நாம் முன்பே கண்டபடி ஒரு பண்டத்திற்கு இரண்டு பண்புகள்
உண்டு. ஒன்று அதன் பயன் மதிப்பு, இன்னொன்று அதன் மதிப்பு. முதலாளித்துவத்தைக் காட்டி,
லும் இவை இரண்டிற்கும் சோஷலிசத்தில் பெரும் பொருள் மாறுபாடு உண்டு.
உபரி மதிப்பைக் கவர வேண்டும் என்கிற அடிப்படை (யில்
தான் ஒரு முதலாளி பண்ட மதிப்பில் அக்கறை கொள் கிறான். உபரி மதிப்பைப் பெறுகிற அளவு
தான் பண்டத்தின் பயன் மதிப்பு முதலாளித்துவத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது.
சோஷலிசத்தில், பண்டத்தின் இந்த இரு பண்புகளை யும்
கணக்கில் வைத்துக் கொண்டே உற்பத்தி திட்டமிடப் பட்டு நிர்வகிக்கப்படுகிறது.
சோஷலிசப் பொருளாதாரத்தில் பண்டத்தின் பயன் மதிப்பு
ஒரு சிறப்பான பொருள் கொண்டது. பயன் மதிப்பு களின் அளவை அதிகரிப்பதிலும் அவற்றின் தரத்தை
மேன் மைப்படுத்துவதிலும் சோஷலிசச் சமூகத்திற்கு அக்கறை உண்டு. அந்தச் சமூகத்தில் பயன்
மதிப்பு வகைகளும் அளவும் திட்டமிடப்படுகின்றன; உற்பத்தியாகும் பாண்டங்களின் தரம் உயரவும்
அந்தச் சமூகம் முனைகிறது.
சோஷலிசச்
சமூகத்தில் பண்ட மதிப்பும் முக்கியம் வாய்ந்ததாகும். பெளதிக அடிப்படையில் மட்டுமன்றி
பண (மதிப்பு) குறியீடுகளின் அடிப்படையிலும் உற்பத்தி அங்கே திட்டமிடப்படுகிறது. பண்ட
மதிப்பு தொடர்ந்து படிப்படி யாக வீழும் வகையில் இக்குறியீடுகள் பயன்படுத்தப்படு கின்
றன. சோஷலிசக் குவிப்பு தொடர்ந்து அதிகரிக்கவும் சமூகத்தின் உறுப்பினர் தேவைகள் பூர்த்தி
செய்யப்படவும் அவை பயன்படுத்தப்படுகின்றன.
சோஷலிச உற்பத்தியில், பயன் மதிப்புக்கும் மதிப்புக்கும்
இடையே பகை முரண் கள் இல்லை. ஏனெனில் தனி உழைப் புக்கும் சமூக உழைப்புக்கும் இடையிலும்
அங்கே முரண் பாடுகள் இல்லை. இதனால், சோஷலிசத்தில் பண்டத்தின் பயன் மதிப்புக்கும் மதிப்புக்கும்
இடையே ஒரு முரண் கூட இல்லை என்பது பொருளில்லை. முரண் உண்டு; ஆனால் அது பகை முரண் எனத்
தக்க அளவு இல்லை; முதலாளித்து வத் திற்கு மாறாக அதற்கு அழிக்கும் இயல்பும் இல்லை. இத்தகு
முரண் பாட்டுக்கு ஓர் எடுத்துக் காட்டு கூறலாம் அங்கே செய் பொருள் தரம் குறைந்ததாக
இருப்பின் அது விற்பனையாவது கடினம்; அவசியமில்லாதவை மட்டுமல்ல, தரத்திற்கு மீறிய மதிப்பு
உள்ள பொருள்கள் அங்கே விற் பனை யா வ து எளிதில்லை; அவற்றுக்கு அங்கே தேவை இல்லை. அவற்றின்
மதிப்பின் அளவு அவை விற்பனையாவதில்லை-பயன் மதிப்பு குறைவதால் பண்ட விலை குறைக்கப்படுகிறது.
திட்டமிட்ட நிர்வாகத்தாலும் செய்பொருள் வகைகள்,
தரம் ஆகியவற்றின் மேம்பாட்டாலும் அவற்றின் மதிப்புக் குறைக்கப்படுவதாலும் தான் சோஷலிசச்
சமூகத்தில், பயன் மதிப்புக்கும் மதிப்புக்கும் இடையேயான முரண்பாடு நீக்கப் படுகிறது
எனலாம்.
பண்டத்தின் இரு வகைப் பண்பு அப்பண்டத்தை உற் பத்தி
செய்ய ஆகும் உழைப்பின் இரு வகைப் பண் பால் நிர்ண யிக்கப்படுகிறது. பண்ட உற்பத்திக்காகச்
செலவிடப்படும் உழைப்பு ஒரே சமயத்தில் சூக்குமமாகவும் ஸ்தூால மாகவும் விளங்குகிறது.
சோஷலிசத்தில் அவ்விரு வகை உழைப்பும் நேரடியான சமூக உழைப்பின் இரு கூறுகள் எனலாம்.
முதலாளித்துவச் சமூகத்தில் உழைப்பின் இரு வகைப்
பண்பு, சமூக உழைப்பு, தனிப்பட்ட உழைப்பு எனப் பிரிந்து நிற்கும் பண்ட உற்பத்தியின்
பகை முரணைப் பிரதிபலிக்கிறது.
சோஷலிசச் சமூகத்திலோ முற்றிலும் வேறான நிலை. சோஷலிசப்
பொருளாதார அமைப்பு பொதுச் சொத்தை அடிப்படையாகக் கொண்டதாலும், கூலி உழைப்பு அமைப்பு
தகர்க்கப்பட்டதாலும், அங்கே உழைப்பு சமூகப் பண்புடை யது, தனிப்பட்டது என்று பிரிந்து
நிற்பதில்லை. சோஷலிசத் தின் கீழ், உழைப்பு தனிப்பட்டதில்லை, அது எப்போதும் நேரடி சமூக
உழைப்பாகவே விளங்கும். அந்தச் சமூகத்தில் மக்களின் உழைப்பு, நாடு தழுவிய வண்ணம் திட்டமிடப்
பட்ட, சமன் செய்யப்பட்ட ஓர் உழைப்பாக இருக்கிறது. இந்தப் பண்பு மாற்றத்தின் விளைவாக,
ஒரு தொழிற்சாலை அல்லது பணிமனை, ஒரு கூட்டுப் பண்ணை அல்லது அரசுப் பண்ணையில் நிலவும்
உற்பத்திச் செய்முறையிலும் கூட தனிப்பட்ட உழைப்பு நேரடி சமூக உழைப்பாகவே இருக் கிறது.
எனவே அங்கே, சூக்குமமான உழைப்பு, ஸ்தூல மான உழைப்பு என்கிற பகை முரண் இல்லை எனலாம்.
இன்னும் சோஷலிசக் கட்டத்தில் நேரடிச் சமூக உழைப்பு
போது மான அளவு வளர்ச்சி பெறாததால், அதனை மதிப்பு, மதிப்பின் வடிவங்கள் என்ற பெயரில்
குறிப்பிட வேண்டிய அவசியம் இருந்து வருகிறது.
(அரசியல் பொருளாதாரத்தின் அடிப்படைகள்,
முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ, 1988)
No comments:
Post a Comment