Tuesday, 17 April 2018

08 சமூகப் புரட்சிகளின் மூலக் காரணம்


--எஸ்.இல்யீன், அ.மொத்திலோவ்

விஞ்ஞானத்திலும் தொழில் நுட்பத்திலும் நடைபெற்ற எவ்வளவோ மகத்தான புரட்சிகர மாற்றங்களை மனித வரலாறு அறியும். இவை உலகம் மற்றும் இதன் இடையறாத இயக்கத்தை நிர்வகித்த விதிகளைப் பற்றிய கருத்துக்களை அடிப்படையிலேயே மாற்றின. சக்கரம், நீராவி என்ஜீன், காற்று அரவை இயந்திரம் மற்றும் அணு உலை முதலியவற்றின் கண்டுபிடிப்புகள் மனித மேதமையின் மகத்தான கண்டுபிடிப்புகளில் ஒரே சங்கிலித் தொடர் போன்றவையாகும். இப்படிப்பட்ட கண்டுபிடிப்புகளில் ஒவ்வொன்றும் (இவை ஒவ்வொன் நிற்கும் இடையே நூற்றாண்டுகள், ஏன் ஆயிரமாண்டுகள் கூட இருக்கலாம்) உற்பத்தியில் பயன்படுத்தப்பட்ட போது. உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியில் புதிய பாய்ச்சலைக் குறித்தது.
வரலாற்றில் பல சமூக கொந்தளிப்புகள், சமூகப் புரட்சிகள் நடந்துள்ளன. பழைய உலகின் அடிப்படை களை அழித்த இவை சமுதாயத்தின் முன்னோக்கிய இயக்கத்திற்குப் பாதை சமைத்தன. கார்ல் மார்க்ஸ் புரட்சியை வரலாற்றின் என்ஜின் என்றார். பழையதாகி இற்றுப் போனவற்றைத் தூக்கியெறிந்த மனிதகுலம் புரட்சிகளின் பயனாய் புதிய எல்லைகளுக்கு வந்தது, தன் சமூக வளர்ச்சியைத் துரிதப்படுத்தியது.
கவனமாக உற்று ஆராய்ந்தால், விஞ்ஞானம் மற்றும் தொழில் நுட்பத்தில் ஏற்படும் மாற்றங்களுக்கும் (இவற்றால் சமுதாயத்தின் முக்கிய உற்பத்திச் சக்தியாகிய உழைப்பாளிகளிடம் மாற்றங்கள் ஏற்படுகின்றன) சமூகப் புரட்சிகளுக்கும் இடையே ஆழ்ந்த தொடர்பு உள்ளது தெரிய வரும். உற்பத்திச் சக்திகளுக்கும் உற்பத்தி உறவுகளுக்கும் இடையிலான நெருங்கிய பரஸ்பாச் செயலாக்கமும், இவற்றின் இடையே குறிப்பிட்ட பொருத்தத்தை ஏற்படுத்தும் அவசியமும் மேற்கூறிய தொடர்பிற்கான காரணங்களாக அமைகின்றன.
உற்பத்திச் சக்திகளுக்கு, தாம் எந்த சமூகச் சூழ் நிலைகளில் வளர்ந்தாலும் அக்கறையில்லை என்பது போல் மேற்போக்காகப் பார்க்கையில் தெரியும். அமெரிக்க ஐக்கிய நாட்டில் தயாரிக்கப்பட்ட உலோகத் தகடுகளை அறுக்கும் கடைசல் இயந்திரங்கள் சோவியத் தொழிற்சாலைகளில் இயங்குகின்றன, சோவியத் நாட்டில் தயாரிக்கப்பட்ட லாரிகள் பல் முதலாளித்துவ நாடுகளில் சரக்குகளை எடுத்துச் செல்கின்றன. ஆனாலும் வேறுபட்ட சமூக அமைப்புகளில் உற்பத்திச் சாதனங்கள் எப்படி, எந்த லட்சியங்களுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன என்பதில் கணிசமான வேறுபாடு உள்ளது. விண்வெளி ஆராய்ச்சிக்கான மகத்தான தொழில் நுட்பச் சாதனங்கள் சோஷலிச நாடுகளில் விஞ்ஞான, தேசியப் பொருளா தாரத் தேவைகளுக்காக, சமாதானமான வழிகளில் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் விண் கப்பல்களை பயங்கரமான யுத்தக் கருவிகளாகவும் பயன்படுத்தலாம்; உலக ஆதிக்கத்தை வெல்லத் துடிக்கும் அமெரிக்க இராணுவத் தொழிற்துறை இணையங்கள் இதற்குத்தான் முயலுகின்றன.
