Thursday, 28 December 2017

6. முதலாளித்துவத்தின் தோற்றம்

முதலாளித்துவம் நிலப்பிரபுத்துவத்தின் உட்பாகத்திலிருந்து தோன்றியது. நகரம் நாட்டுப்புறம் ஆகிய இரண்டிலும் சிறு உற்பத்தியாளர்களிடம் வேறுபாட்டு போக்கு நிகழ்ந்தது. இது மிகச் சிறிய எண்ணிக்கையுள்ள பணக்காரர்கள் தோன்றவும், கூலிக்கு உழைக்கும்படி கடமைப்படுத்தப்பட்ட எண்ணற்ற விவசாயிகள் கைவினைஞர்கள் ஆகியோரின் அழிவிற்கும் இட்டுச் சென்றது. பெருந்தொகையாகப் பணத்தைச் சேர்த்த வியாபாரிகளும் பெரிய சொத்துக்காரர்களாயினர். முதலாளித்துவத்தின் முன்தேவைகளின் தோற்றத்தை துரிதப்படுத்துவதில் கட்டாய நிர்பந்தம் முக்கிய பங்காற்றியது.

உழைப்பில் பற்றுள்ளவர்களும் சிக்கனமானவர்களும் முதலாளிகளானார்கள், வேலை செய்ய விருப்பமில்லாதவர்கள் பாட்டாளிகளாயினர் என்று பூர்ஷ்வா சிந்தாந்தவாதிகள் கூறுகிறார்கள். எது எவ்வாருயினும் எதார்த்தத்தில் உற்பத்திச் சாதனங்கள் பறிக்கப்பட்டவர்கள், எதிர்கால முதலாளிகளான பணக்காரர்கள் என இரு எதிர் துருவங்களாக சமுதாயம் பிரிவது மிருகத்தனமான கட்டாய நிர்பந்தத்தால் நடை பெற்றது. இதுமனிதகுல வரலாற்றில் ரத்தத்தாலும் நெருப்பாலும்' எழுதப்பட்டது”. (மூலதனம்-மார்க்ஸ்)

நேரடி உற்பத்தியாளர்களிடமிருந்து உற்பத்திச் சாதனங்கள் வலுக்கட்டாயமாகப் பிரிக்கப்பட்டு ஒரு சிலர் கைகளில் இவை குவிவதை ஆரம்பகால மூலதனத் திரட்சி என அழைக்கப்படுகிறது. ஆரம்பகாலத் திரட்சி என ஏன் அழைக்கப் படுகிறது எனில் அது முன்னேறியவுடன் உண்மையான முதலாளித்துவ திரட்சிக்கு முன்தேவைகள் உருவாக்கப் பட்டன, அதாவது கூலித் தொழிலாளர்களைச் சுரண்டுவது என்று பொருள்.
இங்கிலாந்தில் 15ம் நூற்ருண்டு முதல் 18ம் நூற்றண்டு வரை விவசாயப் பண்ணைகள் வலுக்கட்டாயமாகப் பறிக்கப்பட்டன. இது ஒரு குறிப்பிடத்தக்க உதாரணமாகும். நிலப்பிரபுக்கள் விவசாயிகளை அவர்களுடைய நிலங்களிலிருந்து விரட்டிவிட்டு அந்நிலங்களே ஆடுமேய்க்கும் நிலங்களாகப் பயன்படுத்தினர். விவசாயிகளே பாட்டாளிகளாயினர். அதே நேரத்தில் நிலப்பிரபுக்களிடத்திலும் வியாபாரிகளிடத்திலும் பணக்கார கைவினைஞர்களிடத்திலும் பெருந் தொகைப் பணம் குவிந்தது. காலனி நாட்டு மக்களிடமிருந்து அடித்த கொள்ளை, அடிமை வாணிபம் போன்றவை செல்வத் திரட்சிக்கான அடுத்த மூலாதாரமாகும். நிலப்பிரபுத்துவம் இறுதியாக பூர்ஷ்வா புரட்சிகளால் கவிழ்க்கப் பட்டது. அவற்றில் விவசாயிகளும் கைவினைஞர்களும் முக்கியமான புரட்சி சக்தியாக இருந்தனர்.


(அரசியல் பொருளாதாரத்தின் அடிப்படைகள்” எம்.என்.ரின்டினா, ஜி.பி.செர்னிக்கவ், ஜி.என்.ஹீடக்கோர்மவ் முன்னேற்றப் பதிப்பகம்)

No comments:

Post a Comment