Monday 16 April 2018

01. அரசியல் பொருளாதாரத்தை மார்க்சிய வழியில் அணுகுவதற்கான தத்துவம் வரலாற்றியல் பொருள்முதல்வாதம்


--எஸ்.இல்யீன், அ.மொத்திலோவ்

மனிதர்களுடைய நடவடிக்கைகள், கண்ணோட்டங்கள், செயல்களின் உண்மையான நோக்கங்களை விளக்கம் சமுதாய வாழ்க்கைப் போக்கு முழுவதையும் நிர்ணயிக்கும் அடிப்படைகளைக் கண்டுபிடிக்க வேண்டும்.

தொழிலாளி வர்க்கத்தின், எல்லா உழைப்பாளிகளின் மாபெரும் ஆசான்களாகிய கார்ல் மார்க்சும் பிரெடெரிக் எங்கெல்சும்தான் இதை முதன்முதலாகச் செய்தார்கள், சமுதாயம் மற்றும் இதன் வரலாறு பற்றிய கண்ணோட்டங்களில் ஒரு மாபெரும் புரட்சியை நிறைவேற்றிய கடமை இவர்களைத்தான் சாரும். வரலாற்றுப் பொருள்முதல்வாதம் எனும் போதனையை, அதாவது வரலாற்றைப் பற்றிய பொருள்முதல்வாதக் கருத்தை மார்க்சும் எங்கெல்சும் தோற்றுவித்தனர். இந்த மாபெரும் விஞ்ஞானக் கண்டுபிடிப்பு நிகழ்த்தப்பட்டு கிட்டத்தட்ட ஒன்றரை நூற்றாண்டு உருண்டோடி விட்டது. இக்காலகட்டத்தில் எல்லா மக்களின், மனித குலம் முழுவதன் விதியையும் பாதித்த மகத்தான சம்பவங்கள் பல நடந்தன. வரலாற்று வளர்ச்சியின் ஒவ்வொரு கட்டமும் மார்க்சிய போதனை உண்மையானது என்பதற்கான புதிய நிரூபணமாக இருந்தது. இது பழையதாக ஆகாதது மட்டுமல்ல (இதன் எதிரிகள் சித்தரிக்க முற்படுவது போல்), மாறாக மேன்மேலும் இது உயிர்த்துடிப்புள்ளதாகி, முன்னேற்றம், சமாதானம், மகிழ்ச்சிக்கான பாதையை மக்களுக்குச் சுட்டிக் காட்டியும் வருகிறது.

வரலாற்றைப் பற்றிய பொருள்முதல்வாதக் கருத்தின் சாரத்தைச் சுருக்கமாகப் பின்வரும் கருத்து நிலைகள் மூலம் விளக்கலாம்:
- வரலாற்றுப் போக்கு என்பது இயற்கையான, புறவய ரீதியான நிகழ்ச்சிப் போக்கு; இது இயற்கைக்கு அப்பாற்பட்ட மேலுலக சக்திகள் எவற்றின் தலையீடு மின்றி மனிதர்களாலேயே நிறைவேற்றப்படுகிறது;
- மனிதர்கள் தமது விருப்பு வெறுப்புகளின் அடிப் படையில், தன்னிச்சையாக வரலாற்றைப் படைப் பதில்லை, மாறாக, சமுதாய வளர்ச்சியின் ஒவ்வொரு கட்டத்திலும் உருவாகும் பொருளாதச் சூழ்நிலை களின் அடிப்படையில்தான் வரலாறு படைக்கப்படுகிறது;
- இந்தப் பொருளாயதச் சூழ்நிலைகள்தான் -பொரு ளாயத உற்பத்திதான் - சமுதாயக் கட்டமைப்பு முழுவதன் அடிப்படையாகும், இதுதான் ஆன்மீக வாழ்வு, அரசியல் போன்றவற்றையெல்லாம் நிர்ணயிக்கிறது. மனிதர்களின் உணர்வு அவர்களுடைய வாழ்க்கை நிலையை நிர்ணயிப் பதில்லை; அவர் களுடைய சமூக வாழ்க்கை நிலையே அவர் களுடைய உணர்வை நிர்ணயிக்கிறது" (கா. மார்க்ஸ், பி. எங்கெல்ஸ், தேர்வு நூல்கள், பன்னிரண்டு தொகுதிகளில், தொகுதி 4, முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ , 1985, பக்க ம் 207) என்று கார்ல் மார்க்ஸ் இக்கருத்தை அற்புதமாகக் குறிப்பிட்டார். இங்கே சமூக வாழ்க்கை நிலை மற்றும் உணர்வு ' என்று கூறும் போது தனிப்பட்ட மனிதனின் வாழ்க்கைச் சூழ்நிலைகள், தனிப்பட்ட சுய உணர்வை நாம் குறிப் பிடவில்லை; சமுதாயம் முழுவதைப் பற்றி, வர்க்கங்களை, பல்வேறு சமூகப் பிரிவுகளை உண்டாக்கும் பெரும் மனிதக் குழுக்களைப் பற்றி இங்கே பேசப் படுகிறது.

வரலாற்றின் பாலான இப்படிப்பட்ட அணுகுமுறை, பொருளாதாரம் மற்றும் எந்த நிகழ்ச்சிப் போக்குகள், புலப்பாடுகளுடன் பொருளாதார வாழ்க்கை தொடர்பு கொண்டுள்ளதோ அவற்றைப் பற்றிய கண்ணோட்டங்களில் அடிப்படை மாற்றத்தை ஏற்படுத்தியது. மனித சமுதாயத்தின் வளர்ச்சியில் தீர்மானகரமான பங்காற்றும் பொருளாயத உற்பத்தி எப்படிப்பட்டது?



No comments:

Post a Comment