Monday 16 April 2018

05.உற்பத்திச் சாதனங்கள்


--எஸ்.இல்யீன், அ.மொத்திலோவ்


உழைப்பின் விளைபயன் நோக்கிலிருந்து உழைப்பு எனும் நிகழ்ச்சிப் போக்கைப் பார்த்தால் உழைப்புச் சாதனங்களும் உழைப்புப் பொருட்களும் சேர்ந்து உற்பத்திச் சாதனங்களை உருவாக்குகின்றன. ஒரு பொருள் உழைப்பு நிகழ்ச்சிப் போக்கில் எந்த இடத்தை வகிக் கிறது, இதில் இப்பொருளின் பங்கு என்ன என்பதைப் பொறுத்து அப்பொருள் உழைப்புப் பொருளாகவோ, மூலப்பொருளாகவோ, உழைப்புச் சாதனமாகவோ இருக்கலாம். இயந்திரக் கட்டுமானத் தொழிற்சாலையின் தொழிலாளர்களுக்கு தையல் இயந்திரம் உழைப்பின் விளைபொருள், தையல் ஆலைத் தொழிலாளர்களுக்கோ, இது உழைப்புச் சாதனம்.

உழைப்புச் சாதனங்களிலும் உழைப்பின் விளை பொருட்களிலும் ஏற்கெனவே உழைப்பு அடங்கியுள்ளது. இவை கடந்த (ஏற்கெனவே நிகழ்ந்துவிட்ட) உழைப்பின் விளைபொருட்களாகும். ஆனால் மனித ஜீவனுள்ள உழைப் பின் வட்டத்திற்குள் கொண்டு வரப்படும் வரை இவை உயிரற்ற பொருட்குவியலாக இருக்கின்றன. ஒரு இயந்திரம் உழைப்பு நிகழ்ச்சிப் போக்கில் செயல்படா விடில் அதனால் பயன் இல்லை . இது பழையதாகிறது, துருப்பிடித்துப் போகிறது. பயனற்றதாகிறது. ஆடை நெய்ய நூலைப் பயன்படுத்தாவிடில் அது கெட்டுப் போகும். அதே சமயம் உற்பத்திச் சாதனங்களின்றி மனிதர்களின் உழைப்பு நடவடிக்கை நடைபெறாது. ஆக, உழைப்புச் சாதனங்கள் மற்றும் உழைப்புப் பொருட்களில் அடங்கியுள்ள கடந்த கால உழைப்பையும் மனித ஜீவனுள்ள உழைப்பையும் அங்கக ரீதியாக இணைத்தால்தான் பொருளாயத உற்பத்தி நடைபெற முடியும்.

மனிதனின் உழைப்பு, இவனுடைய உற்பத்தி நடவடிக்கை , இவன் இயற்கையின் மீது புரியும் செய லாக்கம் ஆகியவை குறிப்பிட்ட சமூக உறவுகளின் வரம்புகளுக்குள் நடக்கின்றன. உழைப்பு நடவடிக்கை யின் போது மனிதர்கள் குறிப்பிட்ட சமூகப் பிரிவுகளாக ஒன்றிணைகின்றனர்.

No comments:

Post a Comment