Tuesday, 17 April 2018

09 பொருளாதார அடித்தளமும் மேற்கட்டுமானமும்


--எஸ்.இல்யீன், அ.மொத்திலோவ்

சமுதாயத்தில் உற்பத்தி உறவுகள் குறிப்பிட்ட முறையின் வடிவத்தில் நிலவுகின்றன. இந்த முறைதான் சமுதாய வளர்ச்சியின் ஒவ்வொரு குறிப்பிட்ட வரலாற்றுக் கட்டத்திலும் இதன் பொருளாதார அமைப்பு அல்லது பொருளாதார அடித்தளமாகும். இந்தப் பொருளில்தான் அடிமையுடைமை சமுதாயம், நிலப்பிரபுத்துவம், முதலாளித் துவம், சோஷலிசத்தின் பொருளாதார அடித்தளங் களைப் பற்றிப் பேசப்படுகிறது.
ஒவ்வொரு சமூக அமைப்பிற்கும் அதனதன் பொரு ளாதார அடித்தளம் உண்டு. இது இல்லாமல் பொரு ளாயத நலன்களை உற்பத்தி செய்ய முடியாது, சமுதாயத்தின் உற்பத்திச் சக்திகள் வளர்ச்சியடையாது. எல்லா உற்பத்தி உறவுகளின் ஒட்டுமொத்தமாகத் திகழும் பொருளாதார அடித்தளம் இறுதியில் மற்ற எல்லா சமூக உறவுகளையும் நிர்ணயிக்கிறது. இந்த சமூக உறவுகள் தான் பொருளாதார அடித்தளத்தின் மீது மேற்கட்டுமானமாக எழுகின்றன. ஒவ்வொரு பொருளாதார அடித்தளத்திற்கும் அதனதன் மேற்கட்டுமானம் உண்டு. மேற்கட்டுமானம் என்பது அரசியல், சட்ட, தத்துவஞான, தார்மீக, மத, மற்ற கண்ணோட் டங்கள், கருத்துக்களும் இவற்றிற்கு ஏற்ற ஸ்தாபனங் களும் நிறுவனங்களும் (அரசு, அரசியல் கட்சிகள், சட்ட, கலாசார, நீதிபரிபாலன, மத, மற்ற நிறுவனங் கள்) ஆகும்.
அந்தந்த பொருளாதார அடித்தளத்தால் தோற்று விக்கப்பட்டு நிர்ணயிக்கப்பட்ட மேற்கட்டுமானம், தன் பங்கிற்கு தீவிர சக்தியாகி, அடித்தளம் உருவாகவும் வலுவடையவும் உதவுகிறது. நவீன சூழ்நிலைகளில் பொருளாதார அடித்தளத்தின் மீது மேற்கட்டுமானத்தின் தாக்கம் விசேஷமாக வெளிப்படுகிறது. முதலாளித்துவ நாடுகளில் அரசியல் மேற்கட்டுமானம் பிற்போக்கான பங்காற்றுகிறது, ஏனெனில் இது பழைய, காலங்கடந்த பூர்ஷ்வா பொருளாதர அடித்தளத்தையும், கண்டிப்பாக அழிந்து போக வேண்டிய சுரண்டல் வர்க்கங்களையும் பாதுகாக்கிறது. இங்கே மேற்கட்டுமானம் சமூக முன்னேற்றத்திற்குத் தடையாக உள்ளது, உலக ஆதிக் கத்திற்காகப் பாடுபடும் மிகப் பெரும் ஏகபோகங் களின் கருவியாகத் திகழ்கிறது. சோவியத் யூனியனிலும் மற்ற சோஷலிச நாடுகளிலும் மேற்கட்டுமானம் முற்போக்கான பங்காற்றுகிறது, சோஷலிச உற்பத்தியின் துரிதமான வளர்ச்சிக்கும் மக்களின் வாழ்க்கை நிலையை உயர்த்தவும் கலாசாரத்தை வளர்க்கவும் உதவுகிறது:
உற்பத்தியில் உற்பத்திச் சக்திகள்தான் பெரிதும் மாறும் தன்மையுள்ள, மிகவும் புரட்சிகரமான அங்க மாகும். உற்பத்திச் சக்திகளின் நிலையைப் பொருத்து, இவற்றிற்கு ஏற்றபடி மனிதர்களின் உற்பத்தி உறவுகள் மாறுகின்றன, சமுதாயத்தின் பொருளாதார அடித்தளம் மாறுகிறது. அடித்தளத்தில் ஏற்படும் மாற்றங்களோ தம் பங்கிற்கு மேற்கட்டுமானத்தில் உரிய மாற்றங்களுக்கு வழிகோலுகின்றன. குறிப்பிட்ட பொருளாதார அடித் தளத்தின் மீது எழும் மேற்கட்டுமானம் தன் பங்கிற்கு இந்த அடித்தளத்தைப் பலப்படுத்த தீவிரமாக முயலு கிறது, இதனால் உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியைத் துரிதப்படுத்துகிறது அல்லது தடை செய்கிறது.
சமூக விஞ்ஞானம் என்ற முறையில் அரசியல் பொருளாதாரம் உற்பத்தி உறவுகளையும், இவற்றிற்கும் உற்பத்திச் சக்திகள், மேற்கட்டுமானத்திற்கும் இடையிலான சிக்கலான பரஸ்பர செயலாக்கத்தையும் ஆராய்கிறது. இந்த பரஸ்பர செயலாக்கத்தின் சாரத்தை வெளிப் படுத்தாமல் உற்பத்தி உறவுகளின், சமுதாயத்தினுடைய பொருளாதார அடித்தளத்தின் உண்மையான தன்மையைப் புரிந்து கொள்ள இயலாது. உதாரணமாக, முதலாளித்து வத்தின் கீழ் உற்பத்திச் சக்திகளுக்கும் உற்பத்தி உறவுகளுக்கும் இடையிலான ஆழ்ந்த முரண்பாடுகளை ஆராயாமல், பொருளாதார வளர்ச்சியின் மீது பூர்ஷ்வா அரசு தாக்கம் செலுத்தும் முறைகள், வடிவங்களை வெளிப் படுத்தாமல் முதலாளித்துவ உற்பத்தி உறவுகளை
ஆராய முடியாது.



No comments:

Post a Comment