தனியார் உடைமை நிலைமைகளில் முதலாளித்துவத்தின் கீழ்
உற்பத்தி சமுதாயமயமாக்கப்படல் நடைபெறுகிறது. முதல் முதலாளித்துவத் தொழில் நிலையம் எளிய
முதலாளித் துவக் கூட்டுறவு என்ற உருவத்தில் இருந்தது. இதில் உற்பத்திச் சாதனங்கள் முதலாளிக்குச்
சொந்தமானவை. அவர் அவற்றை தானே கண்காணித்து உற்பத்திப் பொருள்களைத் தன் கட்டுப்பாட்டில்
வைத்திருந்தார். உற்பத்திப் பொருள்களின் பெரும் பகுதியை அவர் தனது உரிமையாக்கிக் கொண்டார்.
இந்தக் கூட்டுறவு உடல் உழைப்பின் அடிப்படையில் அமைந்தது. இருந்த போதிலும் இந்தக் கூட்டுறவு
உழைப்பின் உற்பத்தித் திறனை முன்னேறச் செய்தது; கூட்டு உழைப்பின் உற்பத்திச் சக்தியின்
தோற்றத்திற்கு வகை செய்தது; தொழிலை விருத்தியடையச் செய்தது. அது தொழிலாளிகளிடையே போட்டியையும்
ஏற்படுத்தியது.
எளிய கூட்டுறவு பட்டறைத் தொழில் முறையால் அகற்றப்பட்டது. அது எளிய கூட்டுறவைப் போல் அல்லாமல்
பட்டறை உழைப்புப் பிரிவினையைக் கொண்டது. ஒரேவகை பரிவர்த்தனைப் பண்டத்தைக் கூட்டாக உற்பத்தி
செய்வதற்காக வெவ்வேறு வகை தொழில்களைச் சார்ந்த கைவினைஞர்கள் ஒன்று சேர்ந்தது மூலமாகவோ,
ஒரேவகை தொழிலின் கட்டமைப்புக்குள் உழைப்புப் பிரிவினையைப் புகுத்தியது மூலமாகவோ அது
தோன்றியது. உழைப்பு பிரிவினையின் காரணமாக கைவினைஞர்கள் ஒவ்வொருவரும் உற்பத்தி போக்கின்
ஒரு பகுதியை இயக்குகிறவர்களாக மாறினர். ஒரு புறத்தில் இது உழைப்பின் உற்பத்தித் திறனை
அதிகரித்தது. மறுபுறத்தில் இந்த உழைப்பாளிகளால் அவர்களுடைய கைத்தொழிலை மீண்டும் அவர்களுடைய
செல்வில் இப்பொழுது ஆரம்பிக்க முடியவில்லை. இந்நிலை அவர்களே முதலாளிகளைச் சார்ந்து
இருக்கும்படி செய்தது.
பட்டறை முறை உழைப்புக் கருவிகளை மேம்பாடடையச் செய்தது.
அது இயந்திர உற்பத்திக்கு வழி வகுத்தது.
18ம் நூற்ருண்டின் இறுதியிலும் 19ம் நூற்ருண்டின்
ஆரம்பத்திலும் வளர்ச்சியுற்ற முதலாளித்துவ நாடுகள் பெருவீத இயந்திர உற்பத்திக்கு மாறத் தொடங்கின. தொழிற் புரட்சி என்ற நிகழ்ச்சிப்போக்கின்
பொழுது கைவினைஞர்களின் கருவிகள் இயந்திரங்களாக மாற்றப்பட்டன. இவ்வாறாக, முதலாளித்துவத்தின்
பொருளாயத-தொழில் நுணுக்க அடித்தளம் கட்டப்பட்டது.
முதலாளித்துவம் என்பது ஒரு சமூக அமைப்பு. அதன் கீழ்
எல்லா உழைப்புச் சாதனங்களும் முதலாளிகளுக்கே சொந்தம், அதே நேரத்தில் தொழிலாளிகளுக்கு
ஒன்றுமே கிடையாது. அவர்கள் அவர்களுடைய உழைப்புச் சக்தியை, உயிர் வாழ்வதற்காகக் கட்டாயமாக
விற்க வேண்டியிருக்கிறது. அடிமையுடைமை அமைப்பு, நிலப்பிரபுத்துவம் போலன்றி முதலாளித்துவ
சமுதாயத்தில் சுரண்டல் மறைக்கப்பட்டிருக்கிறது. தொழிலாளிகளுக்கும் முதலாளிகளுக்கும்
இடையேயுள்ள உறவானது சமமான பண்ட சொந்தக்காரர் களிடையேயுள்ள உறவைப் போலிருக்கும் என எண்ணப்படும்.
ஆனால் முதலாளித்துவ சுரண்டலின் இரகசியம் மார்க் சால் வெளிப்படுத்தப்பட்டது.
(“அரசியல் பொருளாதாரத்தின் அடிப்படைகள்”
எம்.என்.ரின்டினா, ஜி.பி.செர்னிக்கவ், ஜி.என்.ஹீடக்கோர்மவ் முன்னேற்றப் பதிப்பகம்)
No comments:
Post a Comment