உற்பத்திச் சக்திகளுக்கும் உற்பத்தி உறவுகளுக்கும் இடையிலான பரஸ்பரத் தொடர்பு சமூக உற்பத்தியின் இயக்கத்தின் தன்மையால் நிர்ணயிக்கப்படுகிறது. இதன் இடையறாத மாற்றத்திற்கு, கீழ் நிலையிலுள்ள வடி. வங்களிலிருந்து உயர் வடிவங்களை நோக்கிய வளர்ச்சிக்கு ஏதோ வெளிக் காரணங்கள் அல்ல, உள் காரணங்கள் தான் கட்டளையிடுகின்றன. உற்பத்திச் சக்திகள்தான், அதுவும் எல்லாவற்றிற்கும் மேலாக உழைப்புக் கருவிகளும் மனிதர்களின் உழைப்பு நடவடிக்கையும்தான் சமூக உற்பத்தியில் மிகவும் மாறுபடும் தன்மையுள்ள, நவீனப் படுத்தும் அம்சமாகும். இவற்றின் வளர்ச்சியைப் பொறுத்துதான் சமுதாயத்தின் உற்பத்தி உறவுகள் உள்ளன. புராதனக் கூட்டுச் சமூக சொத்துடைமையின் அடிப்படையில் உருவான உற்பத்தி உறவுகள் எளிய உழைப்புக் கருவிகளுக்கு (இவை வேட்டையாடுவதற்கும் மீன்பிடிப்பதற்கும்தான் தோற்றுவிக்கப்பட்டன) ஏற்றவை யாக இருந்தன. விவசாயிகள், கைத்தொழிலாளர் களிடமிருந்து உற்பத்திக் கருவிகளையும் சாதனங்களையும் வலுக்கட்டாயமாகப் பிடுங்கிய முதலாளித்துவம் இவர்களை ஆலைகளுக்கும் தொழிற்சாலைகளுக்கும் விரட்டியடித்து, இயந்திர ஒலியாலும் நீராவி என்ஜின் களின் முழக்கத்தாலும் தன் தோற்றத்தைப் பற்றி அறிவித்தது. நம் காலத்திய விஞ்ஞான-தொழில்நுட்பப் புரட்சி, உற்பத்திச் சாதனங்கள் பொதுவுடைமையாக இருக்கும் சூழ்நிலையில்தான், சோஷலிசத்திற்கே உரித் தான உற்பத்தி உறவுகளின் கீழ்தான் தன்னை முழுமையாக வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகளைப் பெறுகிறது.
ஆனால் இதனால் உற்பத்தி உறவுகள் வெறுமனே உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியைப் பிரதிபலிக்கின்றன என்று பொருளாகாது. மாறாக, உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சி, இவற்றின் தன்மை, திசையமைவு ஆகியவற்றின் மீது உற்பத்தி உறவுகள் மிகவும் நேரடியான தாக்கம் செலுத்துகின்றன, இத்தாக்கம் நல்ல ஆக்கபூர்வமான தாக்கமாகவோ, அழிவுகரமானதாகவோ இருக்கலாம்; உற்பத்தி உறவுகள் உற்பத்தியின் வளர்ச்சிக்கு உதவக் கூடும், அல்லது முன்னோக்கிப் பாயும் உற்பத்திச் சக்திகளின் பாதையில் தடையாக நின்று வளர்ச்சி வேகத்தைக் குறைக்கக் கூடும். அப்போது உற்பத்திச் சக்திகளுக்கும் உற்பத்தி உறவுகளுக்கும் இடையில் முரண்பாடு தோன்றும். இதில், உற்பத்தி உறவுகளால் உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியிலிருந்து மிகவும் நீண்ட காலம் பின் தங்கி, இதனுடன் முரண்பட முடியாது, ஏனெனில் இப்படிப்பட்ட சூழ்நிலையில் சமூக முன்னேற்றம் சாத்தியமில்லை. உற்பத்தி உறவுகள் உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியிலிருந்து எவ்வளவு பின்தங்கியிருந்தாலும் முன்னவை காலப் போக்கில் 1.பின்னதுடன் பொருந்தி வர வேண்டும். உற்பத்தி உறவுகளுக்கும் உற்பத்திச் சக்திகளின் மட்டம் மற்றும் தன்மைக்கும் இடையிலான பொருத்தம் பொது பொருளா தார விதியாகும். இவ்விதி மனித சமுதாய வளர்ச்சியின் எல்லா கட்டங்களிலும் நிலவும் விதியாகும்.
ஒரு விதமான உற்பத்தி உறவுகளுக்குப் பதில் வேறு விதமான உற்பத்தி உறவுகள் வர உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சி மட்டும் போதாது. பழைய சமூக அமைப்பு, இதில் ஆதிக்கம் செலுத்தும் வர்க்கங்கள் எப்போதுமே தாமாக தம்மிடத்தை விட்டுக் கொடுக்காது. எனவே பழையதாகிப் போன உற்பத்தி உறவுகளை மாற்ற, உற்பத்திச் சக்திகளின் முந்தைய வளர்ச்சிப் போக்கு முழுவதாலும் தோற்றுவிக்கப்பட்ட பொருளாயத முன் நிபந்தனைகளோடு கூட