"பண்டப் பரிவர்த்தனை
நடைபெறும் சமுதாயத்தில் கண்டிப்பாக பணம் நிலவும். பண்டப் பரிவர்த்தனையில் இது சர்வாம்சசமானமாக,
அதாவது மற்ற எல்லாப் பண்டங்களின் மதிப்பை வெளியிடக் கூடிய பண்டமாக பங்காற்றுகிறது.
பொதுவாக அங்கீகரிக்கப்பட்ட
பணப் பண்டமாக தங்கம் உள்ளது. தனது இயற்கைக் குணங்களால் தங்கம்தான் பணத்தின் சமுதாயப்
பணியை நிறைவேற்றுவதற்கு மிக வசதியானதாகும். இது எளிதாகப் பிரிக்கப்பட்டு, மதிப்பில்
எவ்வித இழப்புமின்றி பின் ஒன்றுசேர்க்கப்படுகிறது; கணிசமான மதிப்பிலும் குறைந்த அளவு
பரிமாணத்தையும் எடையையும் கொண்டுள்ளது.
...
சமுதாய உற்பத்தி உறவுகளின், அதாவது பண்ட உற்பத்தியும்
பரிவர்த்தனையும் நிலவும் உறவுகளின் வெளியீடு என்ற முறையில் மட்டுமே பணத்திற்கு அர்த்தம்
உள்ளது.
...
புழக்கத்திற்குத் தேவையான தங்கத்தின் அளவிற்கேற்ப
காகிதப் பணம் வெளியிடப்படும் என்றால் இவற்றின் வாங்கும் சக்தி தங்கப் பணத்தின் வாங்கும்
சக்திக்குச் சமமானதாக இருக்கும். ஆனால் சாதாரணமாக முதலாளித்துவ அரசு தனது செலவுகளை,
குறிப்பாக இராணுவச் செலவுகளைச் சரிகட்டு வதற்காகப் பண்டப் புழக்கத்தின் தேவைகளைக் கணக்கில்
கொள்ளாது தேவைக்கதிகமான காகிதப் பணத்தை வெளியிடுகிறது. காகிதப் பணத்தை இவ்வாறு அளவிற்கதிகமாக
வெளியிடுவது இதன் மதிப்பிழப்பை, பணவீக்கத்தை
ஏற்படுத்துகிறது. பணவீக்கம் தொழிலாளர்கள், உத்தியோகஸ்தர்களின் தோள்களில் கடும் பாரமாக
வீழ்கிறது, ஏனெனில் வாழ்க்கைக்குத் தேவையான சாதனங்களின் விலைகளை விட ஊதியம் மெதுவாக
உயருகிறது. சிறு பண்ட உற்பத்தியாளர்களாகிய பண்ணை உரிமையாளர்களும் விவசாயிகளும் கூட
இதனால் அவதியுறுகின்றனர்.
பணவீக்கம் முதலாளித்துவப் பொருளாதாரத்தை அச்சுறுத்தத்
துவங்கும் போது பூர்ஷ்வா அரசு பண முறையை வலுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.
இந்த நோக்கத்துக்காகப் பல்வேறு வகையான பணச் சீர்திருத்தங்கள் -முதலில் பணமதிப்பைக்
குறைப்பது, அதாவது பண அலகின் தங்க அளவைக் குறைப்பது - நிறைவேற்றப்படு கின்றன."
(“சமூக விஞ்ஞானம்” முன்னேற்றப் பதிப்பகம் – மாஸ்கோ- 1985)
No comments:
Post a Comment