Friday, 29 December 2017

03. பண்டத்தின் பண்புகள்

உபயோக மதிப்பு:-

"பண்டம் என்பது பரிவர்த்தனைக்காக உற்பத்தி செய்யப்பட்ட உழைப்பின் விளைபொருளாகும். இது ஏதாவது மனிதத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்பது தெளிவு, இல்லாவிடில் இதை யாரும் வாங்கமாட்டார்கள். பொருளின் பயன்தன்மை, மக்களின் ஏதாவதொரு தேவையைப் பூர்த்தி செய்யும் குணம் உபயோக மதிப்பு என்றழைக்கப்படுகிறது.

ரொட்டி, சர்க்கரை, வெண்ணெய், பால், இறைச்சி ஆகியவை மனிதர்களின் உணவுத் தேவையை பூர்த்தி செய்கின்றன என்பதில் தான் இவற்றின் உபயோக மதிப்பு (பயன் மதிப்பு) அடங்கியுள்ளது.
…
உபயோக மதிப்புகள் என்பதே பொருட்கள், பொருளாயத நலன்கள் ஆகும். எந்த ஒரு சமுதாயத்திலும் இவை செல்வத்தின் பொருட் சாரத்தை உருவாக்குகின்றன. ஆனால் பண்டத்தின் உபயோக மதிப்பு, இயற்கைப் பொருளாதாரத்தில் விளைபொருளின் உபயோக மதிப்பிலிருந்து மாறுபடுகிறது. இயற்கைப் பொருளாதாரத்தில் விளைபொருட்கள் உற்பத்தியாளர்களைப் பொறுத்த மட்டில்தான் உபயோக மதிப்பைப் பெற்றுள்ளன, பண்டங்களுக்குச் சமுதாய உபயோக மதிப்பு, அதாவது சமுதாயத்தின் மற்ற உறுப்பின்ர்களுக்கான உபயோக மதிப்புதான் உள்ளது. செருப்பு தைப்பவன் தனக்காக இல்லாமல் மற்றவர்களுக்காகச் செருப்புக்களை உற்பத்தி செய்கிறான்.

பரிவர்த்தனை மதிப்பு;-

பண்டங்களை மக்கள் வாங்கினால் இவற்றை அவர்கள் பயன்படுத்தலாம். ஒரு குறிப்பிட்ட தொகையைக் கொண்டு ஒரு குளிர்பதன பெட்டி அல்லது நான்கு ஆண்டுகளுக்கான கோட்டுகள் அல்லது மூன்று தையல் இயந்திரங்களை வாங்கலாம். இது எதைக் குறிக்கிறது? அதாவது முற்றிலும் வெவ்வேறான பண்டங்களில், குறிப்பிட்ட ஒரு விகிதத்தில் இவற்றை ஒன்றுடன் ஒன்று ஒப்பிடவல்ல எதோ ஒரு பொது அம்சம் உள்ளது என்பதைக் குறிக்கிறது. இந்தப் பொது அம்சம் பௌதீக, இரசாயன அல்லது வேறு எதோ இயற்கைக் குணங்கள் அல்ல. இவையனைத்தும் மனித உழைப்பின் விளைபொருட்கள் என்பதுதான் பொது அம்சமாகும். இதுதான் இவற்றை ஒப்பிடத்தக்கவையாக்குகிறது.

பண்டங்களை ஒன்றுடன் ஒன்று ஒப்பிடுகையில் மக்கள் உண்மையில் அவற்றில் உள்ள உழைப்பை ஒப்பிடுகின்றனர். பண்டங்களில் அடங்கியுள்ள உழைப்பு பண்டத்தின் மதிப்பை (பரிவர்த்தனை மதிப்பு) உருவாக்குகிறது.

