சோஷலிசத்தின் கீழ் சமூக உழைப்புப் பிரிவினை திட்டமிட்ட வகையில், சமுதாயம் முழுவதன், இதன் எல்லா உறுப்பினர்களின் நலன்களுக்காக நிறைவேற்றப் படுகிறது. சோஷலிசம் உலகின் முதல் சோஷலிச நாடாகிய சோவியத் யூனியனின் வரம்புகளை விட்டு வெளியே வந்து உலக அமைப்பாக மாறியதானது. சர்வதேச சோஷலிச உழைப்புப் பிரிவினை தோன்ற வழிகோலியது. இது எல்லா தரப்புகளுக்கும் முழு சமத்துவம், தோழமை ரீதியான பரஸ்பர உதவி, பரஸ்பர அனுகூலம் ஆகியவற்றின் அடிப்படையில் அரசுகளுக்கு இடையிலான பொருளாதார உறவுகள் விஷயத்தில் ஒரு புதிய கட்டத்தைக் குறித்தது.



No comments:

Post a Comment