எம்.என்.ரின்டினா, ஜி.பி.செர்னிக்கவ்,
ஜி.என்.ஹீடக்கோர்மவ் :-
“ஒரு பரிவர்த்தனைப் பண்டத்தின் குணங்கள் அது உற்பத்தி செய்யப்பட்ட உழைப்பின் இரட்டை குணாம்சத்தால் தீர்மானிக்கப்படுகின்றன. ஒவ்வொரு உற்பத்தியாளரும் குறிப்பிட்ட ஒரு வகை பொருளை உற்பத்தி செய்யும் வேலையில் ஈடுபடுகிறார். உதாரணமாக அவர் துணி, காலணிகள், மரச் சாமான்கள் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை செய்யலாம், ஒவ்வொரு குறிப்பிட்ட விதமான உற்பத்தி நடவடிக்கையும் ஸ்தூலமான உழைப்பாகும். பல்வேறு விதமான ஸ்தூலமான உழைப்பு, அவற்றின் நோக்கம், உழைப்பிலடங்கிய நடவடிக்கைகள், உழைப்புப் பொருள்கள், கருவிகள், உழைப்பின் விளைவுகள் ஆகியவற்றைப் பொறுத்து மாறுபடுகின்றன. பரிவர்த்தனைப் பண்டத்தின் உபயோக மதிப்பை ஸ்தூல மான உழைப்பு உருவாக்குகிறது.
…
ஸ்தூலமான உழைப்பு வகைகளில் வேற்றுமைகள் இருந்த போதிலும் அவைகளிடையே பொதுவான ஒன்று உள்ளது. தசை, நரம்பு ஆகியவற்றின் ஆற்றலை, அதாவது உடலியல் என்ற கருத்தில் மனித உழைப்புச் சக்தியை ஈடுபடுத்துவதில் ஒற்றுமையுள்ளது. இது பரிவர்த்தனைப் பண்டங்களை ஒப்பிட சாத்தியமாக்குகிறது.
செலவழிக்கப்படக்கூடிய உழைப்பு வகையைப் பொருட்படுத்தாமல், பொதுவாக மனித உழைப்புச் சக்தியின் செலவு சூட்சும உழைப்பு எனப்படும். இந்த அடிப்படையில் எல்லா பரிவர்த்தனைப் பண்டங்களையும் நன்றாக இறுகிப்போன சூட்சும உழைப்பின் மொத்தங்களாக ஒப்பிடலாம். அவை அளவில் மட்டும் வேறுபட்டிருக்கலாம். பரிவர்த்தனைப் பண்டத்தின் மதிப்பு சூட்சும உழைப்பால் உருவாக்கப்படுகிறது. பல்வேறு விதமான உழைப்புகளை ஒப்பிட வேண்டிய பரிவர்த்தனைப் பண்ட உற்பத்தியின் கீழ் மட்டுமே அது நிலவுகிறது. ஸ்தூலமான உழைப்பு எல்லா சமூக-பொருளாதார அமைப்புகளிலும் உள்ளது. ஸ்தூல மான உழைப்பு, சூட்சும உழைப்பு என்ற பிரிவினை பரிவர்த்தனைப் பண்ட உற்பத்தியில் மட்டுமே உரிய குணாம்சமாகும்.”
((அரசியல்
பொருளாதாரத்திக் அடிப்படைகள் – பக்கம் -43-44 )
No comments:
Post a Comment