ஒரு பண்டத்தின் மதிப்பு அப்பண்டத்துக்காக செலவாகிய பொது வடிவிலான உழைப்பாகும். ஆனால் பயன் - மதிப்புகளைத் தோற்றுவிக்கும் உழைப்பு தேர்ச்சித் தரத்தில் வேறுபடக் கூடும்.
தேர்ச்சியற்ற தொழிலாளர் பூர்வாங்கப் பயிற்சி பெறாதவர். ஆனால் உருக்குத் தொழிலாளி, கடைசல் தொழிலாளி, நெசவாளி போன்றவர்கள் அவரவரது வேலைகளுக்கு அவசியமான பயிற்சியைப் பெற்றாக வேண்டும். முதலாவது வகைப் பட்டது சாமானிய உழைப்பாகும் (simple
labour), இரண்டாவது வகைப்பட்டது சிக்கலான உழைப் பாகும் (complex labour).
ஒரு பண்டம் மிகவும் சிக்கலான உழைப்பைக் கொண்டு செய்யப்பட்டதாய் இருக்கலாம். ஆனால் அதன் மதிப்பு அதைச் சாமானிய உழைப்பால் செய்யப்பட்ட பண்டத்துக்கு ஈடான தாக்குகிறது. சிக்கலான உழைப்பு சாமானிய உழைப்பின் பன்மடிப் பெருக்கமாகும்; அதாவது சாமானிய உழைப்பால் உற்பத்தி செய்வதற்குப் பல மணி நேரம் தேவைப்படும் மதிப்பைச் சிக்கலான உழைப்பு ஒரு மணி நேரத்தில் உற்பத்தி செய்து விடுகிறது.
(அரசியல்
பொருளாதாரம்- முன்னேற்றப் பதிப்பகம் - பக்கம்-64-65)
No comments:
Post a Comment