ஒவ்வோர் உற்பத்தி முறைக்கும் அதற்கென்று அமையும்
பங்கீட்டு முறை உண்டு; உற்பத்தி உறவுகளே பங்கீட்டு உறவுகளை நிர்ணயிக்கின்றன.
முதலாளித்துவத்தில், சுரண்டும் வர்க்கங்களின் நலன்
கருதியே பங்கீடு நடைபெறுகிறது. தொழிலாளர் உழைப் பால் உருவான சமூக உற்பத்திப் பொருளின்
பெரும் பகுதியை, அதாவது உபரி மதிப்பு என்பதனைச் சுரண்டும் வர்க்கம் அங்கே தன தாக்கிக்
கொள்கிறது. இப்பங்கீடு உழைப்பின்படி நடக்காமல் மூலதனத்தின்படி நடக்கிறது.
சோஷலிசத்தில், மொத்தச் சமூக உற்பத்திப் பொரு ளின்
பங்கீடு சோஷலிச விரிவாக்க புனருற்பத்தியின் தொடக் கமும் பொருளாயத அடிப்படையும் ஆகும்.
அந்த மொத்தச் சமூக உற்பத்திப் பொருளின் ஒரு பங்கு, உற் பத்திச் சாதனங்கள் பயன்படுத்தப்பட்ட
பிறகு அவற்றிற்குப் பதிலாக உபயோகிக்கப்படுகிறது. இன்னொரு பங்கு தேசிய வருவாயாக விளங்குகிறது.
முழுச் சமூக நலன் கருதி அது வினியோகம் செய்யப்படுகிறது, உழைப் டபின் தரம், அளவு ஆகியவற்றைப்
பொறுத்து அந்தத் தேசிய வருவாயின் ஒரு பங்கு (இது அவசியமான உழைப்பால் படைக்கப்படும்)
கூலி என்கிற வடிவில் பங்கீடு செய்யப்படுகிறது. பங்கீட் டின் தலையாய வடிவம் இது தான்.
வளர்ந்த சோஷலிசச் சமூகத்தின் பங்கீட்டுப் பண்பை
சோவியத் ஒன்றியத்தின் அரசியலமைப்புச் சட்டத்தின் 14 ஆம் விதி வரையறுக்கிறது. 'சோவியத்
மக்களின் உழைப்பு சுரண்டலுக்கு அப்பாற்பட்டது; அதுவே மக்களின் சமூகச் செல்வ வளர்ச்சிக்கும்
நலனுக்கும் ஊற்றாக இருப்பது: ஒவ்வொரு தனிமனிதனின் சமூகச் செல்வ வளர்ச்சிக்கும் நலனுக்
கும் கூட அதுவே மூல ஊற்றாகும்,
“’திறமைக்கேற்ற உழைப்பு; உழைப்புக்கேற்ற ஊதியம்'
என்பதே சோஷலிசக் கோட்பாடு; அதன் அடிப்படை யில் தான் உழைப்பு, நுகர்வு ஆகிய இரண்டின்
அளவையும் அரசு நிர்ணயம் செய்கிறது.''
உழைப்புக்கேற்ற பங்கீடு என்பது சோஷலிசத்தில் ஒரு
புறவயத் தேவையாகும். அங்கே உற்பத்தி என்பதே உற் பத்திச் சாதனங்களின் பொது சொத்தைப்
பொறுத்தது. சோஷலிசக் கட்டத்தில், தேவைக்கேற்ற ஊதியம் என்கிற அளவுக்கு உற்பத்திச் சக்திகள்
வளர்ச்சி பெறவில்லை. வாழ் வின் முதன்மைத் தேவை என்கிற கட்டத்தை உழைப்பு எய் தவில்லை,
இன்றும் வாழ்க்கைச் சாதனமாகவே உழைப்பு விளங்குகிறது; அதற்கேற்ற வருவாயை எதிர்பார்க்கக்
கூடிய நிலையிலேயே இருக்கிறது. இறுதியாக, சோஷலிசத் தில் மூளை உழைப்புக்கும் உடலுழைப்புக்கும்
வேறுபாடுகள் இன்றும் நில வு கின் றன; நுண்ணிய உழைப்புக்கும் நுண்மை யற்ற உழைப்புக்கும்
இடையேயான வேறுபாடுகளும் இன்றும் மறையவில்லை, ஆகவே உழைப்புக்கேற்ற பங்கீடு இயல் பாகவே
நிகழ்ந்தாக வேண்டும்.
