“முதலாளித்துவத்தில் பண்ட உற்பத்தி
முழு ஆதிக்கம் செலுத்துகிறது. பண்டம் என்பது பரிவர்த்தனைக்காக உற்பத்தி செய்யப்பட்ட
உழைப்பின் விளைபொருள். பண்ட உற்பத்தி என்பது சமுதாயப் பொருளாதாரத்தின் ஒரு ஒழுங்கமைப்பாகும்.
இதில் பொருட்கள் சொந்த உபயோகத்திற்காக இல்லாமல் விற்பதற்காக உற்பத்தி செய்யப்படுகின்றன.
எந்த நிலைமைகளில் பொருட்கள்
பண்டங்களாகின்றன?
இதற்கு முதலாவதாக சமுதாய உழைப்புப் பிரிவினை நிலவ வேண்டும்.
இதில் மக்கள் தமக்கு வேண்டிய எல்லாவற்றையும் தாமே உற்பத்தி செய்வதில்லை, மாறாக ஏதோ
ஒரு வித நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர், ஏதோ சில பொருட்களின் உற்பத்தியில் தேர்ச்சி
பெறுகின்றனர். இரண்டாவதாக, உற்பத்திச் சாதனங்கள் தனிப்பட்ட நபர்களின் அல்லது குழுக்களின்
சொத்தாக இருக்க வேண்டும். இச்சந்தர்ப்பத்தில் பண்டங்களை வாங்குவதும் விற்பதும் பொருளாதார
அவசியமாக மாறுகின்றன.
முதலாளித்துவப் பண்ட
உற்பத்தி நிலப்பிரபுத்துவச் சமுதாயத்தின் உள்ளே தோன்றியது.
கைத்தொழிலுக்கும் விவசாயத்திற்கும்,
நகரத்திற்கும் கிராமத்திற்கும் இடையிலுள்ள சமுதாய உழைப்புப் பிரிவினே வலுவடைந்ததானது
நிலப்பிரபுத்துவப் பொருளாதாரம் படிப்படியாக சந்தை உறவுகளினுள் இழுக்கப்பட்டு பணத்தின் அதிகாரத்தின் கீழ்
வருவதற்கு இட்டுச் சென்றது. பண்ட உறவுகளின் வளர்ச்சி நிலப்பிரபுத்துவத்தின் சிதைவிற்கான
அடிப்படையை உருவாக்கியது. பிரபுக்களின் கோட்டைச் சுவர்களைக் குண்டுகள் துளைப்பதற்கு
நெடுங் காலம் முன்னதாகவே அவற்றின் அடிப்படைகளைப் பணம் குலைத்திருந்தது என்று பி. எங்கெல்ஸ்
எழுதினர்.
சாதாரணப் பண்டஉற்பத்தி
மற்றும் முதலாளித்துவப் பண்ட் உற்பத்தியின் சிறப்பு அம்சங்களை ஒப்பிடுவோம். இரண்டுமே
சமுதாய உழைப்புப் பிரிவினையையும் உற்பத்திச் சாதனங்கள் மற்றும் உழைப்பின் விளைபொருட்களின்
மீதான தனியுடைமையையும் அடிப்படையாகக் கொண்டன. இதில் தான் இவற்றின் பொதுமை அடங்கியுள்ளது.
ஆனல் சாதாரணப் பண்ட உற்பத்தியில் உழைப்பின் விளைபொருட்கள் அவற்றை உற்பத்தி செய்தவர்களுக்கு
(கைத்தொழிலாளர்கள், விவசாயிகள்) சொந்தமாயிருக்கும்
என்றால் முதலாளித்துவ உற்பத்தியில் இவை யாரிடம் உற்பத்திச் சாதனங்கள் உள்ளதோ, யார்
கூலித் தொழிலாளர்களின் உழைபபன் பயனை அபகரிக்கின்றார்களோ அவர்களுக்குச் சொந்தம்.
முதலாளித்துவத்திற்கு
வெகுகாலம் முன்னரே பண்டப் பரிவர்த்தனை நிலவியது என்றாலும் முதலாளித்துவத்திற்கு முந்தைய
அமைப்புகளில் பொருளாதாரம் பெரும்பாலும் இயற்கையானதாக இருந்தது. ஒவ்வொரு நிலப்பிரபுத்துவப்
பண்ணையும் தனிப்பட்ட வாழ்க்கையை நடத்தியது, வெளியுலகுடனான பரிவர்த்தனையைக் கிட்டத்தட்ட
நாடவேயில்லை, ஏனெனில் நிலச்சுவாந்தாருக்கும் அவனது அடியாட்களுக்கும் தேவையான அனைத்தும்
பண்ணையடிமைகள் மற்றும் அவர்களின் கிழிருந்த கைத்தொழிலாளர்களின் உழைப்பால் உற்பத்தி
செய்யப்பட்டது.
விவசாயப் பண்ணேயும்
இயற்கையானதாயிருந்தது. விவசாயிகள் தானியச் சாகுபடி, கால்நடை வளர்ப்பு ஆகியவற்றோடு கூட
நெசவு வேலைகளைச் செய்தனர், காலணிகள் மற்றும் உழைப்புக் கருவிகளைத் தயாரித்தனர். நிச்சயமாக
இயற்கைப் பொருளாதாரத்திலும் ஒரு சில உழைப்பின் விளைபொருட்கள் (உப்பு, இரும்பு, மளிகைப் பொருட்கள், ஆடம்பரப் பொருட்கள்)
சந்தையில் பண்டங்களாகப் பரிவர்த்தனை செய்து கொள்ளப்பட்டன; ஆனால் இத்தகைய பரிவர்த்தனை
இரண்டாம் பட்சமாகத்தான் இருந்தது, ஏனெனில் சிறிய அளவு பொருட்கள்தான் விற்கப்பட்டன.
முதலாளித்துவத்தில்
ஆலைகளும் தொழிற்சாலைகளும் விவசாயப் பண்ணைகளும் சாதாரணமாக விற்பதற்காக தமது பொருட்களை
உற்பத்தி செய்கின்றன. முதலாளித்துவச் சமுதாயத்தில் வாழ்க்கையின் எல்லாத் துறைகளிலும்
பண்ட-பண உறவுகள் ஊடுருவி நிற்கின்றன. பண்டப் பரிவர்த்தனை என்பது மிகப் பரவலான, மிகச்
சாதாரணமான, கோடிக்கணக்கான முறை காணப்படும் முதலாளித்துவச் சமுதாயத்தின் உறவு முறையாகும்.
எல்லாமே- "வீடுகள்,
நிலங்கள், மரியாதை, பதவிகள், நாடுகள், முடியரசுகள், விருப்பார்வங்கள், திருப்திகள்,
மனச்சாட்சி, பெருமை, மனைவிகள், கணவன்மார்கள், குழந்தைகள், எஜமானர்கள், வேலையாட்கள்,
வாழ்க்கை, இரத்தம், உடல், ஆன்மா" -வாங்கி விற்கும் பொருளாகின்றன என்று முதலாளித்துவச்
சமுதாயத்தைப் பற்றி ஆங்கிலேய எழுத்தாளர் ஜான் பென் யான் எழுதுகிறார்.”
(“சமூக விஞ்ஞானம்” முன்னேற்றப் பதிப்பகம் – மாஸ்கோ- 1985)
No comments:
Post a Comment