சமுதாய ரீதியாக அவசியமான வேலை நேரம்:-

பண்ட உற்பத்தியாளர்கள் ஒரே மாதிரியான நிலைமைகளில் வேலை செய்வதில்லை. வெவ்வேறு உழைப்புக் கருவிகளைப் பயன்படுத்துகின்றனர். சமமற்ற திறமைகளைக் கொண்டுள்ளனர், இவர்கள் ஒரே விதமான பண்டங்களின் உற்பத்திக்கு வெவ்வேறு அளவு நேரங்களைச் செலவிடுகின்றனர். ஆனால் சந்தையில் ஒரே விதமான பண்டங்களுக்கு ஒரே மாதிப்புதான் உள்ளது. எனவே பண்ட மதிப்பின் அளவு உற்பத்தி மற்றும் உற்பத்தியாளனின் தனிப்பட்ட சிறப்பியல்புகளைப் பொறுத்திருப்பதில்லை. இது மேலோங்கி நிற்கக் கூடிய உழைப்பு நிலைமைகளாலும் சமுதாய ரீதியாக அவசிமான வேலை நேரத்தாலும் நிர்ணயிக்கப்படுகிறது.

காலணிகளை உற்பத்தி செய்யும் மூன்று பண்ட உற்பத்தியாளர் பிரிவுகள் இருப்பதாக வைத்துக் கொள்வோம். ஒரு சிலர் 7 நிமிடங்களிலும் அடுத்தவர்கள் 10 நிமிடங்களிலும் மூன்றாமவர்கள் 14 நிமிடங்களிலும் ஒரு ஜோடி செருருப்புகளைத் தைக்கின்றனர். இதில முதலாவது மற்றும் மூன்றாவது பிரிவுகள் சிறியவை, சிறிதளவு காலணிகளைத் தான் இப்பிரிவுகள் உற்பத்தி செய்து சந்தைக்கு அன்புகின்றன. இரண்டாவது பிரிவுதான் பெரும்பாலான காலணிகளை உற்பத்தி செய்கிறது.

சமுதாய ரீதியாக அவசியமான நேரம் எது?

இரண்டாவது பிரிவு செலவழிக்கும் 10 நிமிடம்தான் இந்த நேரம். ஏனெனில் சமுதாய ரீதியாக அவசியமான நேரம், குறிப்பிட்ட துறையில் பெரும்பான்மை பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் வேலை நேரத்தோடு ஒத்துப் போகிறது அல்லது நெருக்கமாயுள்ளது.

இப்போது நம்மால மதிப்பு என்ற கருதுகோளை வரையறுக்க இயலும். மதிப்பு என்பது பண்டத்தின் உற்பத்திக்காக செலவிடப்பட்ட சமுதாய ரீதியாக அவசியமான உழைப்பு ஆகும்.

மதிப்பு என்பது பண்ட உற்பத்திக்கு மட்டுமே உரிய ஒரு வரலாற்றுப் புலப்பாடு ஆகும். எங்கெல்லாம் எப்போதெல்லாம் உழைப்பின் விளைபொருட்கள் பண்டங்களாக விளங்குகின்றனவோ, பரஸ்பரம் பரிவர்த்தனை செய்து கொள்ளப்படுகிறதோ அங்கெல்லாம் மதிப்பு நிலவுகிறது.

இயற்கைப் பொருளாதாரச் சூழநிலைகளில் – இதன் விளைபொருட்கள் சந்தைக்கு வருவதில்லை – மதிப்புக்குச் சமுதாய அவசியம் இல்லை. கம்யூனிசச் சமுதாயத்தின் உயர் கட்டத்திலும் இது இருக்காது. ஏனெனில் அப்போது பண்ட உற்பத்தி உதிர்ந்து விடும். எனவே மதிப்பு பொருட்களின் குணமல்ல, இது பண்டங்களை உற்பத்தி செய்யக் கூடிய மனிதர்களுக்கு இடையேயான சமுதாய உறவுகளைக் குறிக்கிறது."

(“சமூக விஞ்ஞானம்” முன்னேற்றப் பதிப்பகம் – மாஸ்கோ- 1985)

02. பண்டமும் பண்ட உற்பத்தியும்

“முதலாளித்துவத்தில் பண்ட உற்பத்தி முழு ஆதிக்கம் செலுத்துகிறது. பண்டம் என்பது பரிவர்த்தனைக்காக உற்பத்தி செய்யப்பட்ட உழைப்பின் விளைபொருள். பண்ட உற்பத்தி என்பது சமுதாயப் பொருளாதாரத்தின் ஒரு ஒழுங்கமைப்பாகும். இதில் பொருட்கள் சொந்த உபயோகத்திற்காக இல்லாமல் விற்பதற்காக உற்பத்தி செய்யப்படுகின்றன.

எந்த நிலைமைகளில் பொருட்கள் பண்டங்களாகின்றன?

