Thursday 16 March 2023

4) முதலாளித்துவ உற்பத்தியின் நோக்கம் - – தி.கே.மித்தேராபோல்ஸ்கி

உபரி மதிப்பை மூலதனமாக மாற்றுவது, அதைப் புதிய உபரி மதிப்பை உற்பத்தி செய்வதற்காகப் பயன்படுத்துவது ஆகியவை தான் முதலாளித்துவ உற்பத்தியின் நோக்கம். சாத்தியமான அளவு குறைந்த செலவில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு உபரி மதிப்பைப் பெற முதலாளிகள் எப்போதும் முயற்சிக்கிறார்கள். இந்த நோக்கத்திற்கு எல்லா சாத்தியமான வழிகளையும் பயன்படுத்துகிறார்கள். 

மூலதனம் உபரி மதிப்பிற்கான அசாதாரணப் பேராசையை வெளிக்காட்டுகிறது. ஒரு பிரிட்டிஷ் தொழிற்சங்கவாதி கூறினார், இயற்கை எப்படி சூன்யத்தைக் கண்டு அஞ்சுகிறதோ அதேபோல, மூலதனம், லாபமின்மை அல்லது குறைந்த லாபம் என்பதைக் கண்டு பயப்படுகிறது. ஆனால், போதிய அளவு லாபம் இருக்கிற வரை அது திமிர்பிடித்ததாகிறது. நீங்கள் 10 சதவிகித லாப விகிதத்தை உத்தரவாதம் செய்தால் எந்த நிபந்தனைக்கும் சம்மதிக்கிறது. 20 சதவீத லாபம் அதை உற்சாகப்படுத்துகிறது. 50 சதவிகித லாபத்தில் உண்மையில் அதன் கழுத்தை நெரித்துக் கொள்ளத் தயார். 100 சதவிகித லாபத்தில் எல்லாவித மனித நியதிகளையும் காலில் போட்டு மிதிக்கிறது. அது 300 சதவிகித லாபம் பெறமுடியுமானால், தூக்குத் தண்டனையே கிடைக்கு மானால் கூட அது எந்தக் கொடும் குற்றத்தையும் செய்ய அது தயங்காது.

அடிமை உடைமை சமுதாயத்திலும் நிலப்பிரபுத்துவ சமுதாயத்திலும் காணப்படாத உபரி மதிப்பிற்கான வேட்கை, உற்பத்தி வளர்ச்சிக்கு ஒரு சக்தி வாய்ந்த தூண்டு கோலாக இருக்கிறது. இந்தத் தூண்டுகோல், முதலில் ஐரோப்பாவிலும், வட அமெரிக்காவிலும், பின்னர் உலகம் முழுமையும் பெருவீத இயந்திரத் தொழிலைப் படைத்தது. அதேசமயத்தில் உபரி மதிப்பிற்கான வேட்கை (முயற்சி) முதலாளிகளுக்கும் தொழிலாளிகளுக்கும் இடையிலான முரண்பாடுகளை வளர்த்து, முதலாளித்துவ உற்பத்தி வளர்ச்சிக்கு ஒரு முரண்பாட்டுத் தன்மையை ஏற்படுத்தியது. ஒரு முதலாளிக்கு, உபரிமதிப்பை உற்பத்தி செய்கிற அந்த உழைப்புத்தான் “உற்பத்தித் தன்மையுடையது” உபரி மதிப்பை அதிகப்படுத்துவதற்காக ஒவ்வொரு முதலாளியும் தொழிலாளியிடமிருந்து எவ்வளவு முடியுமோ அவ்வளவு உபரி உழைப்பைக் கசக்கி எடுக்க முயற்சிக்கிறான்.

உபரி மதிப்பை அதிகப்படுத்த இரண்டு வழிகள் இருக்கின்றன. ஸ்தூலமான உதாரணத்தின் அடிப்படையில் இதைப் பரிசீலிப்போம். ஒருவேளை நாள் 10 மணி நேரம் கொண்டது எனவும், அதில் 5 மணி நேரம் அவசிய உழைப்பு நேரம் எனவும் 5 மணி நேரம் உபரி உழைப்பு நேரம் எனவும் வைத்துக்கொள்வோம்.

5 மணி நேரம்                 5 மணிநேரம்

அவசிய நேரம்                 உபரி நேரம்

இதில் சுரண்டலின் அளவு அல்லது உபரி மதிப்பு விகிதம்

(பின் வருமாறு இருக்கும்)

5 மணி உபரி நேரம்

                              X     100ரூ  = 100ரூ

5 மணி அவசிய நேரம்

No comments:

Post a Comment