மார்க்சியம், என்பது
காரல் மார்க்ஸ் தமது கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் எழுதிய கருத்துக்கள் முழுவதையும்
குறிப்பதாகும். இதில் தத்துவம், அரசியல் பொருளாதாரம், விஞ்ஞான சோஷலிசம் என்ற மூன்று
உட்பிரிவுகள் கொண்டுள்ளது. மூன்று உட்பிரிவுகளும் தம்முள் உள்ளிணைப்புக் கொண்டவையாகும்.
தத்துவம் என்பது இயற்கை,
சமூகம் பற்றிய அறிதலின் பொதுவான விதிகளை பற்றிய விஞ்ஞானமாகும்.
அரசியல் பொருளாதாரம்
என்பது மனிதச் சமூக வாழ்வின் அடித்தளமான பொருளாயாதச் செல்வ உற்பத்தியை எடுத்துரைக்கிறது.
அதாவது உற்பத்தியின் சமூக அமைப்பு, உற்பத்தி நிகழ்வின் போது மனிதர்களிர்களுக்கு இடையே
ஏற்படுகிற பொருளாதார உறவுகள், மனித சமூக வளர்ச்சியில் தோன்றுகின்ற பொருளாயத நலன்கள்,
மற்றும் உற்பத்தி, வினியோகம், பரிவர்த்தனை
போன்றவற்றை நிர்வகிக்கும் விதிகளை ஆராய்கிறது.
விஞ்ஞான சோஷலிசம் என்பது
அரசியல் பொருளாதாரத்தையும், தத்துவத்தையும் ஆதாரமாகக் கொண்டு முதலாளித்துவ சமூக நிலைமைகளையும்,
முரணையும், அது இறுதியில் அழிந்து போவது பற்றியும், அதன் தொடர்ச்சியாக நிகழும் சோஷலிச
புரட்சியினை எட்டும் நியதிகளையும் வெளிப்படுத்துகிறது.
பொருளாதார முறையே சமூக
வளர்ச்சியின் அடித்தளம் என்றும், இந்த அடித்தளமே மேற்கட்டமைப்பான தத்துவம், அரசியல்,
மதம், சட்டம் போன்றவற்றை நிர்ணயிக்கிறது என்றும் மார்க்சியம் கூறுகிறவகையில் அரசியல் பொருளாதாரமே முதன்மையானதாகிறது.
No comments:
Post a Comment