இதற்கு முதலாவதாக சமுதாய உழைப்புப் பிரிவினை நிலவ வேண்டும். இதில் மக்கள் தமக்கு வேண்டிய எல்லாவற்றையும் தாமே உற்பத்தி செய்வதில்லை, மாறாக ஏதோ ஒரு வித நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர், ஏதோ சில பொருட்களின் உற்பத்தியில் தேர்ச்சி பெறுகின்றனர். இரண்டாவதாக, உற்பத்திச் சாதனங்கள் தனிப்பட்ட நபர்களின் அல்லது குழுக்களின் சொத்தாக இருக்க வேண்டும். இச்சந்தர்ப்பத்தில் பண்டங்களை வாங்குவதும் விற்பதும் பொருளாதார அவசியமாக மாறுகின்றன.

முதலாளித்துவப் பண்ட உற்பத்தி நிலப்பிரபுத்துவச் சமுதாயத்தின் உள்ளே தோன்றியது.

கைத்தொழிலுக்கும் விவசாயத்திற்கும், நகரத்திற்கும் கிராமத்திற்கும் இடையிலுள்ள சமுதாய உழைப்புப் பிரிவினே வலுவடைந்ததானது நிலப்பிரபுத்துவப் பொருளாதாரம் படிப்படியாக சந்தை உறவுகளினுள் இழுக்கப்பட்டு பணத்தின் அதிகாரத்தின் கீழ் வருவதற்கு இட்டுச் சென்றது. பண்ட உறவுகளின் வளர்ச்சி நிலப்பிரபுத்துவத்தின் சிதைவிற்கான அடிப்படையை உருவாக்கியது. பிரபுக்களின் கோட்டைச் சுவர்களைக் குண்டுகள் துளைப்பதற்கு நெடுங் காலம் முன்னதாகவே அவற்றின் அடிப்படைகளைப் பணம் குலைத்திருந்தது என்று பி. எங்கெல்ஸ் எழுதினர்.

சாதாரணப் பண்டஉற்பத்தி மற்றும் முதலாளித்துவப் பண்ட் உற்பத்தியின் சிறப்பு அம்சங்களை ஒப்பிடுவோம். இரண்டுமே சமுதாய உழைப்புப் பிரிவினையையும் உற்பத்திச் சாதனங்கள் மற்றும் உழைப்பின் விளைபொருட்களின் மீதான தனியுடைமையையும் அடிப்படையாகக் கொண்டன. இதில் தான் இவற்றின் பொதுமை அடங்கியுள்ளது. ஆனல் சாதாரணப் பண்ட உற்பத்தியில் உழைப்பின் விளைபொருட்கள் அவற்றை உற்பத்தி செய்தவர்களுக்கு (கைத்தொழிலாளர்கள், விவசாயிகள்) சொந்தமாயிருக்கும் என்றால் முதலாளித்துவ உற்பத்தியில் இவை யாரிடம் உற்பத்திச் சாதனங்கள் உள்ளதோ, யார் கூலித் தொழிலாளர்களின் உழைபபன் பயனை அபகரிக்கின்றார்களோ அவர்களுக்குச் சொந்தம்.

முதலாளித்துவத்திற்கு வெகுகாலம் முன்னரே பண்டப் பரிவர்த்தனை நிலவியது என்றாலும் முதலாளித்துவத்திற்கு முந்தைய அமைப்புகளில் பொருளாதாரம் பெரும்பாலும் இயற்கையானதாக இருந்தது. ஒவ்வொரு நிலப்பிரபுத்துவப் பண்ணையும் தனிப்பட்ட வாழ்க்கையை நடத்தியது, வெளியுலகுடனான பரிவர்த்தனையைக் கிட்டத்தட்ட நாடவேயில்லை, ஏனெனில் நிலச்சுவாந்தாருக்கும் அவனது அடியாட்களுக்கும் தேவையான அனைத்தும் பண்ணையடிமைகள் மற்றும் அவர்களின் கிழிருந்த கைத்தொழிலாளர்களின் உழைப்பால் உற்பத்தி செய்யப்பட்டது.