சோஷலிசத்தின் கீழ், சமூகத்தில் ஒருவரது நிலையையும்
தல னையும் நிர்ணயிக்கும் ஒரே காரணி அவரது உழைப்பே; இதன் அடிப்படையில் நுகர்வுப் பொருள்களின்
பங்கீடு சமூ கத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் ஆற்றும் உழைப்பின் அளவையும் தரத்தையும் பொறுத்தே
அமைகிறது.
உழைப்புக்கேற்ற
பங்கீடு என்பது சோஷலிசச் சமூகத்தின் பொருளாதார விதி.
உற்பத்தி உயர்வு, உழைப்பின் தரம், உற்பத்தித் திறன்
ஆகியவற்றின் வளர்ச்சி, உழைப்பாளரின் ஊக்க அதிகரிப்பு - இவற்றை உந்துவிக்கும் நெம்புகோலாகவே
உழைப்புக் கேற்ற பங்கீடு விளங்குகிறது எனக் கருதினார் லெனின்.
உழைப்புக்கேற்ற பங்கீடு என்ற சோஷலிசத்தில் காணப்
படும் சாதகக்கூறு முதலாளித்துவத்தில் இல்லை. அத் குகை ய பங்கீட்டின் காரண மாக, சோஷலிசச்
சமூகத்தில் உழைக்காத வருவாய், ஒட்டுண் ணியம் ஆகிய ஊறுகள் இல்லை. எனவே சோஷலிசத்தில்
உற்பத்தி ஊற்றுகளுக்கும் தொழிலாளர் திருப்திக்கும் இடையூறுகள் இல்லை. மாறாக உழைப்புக்கேற்ற
பங்கீடு உற்பத்தி வளர்ச்சியின் மாபெரும் உந்து சக்தியாக விளங்கி உழைப்பாளிகளின் திறமைகளின்
எல்லைகளை விரிவடையச் செய்கிறது. “உழைக்காதவன் உண்ணலாகாது'' என்றார் லெனின். அந்தக்
கூற்றில் “சோஷ லிசத்தின் அடிப்படை காணக்கிடக்கிறது; அதன் வலிமையின் தவிர்க்க முடியாத
ஆதாரமும், அதன் இறுதி வெற்றியின் அழிக்க முடி யாத உறுதியின் அறிகுறியும் காணக் கிடக்கின்றன”
(வி. இ. லெனின், தேர்வு நூல்கள், தொகுதி 8, பக்கம் 18).)
