Thursday 20 June 2019

1) சோஷலிசத்தில் பண்ட உற்பத்தியின் தேவை, அதன் பண்புகள் – பி.நிக்கிடின்


சோஷலிசச் சமூகத்தில் பண்ட உற்பத்தியின் தேவை பல காரணிகளால் உருவாகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, சோஷலிசத்தில் பண்ட உற்பத்திக்கான பொருள் முன் நிபந் தனை, அதாவது சமூக உழைப்புப் பிரிவினை தக்க வைக்கப் படு வதுடன் விஸ்தரிக்கவும் படுகிறது. பொது சோஷலிசச் சொத்தின் இயல்பால் சோஷலிசத்தில் பண்ட உற்பத்தி உறுதி யாகிறது; சோஷலிசச் சொத்திற்கு அங்கே இரு வடிவங் கள் உண்டு. ஒன்று அரசு, அதாவது பொது மக்களின் சொத்து - இன் னொன்று கூட்டுறவுக் கூட்டுப் பண்ணைச் சொத்து.

இத்துடன், சோஷலிசத்தில், இன்னும் உழைப்பின் சமூக பொருளாதார முரண்கூறுகள் உள்ளன. மூளை உழைப்பு உடல் உழைப்பு, நுட்ப உழைப்பு -நுட்பமற்ற உழைப்பு, தொழிலாளர் உழைப்பு-கூட்டுப் பண்ணை விவசாயி உழைப்பு எனப் பல்வேறு உழைப்புப் பிரிவினைகள் அங்கே உள்ளன. அதன் விளைவாக எல்லா உழைப்புகளையும் ஒரே உழைப்பு வடிவமாகக் கொள்ள இயலவில்லை. நேர்முகமாக அல்லாமல், சுற்றி வளைத்து மதிப்பின் மூலமே இத்தகு வேறுபாடுகளைக் களைய முடிகிறது. சோஷலிசத்தில் உழைப்பு, வாழ்வின் முதல் தர அவசியமாகும் கட்டம் நிறை கூறவில்லை; இன்றும் அதற்கென்று பொருள் ஊக்குவிப்பு கள் தேவைப்படுகின்றன. இதுவும் இன்னும் வேறு சிலவும் சோஷலிசத்தின் கீழ் பண்ட-பண உறவுகளின் நிலைமைக்குக் காரண மாகின்றன
.
பண்ட-பண உறவுகளுக்கு சோஷலிசக் கட்டத்தில் இருக்கும் புதிய அர்த்தத்தை மனத்தில் வைத்து அவற்றை முழுதாகப் பயன் படுத்திக் கொள்ள வேண்டியது சோஷலிச நிர்மாணத்திற்கு அவசியம். உற்பத்திச் சாதனங்களின் பொது சோஷலிசச் சொத்தின் அடிப்படையில், ஒருங்கிணைந்த சோஷலிச உற்பத்தியாளர்களால் (அரசு, கூட்டுறவு நிறுவனங்கள், திட்டமிடப்பட்டு சமன் செய்த நிலை யில் சோஷலிசப் பண்ட உற்பத்தி நடைபெறுகிறது; இதன் விளைவாகவே சோஷலிசத்தில் பண்ட-பண உறவுகளுக்கு ஒரு புதிய பொருள் கிடைக்கிறது. எனவே, சோஷலிசப் பண்ட உற்பத்தி எந்நாளும் முதலாளித்துவப் பண்ட உற்பத்தியாக முடியாது.

முதலாளித்துவப் பண்ட உற்பத்தி உலகரீதியானது; சோஷலிசப் பண்ட உற்பத்தி அப்படியில்லை. சோஷலிசத்தின் கீழ் பண்ட உற்பத்தி, பண்டச் சுழற்சி ஆகிய இரண்டின் இயக்க வட்டங்கள் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டவை. ஆகவே, உழைப்புச் சக்தி ஒரு பண்டமாக முடியாது; அது வாங்கப் படுவதோ விற்கப்படுவதோ இல்லை. நிலமும் அதிலுள்ள இயற்கைச் செல்வங்களும் வர்த்தகச் சுழற்சியிலிருந்து அகற் றப்பட்டன, அதா வது இவற்றை வாங்கவோ விற்கவோ முடியாது. அவ்வாறே, சோஷலிச நிறுவனங்களும் அவற்றின் நிலைச் சொத்துகளும் (இயந்திரங்கள், கட்டடங்கள், கருவி கள் முதலியவை) வாங்கப்படுவதோ விற்கப்படுவதோ இல்லை .
பண்ட உற்பத்தி இயல்பில் அடிப்படை மாறுதல் காரண மாக, அதன் கூறுகளிலும் மாற்றம் ஏற்பட்டுள் ளது. பெரும் பாலான கூறுகள்-பண்ட உழைப்புச் சக்தி, உபரி மதிப்பு போன்றவை மட்டுமின்றி, பண்ட உற்பத்தியின் முதலாளித்துவ இயல்பை வெளிப்படுத்திய பிற கூறுகளும் கூட முற்றிலும் மறைந்து விட்டன; பண்டம், பணம், மதிப்பு, விலை, லாபம், கடன் போன்ற பொருளாதாரக் கூறுகள் தக்க வைக்கப்பட்டன, ஆனால் அவை சோஷலிசத்தின் கீழ் பெரும் மாறுதலுக்கு உள்ளாயின.

