Thursday, 20 June 2019

3) சோஷலிசத்தில் ஒரு பண்ட மதிப்பின் பரிமாணம் – பி.நிக்கிடின்


சோஷலிசத்தில், பண்ட மதிப்பின் பரிமாணம் அப்பண்டத்தை உற்பத்தி செய்யும் போது செலவிடப்படும் சமூக ரீதியில் அவசிய மான உழைப்பு நேரத்தின் அளவைக் கொண்டு நிர்ணயம் செய்யப் படுகிறது. சமூக ரீதியில் அவசியமான் உழைப்பு நேரம் என் பதன் பொருள், ஒரு குறிப்பிட்ட தொழிற்துறையில் கணிச மான அளவு பண்டங்களை உற்பத்தி செய்ய நிறுவனங்கள் செலவிடும் சராசரி உழைப்பு நேரம் என்பதாகும். சராசரி உற்பத்திச் சூழலில் கணிசமான அளவு பண்டங்களை உற் பத்தி செய்யச் செலவிடப்படும் உழைப்பு நேரம் எனவும் கொள்ளலாம்.

தனி நிறுவனங்களில் ஒரு செய் பொருள் உற்பத்திக் காகச் செலவிடப்படும் நேரமே தனி உழைப்பு நேரமாகும்.

முதலாளித்துவத்தில் சந்தையைப் பொறுத்தே சமூக ரீதியில் அவசியமான நேர அளவு அமைகிறது. சோஷலிசத் தில் அரசு, புறவ யப் பொருளாதாரச் சூழலின் அடிப்படை யில் உழைப்பின் உற்பத்தித் திறன் வளர்ச்சியைத் திட்டமிடு கிறது, உழைப்புச் செலவையும் நிர்ணயிக்கிறது , இவ்வாறாக, சமூக ரீதியில் அவசியமான உழைப்பு நேரத்தின் மீது தாக்கம் செலுத்தி அதைக் குறைக்கப் பார்க்கிறது.

ஒரு பண்டத்தின் மதிப்பைக் குறைப்பதென்றால் அதன் மீது செலவிடப்படும் உழைப்பு அளவையும் குறைத்தாக வேண்டும். இதனை எப்படிச் சாதிக்க முடியும்?

பண்ட மதிப்பின் பரிமாணம் உழைப்பின் உற்பத்தித் திறனைப் பொறுத்தது; உழைப்பின் உற்பத்தித் திறன் பெரு கும் அளவு ஒரு குறிப்பிட்ட அளவு பண்டத்தின் மதிப்பு குறையும்; எனவே உழைப்பின் உற்பத்தித் திறனை அதி கரிக்கச் செய்யும் முயற்சிகள் பண்ட மதிப்பைக் குறைப்பதற் காகச் செய்யும் முயற்சிகளே.
.
பண்ட மதிப்பு என்பது கச்சாப்பொருளீடு முதலிய வற்றையும் பொறுத்ததே. அதாவது எவ்வளவு நிகழ்கால உழைப்பு, உள் ளுழைப்பு செலவிடப்பட்டுள்ளதோ அவ்வளவு வும் பண்ட மதிப்பை உயர்த்துகிறது. உள்ளுழைப்பு என்பது கடந்த கால உழைப்பு; அதாவது கச்சாப்பொருள், இயந்திரச் சாதனங்கள், கட்டடங்கள் ஆகியவற்றின் மீது செலவிடப்பட்ட உழைப்பின் மொத்தம். இப்படியாக, பண்ட மதிப்பைக் குறைப்பதற்காக நிகழ்கால உழைப்பு, கடந்தகால உழைப்பு ஆகிய இருவகை உழைப்பிலும் சிக்கனம் அவசியம்.

சோஷலிசப் பொருளாதாரத்தில், உழைப்பு, உற்பத்தி ஆகிய இரு துறைகளிலும் முன்னேறிய முறைகளைப் பரப்பு வதிலும் அறிமுகப்படுத்துவதிலும் முயற்சிகள் மேற்கொள்ளப் படுகின்றன; தொழில் நுட்பச் சாதனைகளும் விரிவாகக் கையாளப்படுகின்றன, இவற்றால் ஒரு குறிப்பிட்ட அளவு செய் பொருளை உற்பத்தி செய்ய ஆகும், சமூக ரீதியில் அவசியமான உழைப்பு நேரம் குறைகின்றது. அனுபவம், தொழில் நுட்ப அறிவு ஆகியவை பரிமாறப்படுகின்றன; பரஸ் பரத் தோழமை உதவிகள் நிகழ்கின்றன. இவற்றால் பின் தங் கும் நிறுவனங்களும் கூட விரைவில் முன்னேறும் நிலை எய்துகின்றன.
(அரசியல் பொருளாதாரத்தின் அடிப்படைகள்,
முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ, 1988)

No comments:

Post a Comment