உழைப்புக்கேற்ற பங்கீட்டு விதியில் பொதிந்துள்ள
பொருள் இது தான். 1) சமூகத்திற்காக ஒருவர் ஆற்றும். உழைப்பின் அளவையும் தரத்தையும்
ஒட்டி அவருக்கான நுகர்வு நிதிப் பங்கீடு செய்யப்படுவ தன் அவசியம்; அதன் மூலம் உழைக்கும்
மக்களது உழைப்பு நேரம் முழுமையாக வும் சரியாகவும் பயன்படுத்தப்படுகிறது என்கிற உத்தர
வாதம். 2) ஒரு குறிப்பிட்ட நேரம் ஆற்றப்படுகிற நுண் ணு ழைப்புக்கு அதே நேரத்தில் ஆற்றப்படும்
நுண்மையற்ற உழைப்பை விட அதிகமான கூலி வழங்கப்படுவ தன் அவ சியம்; அதன் மூலம் தமது திறமைகளை
வளர்த்துக் கொள்ள வும் கலாசார, தொழில் நுட்ப நிலைகளை உயர்த்திக் கொள் ளவும் உழைக்கும்
மக்களைத் தூண்ட வேண்டிய கட்டாயம். 3) கடின மான சூழ்நிலைகளில் இரும்பு, எஃகு, நிலக்கரி
போன்ற தொழிற்சாலைகளில்) பணிபுரியும் தொழிலாள ருக்கு உயர்ந்த பொருளாய த ஊக்கிகளை வழங்க
வேண்டிய தேவை, அதன் மூலம் அவர்களது உயரிய உழைப்புச் செல் விற்குச் சரியான ஈடு செய்யும்
அவசியம்.
ஒவ்வொருவரது உழைப்பின் அளவையும் தரத்தையும் பொறுத்தே
பொருட்செல்வம் பங்கீடு செய்யப்பட வேண். டும், பால், வயது, இனம், தேசியம் என்கிற வேறுபாடுகள்
கருதாமல் மக்களது உழைப்புக்கு ஏற்ற ஊதியம் வழங்கப்பட வேண்டும்: இந்த இரு அவசியங்களையே
உழைப்புக்கேற்ற பங்கீட்டுப் பொருளாதார விதி வெளிப்படுத்துகிறது எனலாம்.
கம்யூனிசத்தைக் கட்டும் காலக்கட்டம் முழுவதிலும்
இவ்விதி செயல் படுகிறது. பொருளாயத மற்றும் கலாசாரச் செல்வச் செழிப்பு ஏற்பட்டு, உழைப்பு
மக்களின் முதன்மைத் தேவை யாகப் பரிணமிக்கத் தொடங்கும் போது கம்யூனிசப் பங்கீட்டிற்கான
நிலையைச் சமூகம் எய் தும் எனலாம்.
உழைப்புக்கேற்ற பங்கீடு என்கிற நிலையில், முழு மொத்தச்
சமூக உற்பத்திப் பொருளின் ஒரு பகுதியே வினி யோகம் செய்யப்படுகிறது.
1) உற்பத்திச் சாதனங்கள் நுகரப்படும் போது அவற்
றிற்குப் பதிலாக மற்றவற்றைப் பயன்படுத்தும் காலை நேரும் செலவுகள், 2) உற்பத்தி வி ஸ்
தரிப்பிற்கான ஒரு பணத் தொகை, 3) காப்பு நிதி, இருப்பு நிதி, 4) நிர்வாகம் செய்ய வும்:
பள்ளிகள், மருத்துவமனைகள் ஆகியவற்றைப் பரா மரிக்கவும் ஆகும் செலவுகள், 5) உழைப்புக்கான
உடலுறுதி யில் லாதோர் காப்பு நிதி ஆகிய மேற்குறித்த செலவுகளை மொத்தச் சமூக உற்பத்திப்
பொரு ளி லிருந்து கழிக்க வேண் டி யதன் அவசியத்தை மார்க் ஸ் கோத்தா வேலைத்திட்டத் தின்
விமர்சனம் என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். அப்போது தான் சோஷலிசச் சமூகம் சரிவர இயங்கவும்
முன் னேறவும் இயலும் என்பது அவரது கருத்து. மேற்கூறியவற்றுடன் நாட்டின் பாதுகாப்புச்
செலவை யும் மொத்தச் சமூக உற் பத்திப் பொரு ளி லிருந்து கழித் தாக வேண்டும்.
