Sunday 4 March 2018

பண்டத்தை உற்பத்தி செய்யும் உழைப்பின் இரட்டைத் தன்மை



பி.நிக்கிடின்;-
“பண்டத்தினை உருவாக்கும் உழைப்பின் இரு பண்புகள் பண்டத்தின் இரு தன்மைகளையும் விளக்குகின்றன. பண்டத்தினை உரு வெளித் தோற்றமாகக் கொண்ட உழைப்பு, ஒரு பக்கம் ஸ்தூல மானதாகவும் மறுபக்கம் சூக்குமமான தாகவும் செயலாற்றுகிறது.

ஸ்தூலமான உழைப்பானது, குறிப்பிட்ட நோக்கமுள்ள, LIயனுள்ள உழைப்பு வடிவத்தைச் சுட்டுகிறது. இலக்கில்லாது, ''பொதுவாக” ஒருவன் வேலை செய்ய முடியாது. செருப்புத் தைத்தல், பயிரிடல், கனிமம் தோண்டி எடுத்தல் போன்ற குறிப்பிட்ட தொழில் ஒன்றில் ஈடுபடுகிறான்.
உழைப்பின் பல உருவங்கள் பண்பு, திறமை, கருவிகள், பயன்படும் பொருள்கள், முடிவுப் பலன்கள், அதாவது உற்பத்திப் பொருள்கள், பயன் மதிப்புகள் என்று பலவாறு வேறுபடுகின்றன. ஸ்தூலமான உழைப்பு பண்டத்தின் பயன் மதிப்பைப் படைக்கிறது.

இவ்வாறு பல்வகை உழைப்பை உற்று நோக்கும் பொழுது அவை எல்லாவற்றுக்கும் பொதுவான சிறப்பினைக் கண்டு தெளியலாம்-மனித உழைப்பு பொதுவானதாக உள்ளது, அதாவது, அது வினைபடும் பொழுது சதை, மூளை, நரம்புகள், பிற உறுப்புகளின் சக்தி செலவழிக்கப்படுகிறது. ஸ்தூலமான உருவிலிருந்து உழைப்பு தனியே பரிசீலிக்கப் படும் பொழுது, உழைப்பு மனித சக்தியின் செயலாற்றல் என்ற நிலையில் அது சூக்குமமான உழைப்பு எனப்படுகிறது. ஆகவே, சூக்குமமான உழைப்பு பண்டத்தின் மதிப்பாகிறது.  

ஸ்தூலமான உழைப்பு, பயன் மதிப்பைப் படைப்பதனால், பண்ட உற்பத்தி இருந்தாலும் இல்லாவிட்டாலும் எப்பொழுதும் இருந்து வந்துள்ளது, இனியும் இருக்கும். சூக்குமமான உழைப்பு பண்ட உற்பத்திக்கே இயல் பாயமைந்தது. பல்வேறு வகையான ஸ்தூல மான உழைப்பு ஒரேவொரு சூக்குமமான உழைப்பாக, பொது உழைப்பாகக் குறுகும் போக்கு பண்ட உற்பத்தியோடு, பொருள் விற்பனைக்காக உற்பத்தி செய்யப்படுகிறது என்ற உண் மையோடு உறவுடையது. ஒரு உற்பத்தியாளர் ஒரு பண்டத்தை, மிதியடி என்று வைத்துக் கொள்வோம், செய்வானேயானால் அதனைச் சந்தையில் எப்படி வேறு பண்டத்துக்காக, தானியம் என்று வைத்துக் கொள்வோம், பரிவர்த்தனை செய்ய முடியும்? பயன் மதிப்புகள் அடிப்படையில் இப்பொருள்கள் ஒப்பு நோக்கத் தகுந்தவையல்ல. அதாவது, அவற்றை உற்பத்தி செய்வதற்காகச் செலவிடப்படும் உழைப்பளவினடிப்படையில் அவை ஒப்பு நோக்கத்தகுந்தவை என்பது தான் இதற்குப் பொருள்.

எடுத்துக்காட்டாக, மிதியடித் தொழிலாளி  ஒரு கோடி மிதியடிகளை 100 கிலோ கிராம் தானியத்துக்குப் பரிவர்த்தனை செய்கின்றார் என்றால், ஒரு கோடி மிதியடிகளை உற்பத்தி செய்யச் செலவிடப்பட்ட சூக்குமமான உழைப்பின் அளவும் 100 கிலோகிராம் தானியம் உற்பத்தி செய்யச் செலவிடப்பட்ட சூக்கும மான உழைப்பின் அளவும் சமம். அம் மிதியடிகள் தொழிலாளியின் குடும்பத் துக்குப் பயன்படுத்தப்படுமானால், அவற்றில் எவ்வளவு சூக்கும்மான் உழைப்பு உள்ளார்ந்து இயல்பாக உள்ளது என்றறியத் தேவையில்லை. பண்ட உற்பத்தி அழியும் பொழுது சூக்குமமான உழைப்பும் அழிகிறது.”

(அரசியல் பொருளாதாரத்தின் அடிப்படைகள்- பக்கம் -71-72.
முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ.)

No comments:

Post a Comment