விவசாயப் பண்ணேயும் இயற்கையானதாயிருந்தது. விவசாயிகள் தானியச் சாகுபடி, கால்நடை வளர்ப்பு ஆகியவற்றோடு கூட நெசவு வேலைகளைச் செய்தனர், காலணிகள் மற்றும் உழைப்புக் கருவிகளைத் தயாரித்தனர். நிச்சயமாக இயற்கைப் பொருளாதாரத்திலும் ஒரு சில உழைப்பின் விளைபொருட்கள் (உப்பு, இரும்பு, மளிகைப் பொருட்கள், ஆடம்பரப் பொருட்கள்) சந்தையில் பண்டங்களாகப் பரிவர்த்தனை செய்து கொள்ளப்பட்டன; ஆனால் இத்தகைய பரிவர்த்தனை இரண்டாம் பட்சமாகத்தான் இருந்தது, ஏனெனில் சிறிய அளவு பொருட்கள்தான் விற்கப்பட்டன.

முதலாளித்துவத்தில் ஆலைகளும் தொழிற்சாலைகளும் விவசாயப் பண்ணைகளும் சாதாரணமாக விற்பதற்காக தமது பொருட்களை உற்பத்தி செய்கின்றன. முதலாளித்துவச் சமுதாயத்தில் வாழ்க்கையின் எல்லாத் துறைகளிலும் பண்ட-பண உறவுகள் ஊடுருவி நிற்கின்றன. பண்டப் பரிவர்த்தனை என்பது மிகப் பரவலான, மிகச் சாதாரணமான, கோடிக்கணக்கான முறை காணப்படும் முதலாளித்துவச் சமுதாயத்தின் உறவு முறையாகும்.

எல்லாமே- "வீடுகள், நிலங்கள், மரியாதை, பதவிகள், நாடுகள், முடியரசுகள், விருப்பார்வங்கள், திருப்திகள், மனச்சாட்சி, பெருமை, மனைவிகள், கணவன்மார்கள், குழந்தைகள், எஜமானர்கள், வேலையாட்கள், வாழ்க்கை, இரத்தம், உடல், ஆன்மா" -வாங்கி விற்கும் பொருளாகின்றன என்று முதலாளித்துவச் சமுதாயத்தைப் பற்றி ஆங்கிலேய எழுத்தாளர் ஜான் பென் யான் எழுதுகிறார்.”

(“சமூக விஞ்ஞானம்” முன்னேற்றப் பதிப்பகம் – மாஸ்கோ- 1985)

01. முதலாளித்துவம்

(“சமூக விஞ்ஞானம்” என்ற மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம் 1985ல் வெளியிட்ட நூலில் இருந்து முதலாளித்துவம் பற்றிய சில பகுதிகளை தொடர்ந்து பார்க்கலாம். இந்நூலை கி.ஷஹ்நஸாரவ், அ.போபரீக்கின், யூ.சிராஸின், வி.சுகதேயெவ் ஆகியோர் எழுதியுள்ளனர்.)

"முதலாளித்துவம் மனிதனை மனிதன் சுரண்டுவதை அடிப் படையாகக் கொண்ட கடைசி சமூக-பொருளாதார அமைப்பாகும்

17-19ம் நூற்றாண்டுகளின் முதலாளித்துவப் புரட்சிகளின் விளைவாய் மேற்கு ஐரோப்பாவில் முதலாளித்துவம் நிலைபெற்ற போது, நிலப்பிரபுத்துவத்துடன் ஒப்பிடுகையில் புதிய சமுதாய அமைப்பு முற்போக்கானதாக இருந்தாலும் உழைப்புச் சுரண்டலை அது ஒழிக்கவில்லை, இதன் வடிவத்தை மட்டுமே மாற்றுகிறது என்பதை பல சிந்தனையாளர்கள் சுட்டிக் காட்டினர். ஷார்ல் ஃபூரியே, ராபர்ட் ஒவன், மற்ற கற்பனவாத சோஷலிஸ்டுகள் முதலாளித்துவ முறைகளைக் கூர்மையாக விமரிசித்தனர். ஆனால் அவர்களாலோ, பூர்ஷ்வா அரசியல் பொருளாதாரத்தின் பிரதிநிதிகளாலோ உழைப்பை மூலதனம் சுரண்டுவதன் முறையைக் கண்டுபிடிக்கும் முக்கியக் கடமையைத் தீர்க்க இயலவில்லை. விஞ்ஞான கம்யூனிசத்தின் ஆசான்கள்தான் இக்கடமையை நிறைவேற்றினார்கள்.