சோஷலிசச் சமூகத்தில் பண்ட-பண உறவு கள் முதலில் பொதுத் துறை, கூட்டுறவுத் துறையின் இடையே எழுகின்றன (அங்கே கூட்டுறவுத் துறை வேளாண் மை உற்பத்திக் சட்டுறவு கள், கூட்டுப் பண்ணைகள் இவற்றின் பிரதிநிதி யாக விளங்குகின்றது). கூட்டுறவுத் துறையின் உற்பத்திச் சாதனத் தேவையைப் பூர்த்தி செய்யவும் அத்துறை உறுப் பினர் தம் நுகர்வுப் பண்டத் தேவையைப் பூர்த்தி செய்ய வும் அரசுத் தொழில் துறை பண்டங்களை உற்பத்தி செய் Wன்றது. அதே போல், தொழில் துறையின் கச்சாப்பொருள் தேவையையும், பொது மக்களின் உணவுப் பொருள் மற்றும் நுகர்வுப் பொருள் தேவையையும் பூர்த்தி செய்யவே கூட் டுறவு இணை யங்கள் பண்ட உற்பத்தியில் ஈடுபடுகின்றன. அரசுத் தொழிற்துறைக்கும் கூட்டுறவு வேளாண்மைக்கும் இடையே நிலவும் பொருளாதாரத் தொடர் பின் ஓர் அடிப் படை உருவமே பண்டப் பரிவர்த்தனை ஆகும்.

இரண்டாவதாக, பண்ட உற்பத்தியும் பண்டச் சுழற்சி யும் அரசுத் துறை, கூட்டுறவுத் துறை ஆகிய இரண்டிலும் கூட்டுப் பண்ணை யாளர்கள் தமது துணை நிலங்களிலும் உற்பத்தி செய்யப்படும் நுகர்வுப் பண்டங்களைத் தழுவி யாமைகின்றன. வாங்கல்-விற்றல் அமைப்பின் மூலமாக நகர்ப் புற, கிராமப்புற மக்களின் தனிச்சொத்தாக அந்த நுகர்வுப் பண்டங்கள் மாறுகின்றன.

மூன்றாவதாக, உற்பத்திச் சாதன உற்பத்தி வட்டத்தில் அரசுத் துறைக்குள்ளேயே பண்ட உறவுகள் ஏற்படுகின்றன. வாங்கல்-விற்றல் வாயிலாக, நிறுவனங்கள் தம்முள் அரசுத் துறை நிறுவனங்களால் உற்பத்தி செய்யப்படும் உற்பத்திச் சாதனங்கள் (இயந்திரங்கள், கருவிகள், உலோகம், நிலக் கரி, சிமெண்ட் முதலியவை) பண்டங்களாகச் சுழல்கின்றன.

நான்காவதாக, அயல் வணிகப் பரிமாற்றம் வாயிலாக, சோஷலிச அரசுக்கும் மற்ற நாடுகளுக்கும் இடையே பண்ட உறவுகள் எழுகின்றன
.
சோஷலிசச் சமூகத்திற்குப் பண்ட உற்பத்தி உதவு கின்றது; அதன் உற்பத்திச் சக்திகளை வளர்க்கப் பெரிதும் துணை புரிகின்றது. சோஷலிசச் சமூகம் பொதுமக்கள் சொத்து என்கிற முழுமுதல் கம்யூனிசக் கட்டத்தையும் கம்யூனிச அமைப்பு வினியோகத்தையும் அடையும் போது, பண்ட-பண உறவுகள் பொருளாதார ரீதியில் நடைமுறைக்கு ஒவ்வாதவையாகப் போய் அழிந்தொழியும் எனலாம்.
(அரசியல் பொருளாதாரத்தின் அடிப்படைகள்,
முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ, 1988)

No comments:

Post a Comment