முதலாளித்துவ
வளர்ச்சியில் இரு கட்டங்கள் உள்ளன. முதல் கட்டத்தில் சுதந்திரமான போட்டி ஆதிக்கம் செலுத்துகிறது.
முக்கியமாக உற்பத்திச் சாதனங்கள் தனிப்பட்ட முதலாளிகளுக்குச் சொந்தம். இரண்டாவது கட்டம்
20வது நூற்றண்டு திருப்பத்தில் தொடங்கியது. அதை ஏகபோக முதலாளித்துவம் அல்லது ஏகாதிபத்தியம்
என்போம். இந்தக் கட்டத்தில் பொருளாதாரம் அரசியல் ஆகியவற்றில் ஆதிக்கப் பங்கு வகிப்பது
பெரு முதலாளிகளின் சங்கங்களான ஏக போகங்களாகும். பங்கு முறைச் சொத்து மற்ற முதலாளித்துவ
சொத்துக்களை விட ஆதிக்கம் செலுத்துவதாகிறது. பொருளாதாரத்தில் பூர்ஷ்வா அரசின் தலையீடு
அதிகரிக்கிறது. அரசு-ஏகபோக முதலாளித்துவ அமைப்பு உருவாகிறது. முதலாளித்துவம் பொது நெருக்கடிக்குள்ளாகும்
போது ஏகாதிபத்தியம் ஒரு முடிவிற்கு வருகிறது. அதாவது அதனுடைய சிதைவின் சகாப்தத்திற்கு
வருகிறது. இந்தக் காலமானது மாபெரும் அக்டோபர் சோஷலிச புரட்சியால் முன்னறிவிக்கப்பட்டது.
முதலாளித்துவ
உற்பத்தி முறையானது மார்க்சால் அவருடைய “மூலதனம்” என்ற நூலில் பகுத்தாராயப்பட்டது.
அவர் விரித்துரைத்த கருத்துக்கள் லெனினுல் மேலும் அவ ருடைய நூலான “ஏகாதிபத்தியம்-முதலாளித்துவத்தின்
உச்சக் கட்டம்” என்ற நூலில் செழுமைப்படுத்தப்பட்டன.
(“அரசியல் பொருளாதாரத்தின் அடிப்படைகள்”
எம்.என்.ரின்டினா, ஜி.பி.செர்னிக்கவ், ஜி.என்.ஹீடக்கோர்மவ் முன்னேற்றப் பதிப்பகம்)
No comments:
Post a Comment