தனது மேதாவிலாசம் மிக்க நூலாகிய மூலதனத்தில் கா. மார்க்ஸ் பின்வருமாறு எழுதினர்: "முதலாளித்துவ உற்பத்தி முறையும் இதற்கேற்ற உற்பத்தி மற்றும் பரிவர்த் தனை உறவுகளும் இந்நூலில் எனது ஆராய்ச்சிப் பொருளாக உள்ளன". பொருளாயத நலன்களின் உற்பத்தியையும் வினியோகத்தையும் நிர்ணயிக்கக் கூடிய விதிகளைக் கண்டுபிடித்த கா. மார்க்ஸ், முதலாளித்துவத்தின் தவிர்க்க இயலாத அழிவு மற்றும் சோஷலிசத்தின் வெற்றியின் காரணங்கள் சமுதாய வாழ்வின் பொருளாதார நிலைமைகளில் வேரூன்றியுள்ளன என்று காட்டினார்."

02. பண்டமும் பண்ட உற்பத்தியும்
03. பண்டத்தின் பண்புகள்
04. பணம்
05. மதிப்பு விதி
06. உபரி மதிப்பு – மூலதனம் உழைப்பைச் சுரண்டும் விதம்
07. ஏகாதிபத்தியம்
08. முதலாளித்துவத்தின் பொது நெருக்கடி
09. முதலாளித்துவ பொது நெருக்கடியின் கட்டங்கள்

Thursday, 28 December 2017

8. முதலாளித்துவ வளர்ச்சியின் கட்டங்கள்

முதலாளித்துவ வளர்ச்சியில் இரு கட்டங்கள் உள்ளன. முதல் கட்டத்தில் சுதந்திரமான போட்டி ஆதிக்கம் செலுத்துகிறது. முக்கியமாக உற்பத்திச் சாதனங்கள் தனிப்பட்ட முதலாளிகளுக்குச் சொந்தம். இரண்டாவது கட்டம் 20வது நூற்றண்டு திருப்பத்தில் தொடங்கியது. அதை ஏகபோக முதலாளித்துவம் அல்லது ஏகாதிபத்தியம் என்போம். இந்தக் கட்டத்தில் பொருளாதாரம் அரசியல் ஆகியவற்றில் ஆதிக்கப் பங்கு வகிப்பது பெரு முதலாளிகளின் சங்கங்களான ஏக போகங்களாகும். பங்கு முறைச் சொத்து மற்ற முதலாளித்துவ சொத்துக்களை விட ஆதிக்கம் செலுத்துவதாகிறது. பொருளாதாரத்தில் பூர்ஷ்வா அரசின் தலையீடு அதிகரிக்கிறது. அரசு-ஏகபோக முதலாளித்துவ அமைப்பு உருவாகிறது. முதலாளித்துவம் பொது நெருக்கடிக்குள்ளாகும் போது ஏகாதிபத்தியம் ஒரு முடிவிற்கு வருகிறது. அதாவது அதனுடைய சிதைவின் சகாப்தத்திற்கு வருகிறது. இந்தக் காலமானது மாபெரும் அக்டோபர் சோஷலிச புரட்சியால் முன்னறிவிக்கப்பட்டது.

முதலாளித்துவ உற்பத்தி முறையானது மார்க்சால் அவருடைய “மூலதனம்” என்ற நூலில் பகுத்தாராயப்பட்டது. அவர் விரித்துரைத்த கருத்துக்கள் லெனினுல் மேலும் அவ ருடைய நூலான “ஏகாதிபத்தியம்-முதலாளித்துவத்தின் உச்சக் கட்டம்” என்ற நூலில் செழுமைப்படுத்தப்பட்டன.


