உற்பத்தி உறவுகள் இறுதியாக உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சி,
குணம்சம், தரம் ஆகியவற்றைப் பொறுத்துள்ளன. புராதன சமுதாயத்தின் உற்பத்திச் சக்திகளின்
தாழ்ந்த நிலைக்கு ஏற்ப உற்பத்திச் சாதனங்களின் கூட்டுடைமை, கூட்டுழைப்பு, சமமான வினியோகம்
ஆகியவை இருந்தன. உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சி இறுதியாக உற்பத்தி உறவுகளில் ஒரு மாற்றத்தை
ஏற்படுத்தியது. எது எப்படியாயினும் சமுதாய உற்பத்தி உறவுகள் செயலற்றவையாக இல்லை. அவை
உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியின் மீது செல்வாக்குச் செலுத்துகின்றன. புதிய உற்பத்தி
உறவுகள் உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியை மேம்படச் செய்கிறது. ஆனல் பின்னால் அவை இவற்றின்
மேல் ஒரு தடையாகச் செயல் படுகின்றன. உற்பத்தி சக்திகளும் அவற்றின் சமுதாய வடிவமும்
ஒன்றுடன் ஒன்று முரண்படுகின்றன. இத்தகைய முரண்பாடு சமுதாயப் புரட்சிக்கான பொருளாதார
அடிப்படையை அமைக்கிறது.
உற்பத்தியில் சமூக உறவுகளைப் பற்றி அரசியல் பொருளாதாரம்
ஆராயும் பொழுது உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியின் மீது அவற்றின் தாக்கத்தைக் கவனிக்கிறது.
இக்காரணத்தினால் தற்காலத்திய விஞ்ஞான-தொழிற்நுட்ப புரட்சியின் காரணங்களும் அதன் விளைவுகளும்
போன்றப் பிரச்சினைகள் அரசியல் பொருளாதாரத்தின் ஆய்வுப் பொருளுக்குள் வருகின்றன.
உற்பத்திச் சக்திகளும் உற்பத்தி உறவுகளும் ஒரு குறிப்பிட்ட
வரலாற்று இணைப்பில் உற்பத்தி முறையை உருவாக்கு கின்றன. ஐந்து வகையான உற்பத்தி முறைகள்
உள்ளன. அவையாவன: புராதன-கூட்டுவாழ் குழு உற்பத்தி முறை, அடிமையுடைமை உற்பத்தி முறை,
நிலப்பிரபுத்துவ உற் பத்தி முறை, முதலாளித்துவ உற்பத்தி முறை, கம்யூனிச உற்பத்தி முறை.
கம்யூனிச உற்பத்தி முறையின் முதல் கட்டம்தான் சோஷலிசம்,
(“அரசியல் பொருளாதாரத்தின் அடிப்படைகள்” எம்.என்.ரின்டினா, ஜி.பி.செர்னிக்கவ், ஜி.என்.ஹீடக்கோர்மவ்
முன்னேற்றப் பதிப்பகம்)
No comments:
Post a Comment