உற்பத்தியாளர்கள் முற்றிலும் ஒரே மாதிரியான பண்டத்தின் உற்பத்திக்கு வெவ்வேறு அளவில் உழைப்பைச் செலவிடலாம். ஆனால் பண்ட நுகர்வாளர் தனிப்பட்ட ஓர் உற்பத்தியாளர் அந்தப் பண்டத்தின் உற்பத்திக்கு எவ்வளவு உழைப்பு செலவிட்டார் என்பது குறித்துக் கவலைப்படுவதில்லை.
பண்டத்தின் மதிப்பு குறிப்பிட்ட அந்தந்த உற்பத்தியாளரும் அதன் உற்பத்திக்காகச் செலவிட்ட உழைப்பின் அளவைப் பொறுத்திருக்கவில்லை, குறிப்பிட்ட சமுதாயத்தில் உற்பத்தியின் வினை நுட்பம் அடைந்திருக்கும் வளர்ச்சி நிலைக்கு இயல்பான நிலைமைகளில், சராசரியான தேர்ச்சி நிலைக்கும் செறிவுக்குமுரிய உழைப்பைக் கொண்டு அந்தப் பண்டத்தை உற்பத்தி செய்வதற்குத் தேவையான உழைப்பு நேரத்தின் அளவால் தான் இம்மதிப்பு நிர்ணயிக்கப்படுகிறது.
ஒரு பண்டத்தை உற்பத்தி செய்வதற்குத் தேவையான சராசரி உழைப்பு நேரமே சமூக வழியில் அவசியமான உழைப்பு நேரம்
(socially neces Belly
labour time) எனப்படுவது. சமூக வழியில் அவசியமான இந்த உழைப்பு நேரம் தான் அந்தப் பண்டத்தின் மதிப்பை நிர்ணயம் செய்கிறது.
(அரசியல்
பொருளாதாரம்- முன்னேற்றப் பதிப்பகம் - பக்கம்-62-63)
No comments:
Post a Comment