Tuesday, 6 March 2018

08) சாமானியப் பண்ட உற்பத்தியின் முரண்பாடு– லெவ் யோன்டிவெவ்


தனியார் சொத்தின் அடிப்படையில் அமைந்த ஒரு சமுதாயத்தில் ஒவ்வொரு பண்ட உற்பத்தி யாளரும் அவர் -சிறிய கைவினைஞராயினும் சரி, பெரிய முதலாளியானாலும் சரி- தமது சொந்தப் பொறுப்பில் செயல்படுகிறவராய் இருக்கிறார். பண்ட உற்பத்தியாளர் ஒவ்வொருவரும் சுயேச் கசையாய்ச் செயல்படுகிறார், அவருடைய பொருற்பத்தி அவருக்குச் சொந்தமான தனியார் தொழிலாகவும், அவருடைய உழைப்பு தனியார் உழைப்பாகவும் இருக்கிறது.

அதேபோது பண்ட உற்பத்தியாளர் ஒவ்வொருவரும் ஏனைய பண்ட உற்பத்தியாளர்களைச் சார்ந்தவராகவும் இருக்க வேண்டியுள்ளது. பிழைப்புச் சாதனங்களைப் பெறுவதற்காகவும் தமது தொழிலை நடத்திச் செல்வதற்காகவும் அவர் தமது உற்பத்திப் பண்டங்களைப் பரிவர்த்தனை செய்தாக வேண்டியிருக்கிறது; அதாவது அவற்றை விற்றுத் தமக்கு வேண்டிய மூலப் பொருள்களையும் கருவிகளையும், தமக்கும் தமது குடும்பத் தாருக்கும் வேண்டிய நுகர்வுப் பொருள்களையும் வாங்கியாக வேண்டும். தனிப்பட்ட ஓர் உற்பத்தி யாளரின் உழைப்பானது சமுதாயத்தால் அதனுடைய தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்காகச் செலவிடப்படும் மொத்த உழைப்பில் ஒரு பிரத்தியேக பங்காய் அமைந்தாக வேண்டியிருக்கிறது. பண்டத்தில் உருக் கொண்டிருக்கும் சமூக உழைப்புதான் அப்பண்டத்தின் மதிப்பாகிறது. சாமானியப் பரிவர்த்தனைப் பண்ட உற் பத்தியிலுள்ள முரண்பாடு தனியார் உழைப்புக்கும் சமூக உழைப்புக்கும் இடையிலான முரண்பாட்டில் அடங்கியுள்ளது, முதலாளித்துவத்தில் இந்த முரண்பாடு மேலும் வளர்ந்து செல்கிறது.
(அரசியல் பொருளாதாரம்- முன்னேற்றப் பதிப்பகம் - பக்கம்-65-66)


No comments:

Post a Comment