விளைவாக, தனிமனித நுகர்வு நிதி மட்டுமே) உழைப்புக்
கேற்ற பங்கீடு செய்யப்படுகிறது. | உழைப்பால் புதிதாக உருவான உற்பத்திப் பொருளின் ஒரு
பங்கு பொருளுற்பத்தித் தொழிலாள ரின் சொந்த நுகர்வு நிதியில் சேர்க்கப்படுகிறது. அதுவே
அவசிய உற்பத்திப் பொருள் என வழங்கப்படுகிறது. அப்பொருளை உரு வாக்கப் பயன்படும் உழைப்பே
அவசிய உழைப்பு என வழங்கப்படுகிறது.
அவசிய உற்பத்திப் பொருளின் அளவுக்கு மேலும், உற்பத்தித்
துறையிலும் சேவைத் துறையிலும் புதிதாக உரு வான உற்பத்தி பொருள் சமூக நிதியில் சேர்கிறது
(அதற்கு முன் பயன் படுத்தப்பட்ட உற்பத்திச் சாதனச் செலவு கழிக்கப்படுகிறது). அது உபரி
உற்பத்திப் பொருள் எனவும், அதற்கான உழைப்பே உபரி உழைப்பு எனவும் வழங்கப்படும். சோஷலிசத்தின்
கீழ், உபரி உழைப்பால் படைத்துள்ள உபரி உற்பத்திப் பொருள் சமூகத் தேவைகளை நிறைவு செய்யப்
செயன் படுகிறது. உற்பத்தியின் தொடர் வளர்ச்சிக்கும், மேம்பாட்டிற்கும், காப்பு நிதி,
இருப்பு நிதி ஆகியவற்றின் உரு வாக்கத்திற்கும், நாட்டின் பாதுகாப்புச் செலவுக்கும்,
பொருளுற்பத்தி அல் லாத துறை சார்ந்த தொழிலாளர் தேவை நிறைவுக்கும் அது பயன் படுகிறது.
சோஷலிசத்தில் உபரி உற்பத்திப் பொருள் ஒரு சிலர்
நலனுக்காகப் பயன்படுவதில்லை; அதற்கு மாறாக முழுச் சமூகத்தின், ஒவ்வொரு தனிப்பட்ட உழைப்பாளியின்
தேவை நிறைவுக்காகவே பயன்படுகிறது. அது உபரி மதிப்பு எனக் கருதப்படலாகாது. ஏனெனில் அங்கே
சுரண்டல் இல்லை; சுரண்டும் வர்க்கங்களும் இல்லை.
சோஷலிசத்தில், முதலாளித்து வத்தைப் போல், அவசிய
உற்பத்திப் பொருளுக்கும் உபரி உற்பத்திப் பொருளுக்கும் இடையே பகை முரண்பாடுகள் இல்லை.
இங்கே பொருளும் பத்தித் தொழிலாளருக்கும் உபரி உற்பத்திப் பொருள் தேவைப்படுகிறது. ஏனெனில்
அது எல்லா உழைக்கும் மக்களின் தேவைகளையும் நிறைவு செய்கிறது. அத்துடன் சமூக உற்பத்தி
வளர்ச்சிக்கும் உதவுகிறது.
உழைப்புக்கேற்ற பங்கீடு, உற்பத்தி விளைவுகளில் மக்களின் பொருளார்வத்தை உத்தரவாதம் செய்கிறது, உழைப்பின்
உற்பத்தித் திறன் வளர்ச்சியைப் பெருக்குகிறது, நுண்மை உழைப்பை அதிகரிக்கிறது, உற்பத்தி
நுட்பங்களை விருத்தி செய்கிறது. சோஷலிச ஒழுங்கை மக்களிடையே அறிமுகப் படுத்தி உழைப்பை
எல்லாருக்கும் கட்டாயமாக்கி ஒரு படிப் பினையும் தருகிறது.
