வர்க்கப் பிரிவுள்ள ஒரு சமுதாயத்தில் அரசியல் பொருளாதாரம்
வர்க்க குணாம்சத்தைக் கொண்டதாக இருக்கும். எனவே முதலாளித்துவ சமுதாயத்தில் பூர்ஷ்வா
அரசியல் பொருளாதாரமும் பாட்டாளி வர்க்க (மார்க்சிய-லெனினிய) அரசியல் பொருளாதாரமும்
முறையே அந்தந்த வர்க்கத் நவீன நலன்களே வெளிப்படுத்திக்
கொண்டு இருக்கின்றன. நவீன பூர்ஷ்வா அரசியல் பொருளாதாரம் விஞ்ஞான ஆய்வுகளை அதாவது உண்மையைக்
காணும் ஆய்வினை செய்யவில்லை. முதலாளித்துவத்தைக்காக்கப் பல்வேறு சித்தாந்தங்களை கொடுப்பதும்,
மார்க்சிய-லெனினியத்தையும் இப்பொழுது நிலவி இருக்கும் சோஷலிசத்தையும் தாக்குவதும்,
முதலாளித்துவத்திற்கு முட்டுக்கட்டைக் கொடுக்க நடை முறை சாத்தியமான ஏதாவது ஒரு வழியைக்
கண்டுபிடிப்பதம் அதனுடைய நோக்கமாகும். இதில் பூர்ஷ்வா அரசியல் பாருளாதாரத்தின் கட்சி
உணர்வு, வர்க்க குணாம்சம் ஆகியவை அடங்கியுள்ளன. புறவயத்தன்மை, விஞ்ஞானத்தின் பாரபட்சமற்றத்
தன்மை ஆகியவற்றைப் பற்றிய பேச்சிற்குப் பின்னல் பூர்ஷ்வா பொருளாதாரவாதிகள் அரசியல்
பொருளாதாரத்தின் வர்க்க குணாம்சத்தை மறைக்க முயலுகின்றனர்.
மார்க்சிய-லெனினிய அரசியல் பொருளாதாரம் அதனுடைய விஞ்ஞான
பூர்வமான ஆராய்ச்சியால் சமுதாயத்தின் வளர்ச்சியை ஆளுகின்ற புறவய விதிகளை ஆய்ந்து,
தொழிலாளி வர்க்கத்தின் வரலாற்று முக்கியத்துவமுள்ள பணி முதலாளித்துவத்திற்குச்-சவக்
குழி தோண்டுவதும் கம்யூனிசத்தைக் கட்டுவதுமாகும் என்று தத்துவ ரீதியாக நிலை நாட்ட வழி
செய்கிறது. தொழிலாளி வர்க்குத்தின் அரசியல் பொருளாதாரம் மார்க்ஸ். எங்கெல்ஸ் ஸ்தாபிக்கப்பட்டது.
பின்னால் லெனினால் வளர்ச்சியடையப்பட்டது. சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சிக் காங்கிரசுகளின்
ஆணங்களிலும் மற்ற எல்லா மார்க்சிய-லெனினிய கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் கட்சிகள், அவற்றின் சர்வதேச கூட்டங்கள்
ஆகியவற்றின் ஆவணங்களில் மார்க்சிய-லெனினிய அரசியல் பொருளாதாரம் இன்று மேலும் வளர்க்கப்படுகிறது.
(“அரசியல் பொருளாதாரத்தின் அடிப்படைகள்”
எம்.என்.ரின்டினா, ஜி.பி.செர்னிக்கவ், ஜி.என்.ஹீடக்கோர்மவ் முன்னேற்றப் பதிப்பகம்)
No comments:
Post a Comment