(“அரசியல் பொருளாதாரத்தின் அடிப்படைகள்” எம்.என்.ரின்டினா, ஜி.பி.செர்னிக்கவ், ஜி.என்.ஹீடக்கோர்மவ் முன்னேற்றப் பதிப்பகம்)

7. முதலாளித்துவ உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியும் உற்பத்தி உறவுகளும்

தனியார் உடைமை நிலைமைகளில் முதலாளித்துவத்தின் கீழ் உற்பத்தி சமுதாயமயமாக்கப்படல் நடைபெறுகிறது. முதல் முதலாளித்துவத் தொழில் நிலையம் எளிய முதலாளித் துவக் கூட்டுறவு என்ற உருவத்தில் இருந்தது. இதில் உற்பத்திச் சாதனங்கள் முதலாளிக்குச் சொந்தமானவை. அவர் அவற்றை தானே கண்காணித்து உற்பத்திப் பொருள்களைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். உற்பத்திப் பொருள்களின் பெரும் பகுதியை அவர் தனது உரிமையாக்கிக் கொண்டார். இந்தக் கூட்டுறவு உடல் உழைப்பின் அடிப்படையில் அமைந்தது. இருந்த போதிலும் இந்தக் கூட்டுறவு உழைப்பின் உற்பத்தித் திறனை முன்னேறச் செய்தது; கூட்டு உழைப்பின் உற்பத்திச் சக்தியின் தோற்றத்திற்கு வகை செய்தது; தொழிலை விருத்தியடையச் செய்தது. அது தொழிலாளிகளிடையே போட்டியையும் ஏற்படுத்தியது.

எளிய கூட்டுறவு பட்டறைத் தொழில் முறையால் அகற்றப்பட்டது. அது எளிய கூட்டுறவைப் போல் அல்லாமல் பட்டறை உழைப்புப் பிரிவினையைக் கொண்டது. ஒரேவகை பரிவர்த்தனைப் பண்டத்தைக் கூட்டாக உற்பத்தி செய்வதற்காக வெவ்வேறு வகை தொழில்களைச் சார்ந்த கைவினைஞர்கள் ஒன்று சேர்ந்தது மூலமாகவோ, ஒரேவகை தொழிலின் கட்டமைப்புக்குள் உழைப்புப் பிரிவினையைப் புகுத்தியது மூலமாகவோ அது தோன்றியது. உழைப்பு பிரிவினையின் காரணமாக கைவினைஞர்கள் ஒவ்வொருவரும் உற்பத்தி போக்கின் ஒரு பகுதியை இயக்குகிறவர்களாக மாறினர். ஒரு புறத்தில் இது உழைப்பின் உற்பத்தித் திறனை அதிகரித்தது. மறுபுறத்தில் இந்த உழைப்பாளிகளால் அவர்களுடைய கைத்தொழிலை மீண்டும் அவர்களுடைய செல்வில் இப்பொழுது ஆரம்பிக்க முடியவில்லை. இந்நிலை அவர்களே முதலாளிகளைச் சார்ந்து இருக்கும்படி செய்தது.

பட்டறை முறை உழைப்புக் கருவிகளை மேம்பாடடையச் செய்தது. அது இயந்திர உற்பத்திக்கு வழி வகுத்தது.

18ம் நூற்ருண்டின் இறுதியிலும் 19ம் நூற்ருண்டின் ஆரம்பத்திலும் வளர்ச்சியுற்ற முதலாளித்துவ நாடுகள் பெருவீத இயந்திர உற்பத்திக்கு மாறத் தொடங்கின. தொழிற் புரட்சி என்ற நிகழ்ச்சிப்போக்கின் பொழுது கைவினைஞர்களின் கருவிகள் இயந்திரங்களாக மாற்றப்பட்டன. இவ்வாறாக, முதலாளித்துவத்தின் பொருளாயத-தொழில் நுணுக்க அடித்தளம் கட்டப்பட்டது.

முதலாளித்துவம் என்பது ஒரு சமூக அமைப்பு. அதன் கீழ் எல்லா உழைப்புச் சாதனங்களும் முதலாளிகளுக்கே சொந்தம், அதே நேரத்தில் தொழிலாளிகளுக்கு ஒன்றுமே கிடையாது. அவர்கள் அவர்களுடைய உழைப்புச் சக்தியை, உயிர் வாழ்வதற்காகக் கட்டாயமாக விற்க வேண்டியிருக்கிறது. அடிமையுடைமை அமைப்பு, நிலப்பிரபுத்துவம் போலன்றி முதலாளித்துவ சமுதாயத்தில் சுரண்டல் மறைக்கப்பட்டிருக்கிறது. தொழிலாளிகளுக்கும் முதலாளிகளுக்கும் இடையேயுள்ள உறவானது சமமான பண்ட சொந்தக்காரர் களிடையேயுள்ள உறவைப் போலிருக்கும் என எண்ணப்படும். ஆனால் முதலாளித்துவ சுரண்டலின் இரகசியம் மார்க் சால் வெளிப்படுத்தப்பட்டது.


