Tuesday, 4 September 2012

3. பண்பாடு


இயற்கை மனிதனுக்கு எவ்வளவோ படைத்தளித்திருக்கிறது. மனிதன் படைத்தளிப்பதை பண்பாடு என்றழைக்கப்படுகிறது. லத்தீன் மொழியில் பண்பாடு என்றால் பயிரிடல், அதாவது இயற்கை நிலங்களில் தமக்கு தேவையான உணவிற்காக, (வேளாண்மை) பயிரிடப்படுவதைக் குறிக்கிறது. பொதுவாக இதை இயற்கை ஆற்றல்களை மனிதன் வெற்றிக் கொண்டதை கருத்தில் கொண்டு இவ்வாறழைக்கப்பட்டதுமனிதயினம் தமக்கு தேவைப்படும் உணவை சேகரிக்கும் நிலையிலிருந்து, பயிரிடும் நிலைக்கு உயர்ந்ததை இங்கு பண்பாடு என்று குறிப்பிடப்படுகிறது.

முதலாளித்துவச் சிந்தனையாளர்கள், பண்படுத்துதல் என்பதை முதன்மைப்படுத்திமனிதனது உற்பத்தி நடவடிக்கைகளுக்கு அப்பால், மனிதனின் தன்னியல்பில் பண்பாட்டின் தோற்றத்தைக் காண்கின்றனர். மார்க்சியம் பண்பாட்டை தனிநபரிடையே, தானேயான வளர்ச்சியாக பார்க்காமல்பொருளாயத வாழ்க்கையின் உற்பத்தி நடவடிக்கையின் போது மனிதனிடம் தோற்றம் பெறுவதாக கூறுகிறது. பண்பாடென்பது எல்லாத் துறைகளிலும் உள்ள மனிதனது செற்பாட்டில்ஈடுபடும் உடல், அறிவு அகியவற்றின் முழுமையிலும் அடங்கியிருக்கிறது. இச் செயற்பாட்டின் போது நடைபெறும் முறைகளிலும்படைப்பாற்றலில் உள்ள நேர்த்தியிலும், மதிப்புகளிலும், விளைவுகளிலும்உள்ளது. அந்தந்த காலகட்டங்களில் உள்ள சமூகம், நாடுகள் படைத்தளித்த சாதனையின் தனித்தன்மையில் பண்பாட்டின் வளர்ச்சி காணப்படுகிறது.

                மார்க்சியம் பண்பாட்டை சமூக வளர்ச்சியின், அந்தந்த காலகட்டத்தில் காணப்படும் பண்புவழிப்பட்ட வளர்ச்சியாக காண்கிறது. பண்பாடென்பது சமூக உற்பத்தி மற்றும் அறிவுத்துறையின் முயற்சி என்று வரையறுக்கிறது. பண்பாடு சமூக உற்பத்திச் சக்திகளிலும் உற்பத்தி உறவுகளிலும் ஏற்பட்டுள்ள வளர்ச்சியின் கட்டத்தில் உள்ள பொருளாயத மற்றும் அறிவுத்துறைகளிலும் உள்ள தனித்தன்மையில் வெளிப்படுகிறது. அதாவது, பண்பாடென்பது பொருளாயத மற்றும் அறிவுத்துறைச் சாதனைகளின் முழுமையிலும், சமூகத்தின் பண்பாட்டு மரபுத் தொடர்ச்சியிலும் அடங்கியிருக்கிறது.

                பண்டைய மனிதன் முதலில் கையாண்ட கரடுமுரடான கற்கள், தடித்த கழிகள் போன்றவற்றை தனது கைகளில் எடுத்து கையாண்ட போது மனிதயினத்தின் பண்பாட்டின் வளர்ச்சி தொடங்கியது. இயற்கையை எதிர்த்து நடத்துவதில், அதாவது மனிதயினம் தானே தனக்கு வேண்டியதை படைத்துக் கொண்டதிலிருந்து, இது தொடங்குகிறது. இன்றைய கட்டத்தில், முதலாளித்துவ சமூகத்தில் பிரமாண்டமான வளர்ச்சியாக காட்சியளிக்கிறது. முந்தைய தலைமுறையினரின் பண்பாட்டை இதுவரை வளர்ச்சியுற்றுவந்த கருவிகளிலும், இயந்திரங்களிலும், கோயில் வடிவிலும், பல்லடுக்க மாளிகையிலும் பொருளாயத பண்பாட்டு வளர்ச்சியினை காண முடிகிறது.

பண்டைய கம்யூனிச சமூகத்தின் மறைவிலும் அடிமைச் சமூகத்தின் தொடக்கத்திலும்  குறிப்பாக அறிவுத்துறைப் பண்பாட்டில், வர்க்கத்தன்மை பெறத்தொடங்குகிறது. பகைமை கொண்ட வர்க்கச் சமூகத்தில் பண்பாட்டு உள்ளடக்கத்திலும், செயற்பாட்டிலும் வர்க்கத் தன்மை பெற்றதாக காட்சியளிக்கிறது

மனிதயினம் வாழவேண்டு என்னும் போராட்டத்தில் தமது திறமைகளை வளர்த்துக் கொள்ளும் போது பண்பாடும் வளர்கிறது. அப்போது மனித சமூகத்தில் செய்திறன், பழக்கவழக்கங்கள் மற்றும் நெறிமுறைகள் ஆகியவை உருபெற்று வளர்ச்சியடைகிறது.