சோஷலிசத்தில் பொரு ளார்வம் அவசியமே. ஏனெனில் இன்னும்
அந்தக் கட்டத்தில் உழைப்பு என்பது எல்லா மனி தர்களின் வாழ்வின் முதன் னை L.)த் தேவை
என் கிற நிலையை அடையவில்லை. மக்கள் உணர்விலிருந்து முதலாளித்துவ எச்சங்கள் முழுமையாகத்
தகர்க்கப்படவில்லை. பெரும் பான்மைத் தொழிலாளர் தமக்குரிய சமூகக் கடமைகளை உணர்வு பூர்வமாக
ஆற்றுகின்றனர். ஆனாலும் சிற்சிலர் அவ்வாறு இல்லாமல் உழைப்பு ஒழுங்கை மீறவும் செய்கின்றனர்.
பொருளார்வக் கோட்பாட்டைச் செயல்படுத்துதல் என் பதன்
பொருள் உழைப்புக் குறித்த கம்யூனிசப் பார்வையை உருவாக்குதல் ஆகும். மக்கள் உணர்வு நிலையிலிருந்து
கடந்த கால எச்சங்களை நீக்கும் போராட்டத்தின் படைக்கலனாக அது விளங்குகிறது. உழைப்புக்
குறித்த பழைய நோக்கி லிருந்து மக்களை விடுவிக்கிறது.
பொருளார்வக் கோட்பாடு, பொருட்செல்வம் ஒரே சமமாக
பங்கீடு செய்யப்படுவதைத் தவிர்க்கிறது. அத் தகைய சரிசமப் பங்கீடு சோஷலிசத்துக்கு எதிரிடையானது
. ஏனெனில் உழைப்புக்கேற்ற பங்கீடு என்பதே பொருளாதார விதி. குட்டி பூர்ஷ்வா முயற்சிகள்
மார்க்சிய-லெனினியத்தை ஒரு முழுச் சமத்துவ மாக நிறுவ முனைகின் றன; அம் முயற்சிகள் திரிபு
முயற்சிகளே. சோஷலிசத் தின் கீழ், சமத்து வம் என்பதன் பொருள் தனிப்பட்ட தேவைகள், வாழ்க்கை
நுகர்வுகள் அனைத்தையும் ஒரே மட்டமாக்கி விடுவது என் பதில்லை, அதற்கு மாறாக ஒரு சமூக
சமத்து வத்தை நிறுவு வதே அதன் நோக்கம். உற்பத்திச் சாதனங்கள் பொறுத்த சரிசம் உறவுகள்,
சுரண்டலிலிருந்து உழைக்கும் மக்கள் அனைவரின் சரிசம விடுதலை, உற்பத்திச் சாதனங்களின்
தனிச் சொத்தின் சரிசமத் தகர் எ, உழைக்கவும், உழைப்புக் கேற்ற அவசியத் தேவைகளைப் பெறவுமான
சரிசம உரிமை ஆகியவற்றையே சமூக சமத்துவம் என்று கூற வேண்டும்.
இவ்வாறாக, ஒரே மாதிரியான சமன் செய்தவற்றை சோஷலிசம்
குறிக்கவில்லை; உழைப்புக்கேற்ற பங்கீட்டையே குறிப்பிடுகிறது. அப்பங்கீடு இரு வகைப்படும்.
ஒன்று ஆலை , அலு வ ல கத் தொழிலாளருக்குக் கூலி; இன்னொன்று கூட்டுப் பண்ணை , சஈட்டுறவுத்
தொழில் கூலி ஆகியவை, இவ் விரண்டு வகைப் பங்கீடுகளும், உற்பத்திச் சாதனங்களின் இரு வகைச்
சொத்து களுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை யொட்டி நடைபெறுகின்றன. அவ்விரு வகைச் சொத்துகள்
அரசுச் சொத்து, கூட்டுப் பண்ணைக் கட்டுறவுச் சொத்து ஆகியவை.
(அரசியல் பொருளாதாரத்தின் அடிப்படைகள்,
முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ, 1988)
No comments:
Post a Comment