மேற்கூறிய எதிர்ப்பை முறியடிக்க வல்ல சமூகச் சக்தியும் தேவை, எதிரெதிரான வர்க்கங் களைக் கொண்ட, சுரண்டல் நிலவும் சமுதாயங்களில் உற்பத்தி உறவுகளின் மாற்றம் சமூகப் புரட்சிகளின் மூலம் நடைபெறுகிறது. அடிமையுடைமை, நிலப்பிரபுத் துவம் மற்றும் முதலாளித்துவத்தில் (இவற்றில் உற்பத்தி தன்னிச்சையான தன்மையை உடையது) உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியிலிருந்து பின்தங்கி நிற்கும் உற்பத்தி உறவுகள் கடுமையான, ஆழமான சமூக முரண்பாடுகளையும் சச்சரவுகளையும் ஏற்படுத்துகின்றன, உழைப்பாளிகளுக்கும் சுரண்டுபவர்களுக்கும் இடையில்
கடும் வர்க்கப் போராட்டத்திற்கு வழிகோலுகின்றன.
மனிதனை மனிதன் சுரண்டுவதன் அடிப்படையிலான சமுதாயத்தின் வளர்ச்சியில் இரண்டு போக்குகள் -முன்னோக்கிய வளர்ச்சிப் போக்கும் பின்னோக்கிய வீழ்ச்சிப் போக்கும் - காணப்படுகின்றன. வளர்ச்சியின் ஆரம்பக் கட்டத்தில் உற்பத்தி உறவுகள் உற்பத்திச் சக்திகளின் தன்மைக்கு ஏற்றதாக இருக்கும் போது சமுதாயம் முன்னோக்கி வளருகிறது. பின்னால் உற்பத்தி உறவுகள் உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சிக்கும் சமூக முன்னேற்றத்திற்கும் தடையாக, விலங்காக மாறும் போது, பின்னோக்கிய வீழ்ச்சிப் போக்கு ஆரம்பமாகிறது, இது இறுதியில் பழைய சமூக உறவுகள் உடைய வழிகோலுகிறது. சமூகப் புரட்சி நடைபெறுகிறது, இது பழையதாகிப் போன சமூக வாழ்க்கை வடிவங் களைத் தூக்கியெறிந்து உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சிக் கான வாய்ப்புகளை ஏற்படுத்துகிறது.
ஆனால் முந்தைய புரட்சிகள் எல்லாம் 'மனிதனை மனிதன் சுரண்டுவதற்கு முடிவு கட்டவில்லை, மாறாக, சுரண்டலின் ஒரு வடிவத்திற்குப் பதில் இன்னொரு வடிவத்தைக் கொண்டு வந்தன. அடிமைகளை மேற்பார்வை யிட்டவனின் கசையடிக்குப் பதில் நிலப்பிரபுவின் சாட்டையடி வந்தது. இது நிலப்பிரபுவிற்கு சொந்தமா யிருந்த நிலத்தை உழும்படி பண்ணையடிமை விவ சாயியைக் கட்டாயப்படுத்தியது. நிலப்பிரபுவிற்குப் பதில் * 'அறிவொளியூட்டப்பட்ட'' முதலாளி வந்தான்; இவன் வேலையில்லாத் திண்டாட்டம், பட்டினி, வறுமை ஆகியவற்றைக் காட்டி அச்சுறுத்தி கூலித் தொழிலாளர் களைச் சுரண்ட நவீனமான, தந்திரமான வழிகளைக் கண்டுபிடித்தான்.
சோஷலிசப் புரட்சிதான் உற்பத்திச் சாதனங்களின் மீதான தனியுடைமையை - இதுதான் மனிதனை மனிதன் சுரண்டுவதன் அடிப்படையாகும் - ஒழித்துக் கட்டி உற் பத்திச் சாதனங்களைப் பொதுவுடைமையாக்குகிறது, இதன் மூலம் சமுதாயம் முழுவதன், இதன் ஒவ்வொரு உறுப்பினரின் நலன்களுக்கேற்ப உற்பத்திச் சக்திகளின் இடையறாத வளர்ச்சிக்கு எல்லையற்ற வாய்ப்புகளை உண்மையாக ஏற்படுத்துகிறது. சோஷலிச உற்பத்தி உறவுகள் உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியோடு சேர்ந்து தொடர்ந்து மேம்படுகின்றன, படிப்படியாக கம்யூனிச உற்பத்தி உறவுகளாக வளர்ச்சியடைகின்றன. "ஒவ்வொருவரிடமிருந்தும் அவரவர் திறமைக்கேற்ப, ஒவ்வொருவருக்கும் அவரவர் தேவைக்கேற்பா" என்று தன் பதாகையில் எழுதப் போகும் வர்க்கங்களற்ற, சமூக ரீதியாக ஒரே மாதிரியான சமுதாயத்தின் பொருளாதார அடித்தளத்தை இந்த கம்யூனிச உற்பத்தி உறவுகள் ஏற்படுத்தும்.



No comments:

Post a Comment