உற்பத்தி நிகழ்ச்சிப் போக்கால் இயற்கையை மாற்றும் அதே நேரத்தில் மக்கள், ஒரு வருடன்
ஒருவர் சமூக உறவுகளைக் கொள்ளுகின்றனர். அத்தகைய உறவுகள்தான் உற்பத்தி உறவுகள் எனப்படும். பொருளாயத நன்மைகளை மக்கள் உரிமையாக்கிக் கொள்ளும்
உறவுகளுக்குச் சொத்து உறவுகள் எனப் பெயராகும். அவை உற்பத்தி முறையில் தோன்றும். ஏனெனில்
“உற்பத்தி என்பது எப்பொழுதும் குறிப்பிட்ட ஒரு அமைப்பு முறைக்குள்ளும்
சமூக அமைப்பு முறையின் உதவியாலும் தனிமனிதனால் இயற்கை தனதுரிமையாக்கப் படுகிறது.” சமூக சொத்து உறவு, தனிச் சொத்து உறவு என இருவகை சொத்து உறவுகள்
உள்ளன.
உழைப்புச் சக்தி எவ்வாறு உற்பத்திச் சாதனங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது
என்பதனைச் சொத்துறவுகள் தீர்மா னிக்கும். உற்பத்தி உறவுகள் என்பதில் சொத்துறவுகள் தவிர்
உற்பத்தி நிகழ்ச்சிப் போக்கில் மக்களிடையே நடை பெறும் செயல் பரிமாற்றமும் உள்ளடங்கும்.
தனியார் சொத்து உரிமை என்ற அடிப்படையில் உருவான ஒரு சமுதாயத்தில் இத்தகையப் பரிமாற்றம்
பல்வேறு உருவங்களில் சுரண்டல், போட்டி ஆகியவற்றில் தவிர்க்க முடியாத அளவு ஈடுபடுகிறது.
பொதுச் சொத்துரிமை என்ற அடிப்படையில் உருவான ஒரு சமுதாயத்தில் உழைப்புப் பரிமாற்ற நடவடிக்கையானது,
தானாக முன்வந்து ஒத்துழைத்தல், ஒருவருக் கொருவர் உதவுதல் என்ற உணர்வில் செயல்படுகிறது.
உற்பத்தி உறவுகள் வினியோக உறவுகளின் குணாம்சத்தையும் தீர்மானிக்கின்றன. உற்பத்திச் சாதனங்கள்
ஒரு குறிப்பிட்ட குழுக்களாலோ வர்க்கங்களாலோ ஏகபோக மாக்கப்பட்டால், இந்த ஆதிக்கக் கும்பல்கள்
செய்பொருள்களில் ஒரு பெரும் பங்கினை உரிமையாக்கிக் கொள்ளும். அதே நேரத்தில் உழைப்பாளிகள்
மீண்டும் உற்பத்தி செய்வதற்கு, உற்பத்திச் சக்தியைப் பெறத் தேவையான குறைந்தபட்ச சாதனங்களைக்
கூட பெறுவதில்லை. அதற்கு மாறாக உற்பத்திச் சாதனங்கள்-அதன் விளைவாக உற்பத்தியான எல்லா
செய்பொருள்களும்-மக்களுக்குச் சொந்தமானால் இந்தச் செய்பொருள்கள் சமுதாயம் முழுவதின்
நலனில் அக்கறை கொண்டு வினியோகிக்கப்படும்.
அடுத்த முக்கியமான பொருளாதார உறவுகள் நுகர்வு உறவுகள் ஆகும். நுகர்வு என்பது உற்பத்திக்கான
காரணமாகும். மேலும் மறு உற்பத்தி முறையில் அது ஒரு பகுதியாகும். நுகர்வின் அளவும் தேவைகளின்
தன்மைகளும் உற்பத்தியைப் பொறுத்துள்ளது. சுரண்டல் சமுதாயங்களில் புல்லுருவித்தனமான
நுகர்வு அமைப்பு நிலவுகிறது. அத்தகைய சமுதாயங்களில் உழைப்பாளிகள் தரக்குறைவான மலிவான
பொருள்களைத்தான் நுகரவேண்டியுள்ளது.
சர்வதேச பொருளாதார உறவுகளுக்கு ஒரு தனியிடம் உண்டு. மார்க்ஸ்
அவற்றை இரண்டாவதானது என விவரித்தார். அதன் பொருளாவது அவை ஆரம்ப உற்பத்தி உறவுகளின்
குணம்சத்தைப் பொறுத்துள்ளவை என்பதாகும். அவற்றின் முக்கியத்துவம் மேலும் மேலும் உயர்ந்து
கொண்டேயிருக்கின்றது. முதலாளித்துவ உலகில் தற்காலத்தில் அநேக விதமான சர்வதேசப் பொருளாதார
உறவுகள் இருக்கின்றன. உலக சோஷலிச அமைப்பின் தோற்றத்துடன் புதிய சர்வதேசப் பொருளாதார
உறவுகள் தோன்றியுள்ளன.
உற்பத்தி உறவுகளின் பல்வேறு விதமான அம்சங்கள் ஒரு ஒருங்கிணைந்த
அமைப்பை உண்டாக்குகின்றன. அதில் எல்லாப் பகுதிகளும் செல்வாக்கு செலுத்துகின்றன. மேலும்
ஒன்று மற்றதன் செல்வாக்கிற்கு உட்படுகிறது. ஆனால் உற்பத்திச் சாதனங்களின் உடைமை உறவுகள்
இந்த முறையில் முதன்மையான பங்காற்றுகின்றன. ஏன் எனில் அவை எல்லா பொருளாதார உறவுகளையும்
ஒரே மொத்தமாக இணேத்து சமுதாயத்தின் முக்கிய குணாம்சங்களை நிறைவாக்கிக் கொடுக்கின்றன.
உற்பத்தி சாதனங்களின் உடைமை உறவுகளின் தீர்க்கமான முக்கியத்துவத்தைக்
குறைக்க பூர்ஷ்வா சித்தாந்தவாதிகள் தடம் புரண்டு செல்லுகிறார்கள்.
.
அதே நேரத்தில் சமூகப் பொருளாதார உறவுகளில் உற்பக்திச்
சாதனங்களின் உடைமை உறவுகள் முதன்மையான பங்காற்றுகின்றன என்பதனை நிகழ்ச்சிகள் எப்பொழுதையும்
விட தீர்மானமாகக் காட்டுகின்றன. முக்கியமாக முதலாளித்துவத்தையும் சோஷலிசத்தையும் ஒப்பிடுவதிலிருந்து
இது தெளிவாகும். அவ்விரு சமூக அமைப்புகளும் எதிரும் புதிருமாக இருப்பதற்கு எல்லாவற்றையும்
விட முக்கிய காரணம் அடிப்படையிலேயே வேறுபட்ட உடைமை வடிவங்களைக் கொண்ட பொருளாதார அடிப்படையில்
இவை அமைந்துள்ளன.
(“அரசியல் பொருளாதாரத்தின் அடிப்படைகள்” எம்.என்.ரின்டினா, ஜி.பி.செர்னிக்கவ், ஜி.என்.ஹீடக்கோர்மவ்
முன்னேற்றப் பதிப்பகம்)
No comments:
Post a Comment