--எஸ்.இல்யீன்,
அ.மொத்திலோவ்
உழைப்பில்
ஈடுபடும் போது மனிதர்கள் இயற்கையின் மீது செயலாக்கம் புரிகின்றனர், உழைப்புச்
சாதனங் களைத் தோற்றுவித்து இவற்றைப் பயன்படுத்து கின்றனர். உழைப்புச் சாதனங்கள் -
எந்தப் பொருளாய்தச் சாதனங்களின் உதவியால் மனிதன் இயற்கைப் பொருட் களை மாற்றுகிறானோ
அந்தச் சாதனங்களாகும். இயற்கையின் மீது செயலாக்கம் புரிவதற்காகத் தனக்கும்
இயற்கைக்கும் இடையில் மனிதன் வைக்கும் பொருட் சுள் தான் இவை.
உழைப்புக்
கருவிகள் (இயந்திரங்கள், உபகரணங்கள், செயற்கருவிகள், என்ஜின்கள்ட இத்தியாதி),
உற்பத்திக் கட்டிடங்கள் மற்றும் அமைப்புகள், போக்குவரத்து, தகவல் தொடர்புச்
சாதனங்கள், உழைப்புப் பொருட் களைப் பாதுகாக்கும் பொருட்கள் (காப்பிடங்கள், சிலிண்டர்கள்
போன்றவை) ஆகியவை எல்லாம், அதாவது உற்பத்திப் பொறியமைவு முழுவதும் உற்பத்திச்
சாதனங்களில் அடங்கும். உழைப்புச் சாதனங்களில் உழைப்புக் கருவிகளுக்குத்தான்
முக்கியப் பங்குண்டு, இவற்றின் இயந்திரவியல், பௌதீக, வேதியியல், உயிரியல், மற்ற
தன்மைகளைத்தான் மனிதர்கள் குறிப்பிட்ட பொருளாயத நலன்களை உற்பத்தி செய்யும் போது
பயன்படுத்துகின்றனர்.
இயற்கைக்
கனிவளங்கள், நீர், காடுகள் ஆகிய வற்றைக் கொண்ட நிலம்தான் பொதுவில் உற்பத்தி
நிகழ்ச்சிப் போக்கு நடைபெற அவசியமான சர்வபொது உழைப்புச் சாதனமாகும். 17ஆம்
நூற்றாண்டில் வாழ்ந்த ஆங்கிலேய பொருளாதார நிபுணர் வில்லியம் பேட்டி. அடையாளச்
சிறப்போடு கூறியபடி "உழைப்பு தான் செல்வம் முழுவதன் தந்தை, நிலம்தான் இதன்
தாய்”. சர்வபொது உழைப்புச் சாதனமாகத் திகழும் நிலம், மற்ற உழைப்புச் சாதனங்கள்
இருந்தால், மனிதர்களின் உழைப்புச் சக்தி ஒப்பீட்டளவில் உயர்வாக வளர்ச்சி
அடைந்திருந்தால் விவசாயத் துறையிலும் மற்ற துறைகளிலும் தன் பங்கை வெற்றிகரமாக
நிறைவேற்றும்.
உழைப்புச்
சாதனங்களின் மூலம் இயற்கையின் மீது செயலாக்கம் புரியும் மனிதர்கள் அதே சமயம் தாமே
மாற்றமடைகின்றனர், அனுபவத்தை, ஞானத் தைப் பெறுகின்றனர். இது தன் பங்கிற்கு
உழைப்புக் கருவிகள், சாதனங்கள், தொழில் நுணுக்க முறையை வளர்த்து மேம்படுத்தவும்
உழைப்பின் உற்பத்தித் திறனைப் பெருக்கவும் புதிய வாய்ப்புகளைத் தோற்று
விக்கின்றது. உழைப்புக் கருவிகள், சாதனங்களைப் பயன்படுத்துவதில் மனிதகுலம் மிகப்
பெரும் பாதையை (எளிய கழி. கற்கோடாரியைப் பயன்படுத்தியது முதல் நவீன தானியங்கி
இயந்திரங்களை உருவாக்கியது வரை) கடந்து வந்துள்ளது.