(“அரசியல் பொருளாதாரத்தின் அடிப்படைகள்” எம்.என்.ரின்டினா, ஜி.பி.செர்னிக்கவ், ஜி.என்.ஹீடக்கோர்மவ் முன்னேற்றப் பதிப்பகம்)

6. முதலாளித்துவத்தின் தோற்றம்

முதலாளித்துவம் நிலப்பிரபுத்துவத்தின் உட்பாகத்திலிருந்து தோன்றியது. நகரம் நாட்டுப்புறம் ஆகிய இரண்டிலும் சிறு உற்பத்தியாளர்களிடம் வேறுபாட்டு போக்கு நிகழ்ந்தது. இது மிகச் சிறிய எண்ணிக்கையுள்ள பணக்காரர்கள் தோன்றவும், கூலிக்கு உழைக்கும்படி கடமைப்படுத்தப்பட்ட எண்ணற்ற விவசாயிகள் கைவினைஞர்கள் ஆகியோரின் அழிவிற்கும் இட்டுச் சென்றது. பெருந்தொகையாகப் பணத்தைச் சேர்த்த வியாபாரிகளும் பெரிய சொத்துக்காரர்களாயினர். முதலாளித்துவத்தின் முன்தேவைகளின் தோற்றத்தை துரிதப்படுத்துவதில் கட்டாய நிர்பந்தம் முக்கிய பங்காற்றியது.

உழைப்பில் பற்றுள்ளவர்களும் சிக்கனமானவர்களும் முதலாளிகளானார்கள், வேலை செய்ய விருப்பமில்லாதவர்கள் பாட்டாளிகளாயினர் என்று பூர்ஷ்வா சிந்தாந்தவாதிகள் கூறுகிறார்கள். எது எவ்வாருயினும் எதார்த்தத்தில் உற்பத்திச் சாதனங்கள் பறிக்கப்பட்டவர்கள், எதிர்கால முதலாளிகளான பணக்காரர்கள் என இரு எதிர் துருவங்களாக சமுதாயம் பிரிவது மிருகத்தனமான கட்டாய நிர்பந்தத்தால் நடை பெற்றது. இது “மனிதகுல வரலாற்றில் ரத்தத்தாலும் நெருப்பாலும்' எழுதப்பட்டது”. (மூலதனம்-மார்க்ஸ்)

நேரடி உற்பத்தியாளர்களிடமிருந்து உற்பத்திச் சாதனங்கள் வலுக்கட்டாயமாகப் பிரிக்கப்பட்டு ஒரு சிலர் கைகளில் இவை குவிவதை ஆரம்பகால மூலதனத் திரட்சி என அழைக்கப்படுகிறது. ஆரம்பகாலத் திரட்சி என ஏன் அழைக்கப் படுகிறது எனில் அது முன்னேறியவுடன் உண்மையான முதலாளித்துவ திரட்சிக்கு முன்தேவைகள் உருவாக்கப் பட்டன, அதாவது கூலித் தொழிலாளர்களைச் சுரண்டுவது என்று பொருள்.
இங்கிலாந்தில் 15ம் நூற்ருண்டு முதல் 18ம் நூற்றண்டு வரை விவசாயப் பண்ணைகள் வலுக்கட்டாயமாகப் பறிக்கப்பட்டன. இது ஒரு குறிப்பிடத்தக்க உதாரணமாகும். நிலப்பிரபுக்கள் விவசாயிகளை அவர்களுடைய நிலங்களிலிருந்து விரட்டிவிட்டு அந்நிலங்களே ஆடுமேய்க்கும் நிலங்களாகப் பயன்படுத்தினர். விவசாயிகளே பாட்டாளிகளாயினர். அதே நேரத்தில் நிலப்பிரபுக்களிடத்திலும் வியாபாரிகளிடத்திலும் பணக்கார கைவினைஞர்களிடத்திலும் பெருந் தொகைப் பணம் குவிந்தது. காலனி நாட்டு மக்களிடமிருந்து அடித்த கொள்ளை, அடிமை வாணிபம் போன்றவை செல்வத் திரட்சிக்கான அடுத்த மூலாதாரமாகும். நிலப்பிரபுத்துவம் இறுதியாக பூர்ஷ்வா புரட்சிகளால் கவிழ்க்கப் பட்டது. அவற்றில் விவசாயிகளும் கைவினைஞர்களும் முக்கியமான புரட்சி சக்தியாக இருந்தனர்.