சமூகத்தின் உந்துவிசையாக வர்க்கப்போராட்டம் அமைகிறது. சுரண்டல் சமூகத்தில் உற்பத்தியில் ஈடுபடும் மக்கள்  வர்க்க பிரிவாக செயல்பட்டு வர்க்க அமைப்பாக வளர்கிறது. அன்றைய அமைப்பின் அடித்தளத்தமேஅன்றைய பொருளாயத மற்றும் அறிவுத்துறையின் பண்பாட்டைத் தீர்மானிக்கிறது.

ஒருகுறிப்பிட்ட சமூக அமைப்பின் வளர்ச்சிக்கு அடிப்படையாக இருப்பது பண்பாட்டு வளர்சியா? அல்லது  உற்பத்தி சக்திகளாஏன்ற கேள்வி எழுப்பப்படுகிறது. இந்த இடம் பலரை தடுமாற வைத்திடுகிறது.

வர்க்க சமூகத்தை சரியானபடி அறிந்து கொள்ளாததால் இந்த தடுமாற்றம் ஏற்படுகிறது. மார்க்சியம் கூறுகிறது, உற்பத்தி சத்தியின் வளர்ச்சியில் தான் உற்பத்தி உறவுகளின் வளர்ச்சி அடங்கியிருக்கிறது, இந்த உற்பத்தி முறையின் வளர்ச்சியிலிருந்து தான் இதை விட மேலான உற்பத்தி முறைக்கு மாறுகிறது. இந்த மாற்றத்தை பண்பாட்டு வளர்ச்சியிலிருந்து பார்ப்பவர்களுக்கு, மார்க்ஸ் விளக்கும் வர்க்கச் சமூகக் கொள்கையை பற்றிய சரியான புரிந்தல் இல்லை. சமூகம் தனியுடைமையாக ஆனதிலிருந்து, வர்க்கம் தோன்றியது, வர்க்க சமூகத்தின் உற்பத்தியின் அடித்தளதிலிருந்தான் பண்பாடு நிர்ணயிக்கப்படுகிறது. இதனை மறுப்பவர்களும், ஏற்றுக்கொள்ள முடியாதவர்களும் மார்க்சியத்திற்கு மாறான முடிவிற்கே வரமுடியும். (இந்நூலின் இறுதியியலில் இதனை சுருக்கமாக விவரிக்கப்படுகிறது)

                பண்பாடு இரண்டு தளங்களில் செயல்பெறுகிறது, அது பொருளாயதம் மற்றும் அறிவுத்துறை ஆகியவையாகும். மார்க்சியம் இந்த இரண்டிற்கும். இடையேயுள்ள உறவையும், சார்பையும் வலியுறுத்துகிறது. அறிவுத்துறை இரண்டாம் நிலையினதாகவும், சார்புநிலையில் சுதந்திரம் பெற்றதாகவும் இருக்கிறதுமற்ற சமூக நிகழ்வுகளைப் போல், பண்பாடும் குறிப்பிட்ட பொருளாதார அமைப்பிற்கு பொருத்தமான மேற்கட்டமைப்பாய் இருக்கிறது. ஒவ்வொரு சமூக பொருளாதார அமைப்பிற்கு ஏற்ற பண்பாடுகள் காணப்படுவதைக் கொண்டு இதனை அறிந்துகொள்ளலாம்.

                பொருளாயத பண்பாடு, சமூகம் இயற்கையை வெற்றிக் கொண்ட அளவைக் காட்டுவதாக இருக்கிறது. உழைப்புக் கருவிகளின் தரம், பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம், தொழிலாளியின் தொழில் திறம் மற்றும் அன்றைய அறிவியல் வளர்ச்சியின் சாதனங்கள் ஆகியவற்றில் அடங்கியிருக்கிறது. உழைப்புக் கருவிகளின் வளர்ச்சி, பொருளாயத பண்பாட்டின் உள்ளடக்கமாக இருக்கிறது.

                பொருளாத பண்பாட்டின் வளர்ச்சியை அறிந்து கொள்வதற்கு, சமூகத்தில் காணும் பண்படுத்திய நிலம், உடை, உறைவிடம், மக்களால் பயன்படுத்தப்படும், மரம் மற்றும் உலோகத்தைக் கொண்டு உருவாக்கிய சாமான்கள், தொழில் கூடங்கள், மாடமாளிகைகள், மற்றும் கல்வி, அறிவியல், மருத்துவம் ஆகியவற்றில் உள்ள வளர்ச்சியின் சாதனைகளில் காணலாம். பொருளாயத பண்பாடு வர்க்க சமூகத்தின் தனியுடைமைத் தன்மையை வெளிப்படுத்துகிறது.

                கருத்துக்கள், சமூக நெறிமுறைகள், கலைவடிவங்கள் மற்றும், நூல்கள், ஓவியங்கள், நாடகம், நடனம், திரைப்படம், ஊடகம் மற்றும் இவற்றோடு இணைந்த அழகியல் ஆகியவை அறிவுத்துறையைச் சார்ந்த பண்பாடாகும். இதுவரை சேகரித்து வைத்துள்ள அறிவு, அனுபவம், விழுமியம், பழகுமுறைகள் ஆகியவை இதைச் சார்ந்ததாகும். இந்த அறிவுத்துறை பண்பாட்டு, வர்க்கச் சார்பை வெளிப்படுத்தும் பகுதியாக இருக்கிறது. ஆதனால் தான் இதனை அறிவுத்துறை ஒடுக்குமுறை என்று லெனின் கூறினார். பாட்டாளி வர்க்கத்தின் அறிவுத்துறை பண்பாடு அவர்களது வாழ்வின் போராட்டத்தில் தோற்றம் பெற்று வளர்ச்சியடைகிறது.

No comments:

Post a Comment