உழைப்புக்
கருவிகளைத் தயாரிப்பதுதான் மனிது உழைப்பின் குறிப்பிடத்த க்க அம்சமாகும். இயற்
கையில் தயாரான வடிவத்தில் கிடைக்கும் கருவிகளை (கழி, கல் போன்றவை) ஒரு சில
மிருகங்கள் பயன் படுத்துவது தெரிந்ததே. உதாரணமாக, ஒரு மரத் திலிருந்து பழத்தைப்
பறிக்க குரங்கால் கழியையோ, கல்லையோ பயன்படுத்த முடியும். ஆனால் குரங்கால் மிக எளிய
கத்தியையோ, கோடாரியையோ தயாரிக்க இயலாது. மிக எளிய உழைப்புக் கருவிகளைச் செய்
வதிலிருந்துதான் மனித உழைப்பு துவங்கியது. இதில் மனித உடல் உறுப்புகள்,
எல்லாவற்றிற்கும் மேலாக கரங்கள் மேம்பாடு அடையத் துவங்கின. இக்கரங்கள் உழைப்பு
உறுப்பாக மட்டுமின்றி, உழைப்பின் விளை பொருளாகவும் விளங்கின.
மனிதர்கள்
இயற்கையின் மீது செயலாக்கம் புரிந்து, இதைத் தம் நோக்கங்களுக்கேற்ப மாற்றும் போது
உழைப்புக் கருவிகளை மேம்படுத்துகின்றனர், இயற்கை விதிகளை மேன்மேலும் ஆழமாக
அறிகின்றனர், இயற்கையின் மீது மேன்மேலும் ஆளுகை செலுத்து கின்றனர். எந்த இயற்கைப்
பொருளின் மீது மனிதர்கள் உழைப்பு நிகழ்ச்சிப் போக்கில் செயலாக்கம் புரிகின்ற னரோ
அது உழைப்புப் பொருள் எனப்படும். இயற் கையில் அப்படியே கிடைக்கும் பொருட்களும்
(உதாரண மாக, பூமியடியிலிருந்து தோண்டியெடுக்கப்படும் தாது. காட்டில் வெட்டப்படும்
மரம்), மனித உழைப்பின் செயலாக்கத்திற்கு ஏற்கெனவே உட்படுத்தப்பட்ட பொருட் களும்
(உதாரணமாக, உலோகத் தொழிற்சாலைக்கு அனுப்பப்படும் தாது, மேசை நாற்காலிகள்
செய்வதற்காக அனுப்பப்படும் வெட்டப்பட்ட மரம்) உழைப்புப் பொருட்களாக இருக்க
முடியும். பின்னால் சொல்லப்பட் டவை மூலப்பொருட்களாகின்றன. இவ்வாறாக, எல்லா
மூலப்பொருட்களும் உழைப்புப் பொருட்களாகும், ஆனால் எல்லா உழைப்புப் பொருட்களும்
மூலப்பொருட்கள் ஆகாது. ஒரே உழைப்புப் பொருள் பல்வேறு கட்டங் களில் பல்வேறு செயலாக்கத்திற்கு
உட்படுத்தப்படலாம், அப்போது மனித உழைப்பு செலவிடப்படும். உதா ரணமாக,
தோண்டியெடுக்கப்பட்ட தாதுப்பொருள் சுரங்கத் தொழிலாளர்களின் உழைப்பின் விளைபொரு
ளாகும். இதே தாதுப்பொருள் உலோகத் தொழிற் சாலையில் மூலப்பொருளாகிறது. இங்கே
தயாரிக்கப் படும் எஃகு இயந்திரக் கட்டுமானத் தொழிற் சாலையில் மூலப்பொருளாக
விளங்கும். இவ்வாறாக, இயற்கைப் பொருளின் மீது எப்போது மனித உழைப்பு செயலாக்கம்
புரிகிறதோ அப்போதுதான் அது உழைப்புப் பொருளாகும்.
இயற்கைக்
கனிவளங்கள், தாதுப்பொருட்கள், தண்ணீர், காடுகளைக் கொண்ட நிலம் சர்வபொது உழைப்புப் பொருளாகும்.
பூமியின் அடியிலுள்ள கனிப்பொருட்கள், காடுகள், நீர் வளம் அந்தந்தச் சமுதாயத்தின்
இயற்கைச் சூழ்நிலைகளின் ஓட்டுமொத்தத்தை உருவாக்குகின்றன.
இயற்கைச்
செல்வங்களை மனிதன் எந்த அளவிற்கு, எப்படிப் பயன்படுத்துகிறான் என்பது விஞ்ஞான,
தொழில் நுட்ப வளர்ச்சி மட்டம், இவை தொழில்நுட்ப ரீதியாக எப்படிப்
பயன்படுத்தப்படுகின்றன மற்றும் சமூக அமைப்பு ஆகியவற்றைப் பொறுத்தது. விஞ்ஞானதொழில்
நுட்ப முன்னேற்றம், குறிப்பாக இப்போது நடக்கும் விஞ்ஞான-தொழில் நுட்ப புரட்சி
உழைப்புப்
பொருட்களாக உற்பத்தித் துறைக்குள் கொண்டு வரப்படும் இயற்கைப்
பொருட்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துகின்றன.
No comments:
Post a Comment