(“அரசியல் பொருளாதாரத்தின் அடிப்படைகள்” எம்.என்.ரின்டினா, ஜி.பி.செர்னிக்கவ், ஜி.என்.ஹீடக்கோர்மவ் முன்னேற்றப் பதிப்பகம்)

5. அரசியல் பொருளாதாரத்தில் கட்சி உணர்வு

வர்க்கப் பிரிவுள்ள ஒரு சமுதாயத்தில் அரசியல் பொருளாதாரம் வர்க்க குணாம்சத்தைக் கொண்டதாக இருக்கும். எனவே முதலாளித்துவ சமுதாயத்தில் பூர்ஷ்வா அரசியல் பொருளாதாரமும் பாட்டாளி வர்க்க (மார்க்சிய-லெனினிய) அரசியல் பொருளாதாரமும் முறையே அந்தந்த வர்க்கத்  நவீன நலன்களே வெளிப்படுத்திக் கொண்டு இருக்கின்றன. நவீன பூர்ஷ்வா அரசியல் பொருளாதாரம் விஞ்ஞான ஆய்வுகளை அதாவது உண்மையைக் காணும் ஆய்வினை செய்யவில்லை. முதலாளித்துவத்தைக்காக்கப் பல்வேறு சித்தாந்தங்களை கொடுப்பதும், மார்க்சிய-லெனினியத்தையும் இப்பொழுது நிலவி இருக்கும் சோஷலிசத்தையும் தாக்குவதும், முதலாளித்துவத்திற்கு முட்டுக்கட்டைக் கொடுக்க நடை முறை சாத்தியமான ஏதாவது ஒரு வழியைக் கண்டுபிடிப்பதம் அதனுடைய நோக்கமாகும். இதில் பூர்ஷ்வா அரசியல் பாருளாதாரத்தின் கட்சி உணர்வு, வர்க்க குணாம்சம் ஆகியவை அடங்கியுள்ளன. புறவயத்தன்மை, விஞ்ஞானத்தின் பாரபட்சமற்றத் தன்மை ஆகியவற்றைப் பற்றிய பேச்சிற்குப் பின்னல் பூர்ஷ்வா பொருளாதாரவாதிகள் அரசியல் பொருளாதாரத்தின் வர்க்க குணாம்சத்தை மறைக்க முயலுகின்றனர்.

மார்க்சிய-லெனினிய அரசியல் பொருளாதாரம் அதனுடைய விஞ்ஞான பூர்வமான ஆராய்ச்சியால் சமுதாயத்தின் வளர்ச்சியை ஆளுகின்ற புறவய விதிகளை ஆய்ந்து, தொழிலாளி வர்க்கத்தின் வரலாற்று முக்கியத்துவமுள்ள பணி முதலாளித்துவத்திற்குச்-சவக் குழி தோண்டுவதும் கம்யூனிசத்தைக் கட்டுவதுமாகும் என்று தத்துவ ரீதியாக நிலை நாட்ட வழி செய்கிறது. தொழிலாளி வர்க்குத்தின் அரசியல் பொருளாதாரம் மார்க்ஸ். எங்கெல்ஸ் ஸ்தாபிக்கப்பட்டது. பின்னால் லெனினால் வளர்ச்சியடையப்பட்டது. சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சிக் காங்கிரசுகளின் ஆணங்களிலும் மற்ற எல்லா மார்க்சிய-லெனினிய கம்யூனிஸ்ட்  மற்றும் தொழிலாளர் கட்சிகள், அவற்றின் சர்வதேச கூட்டங்கள் ஆகியவற்றின் ஆவணங்களில் மார்க்சிய-லெனினிய அரசியல் பொருளாதாரம் இன்று மேலும் வளர்க்கப்படுகிறது.


(“அரசியல் பொருளாதாரத்தின் அடிப்படைகள்” எம்.என்.ரின்டினா, ஜி.பி.செர்னிக்கவ், ஜி.என்.ஹீடக்கோர்மவ் முன்னேற்றப் பதிப்பகம்)