Friday, 26 July 2019

முதலாளித்துவத்தின் பொது நெருக்கடி – கி.ஷஹ்நஸாரவ், அ.போபரீக்கின், யூ.கிராஸின், வி.சுகதேயெவ்


“முதலாளித்துவ முரண்பாடுகள் கூர்மையடைதல்

உற்பத்திச் சக்திகளுக்கும் உற்பத்தி உறவுகளுக்கும் இடையேயான மோதல் தான் வரலாற்று நிகழ்ச்சிப் போக்கின் உந்து சக்தியாக, ஒரு உற்பத்தி முறையிலிருந்து வேறு முறைக்கு மாற்றத்தை நிகழ்த்தக் கூடிய சமூகப் புரட்சிகளின் பொருளாதார அடிப்படையாக விளங்குகிறது. நமது கண்களின் முன்னே கூர்மையடைந்து வரக்கூடிய உற்பத்தியின் சமுதாயத் தன்மைக்கும் தனி முதலாளித்துவ அபகரிப்பு முறைக்கும் இடையிலுள்ள முரண்பாடு இத்தகைய மோதலின் உதாரணமாகத் திகழுகிறது. இந்த முரண்பாடுதான் முதலாளித்து வத்தின் முக்கிய முரண்பாடாகும்.

இந்தப் பகைமையான, சமரசப்படுத்த இயலாத முரண்பாடு இப்போது பெரிதும் கடுமையாக உள்ளது. அரசு- ஏகபோக முதலாளித்துவம் சோஷலிசத்தை நோக்கிய மாற்றத்திற்கான எல்லாப் பொருளாயத முன்தேவைகளையும் தயார்படுத்தியுள்ளது. பெரும் இயந்திரத் தொழில் துறையும் உற்பத்தியை மிக உயர்வான அளவில் பொதுமயப்படுத்தியதும் அராஜகத் தன்மைக்கும் நெருக்கடிகளுக்கும் முடிவுகட்டவும் சமுதாயம் முழுவதன் நலன்களுக்காக உற்பத்திச் சக்திகளின் நட்டமிட்ட வளர்ச்சிக்கு வழிகோலவும் தேவையான சூழ்நிலைகளைத் தோற்றுவிக்கின்றன, ஆனால் இதற்கு முதலாவதாக உற்பத்திச் சாதனங்களின் மீதான தனிச் சொத்துடைக்கு முடிவு கட்ட வேண்டும்.

ஏகாதிபத்தியம் அழிந்து வரக் கூடிய முதலாளித்துவம் என்பதற்கு, அது தானாகவே, தொழிலாளி வர்க்கத்தின் தலைமையிலான வெகுஜனங்களின் தீர்மான கரமான போராட்ட மின்றி அழிந்துவிடும் என்பது பொருளல்ல, வி.இ.லெனின் ஏகாதிபத்தியத்தை சோஷலிசப் புரட்சியின் முன்னணைப் பொழுது என்று குறிப்பிட்டார். நிச்சயமாக ஏகபோக முதலாளி வர்க்கம் போராட்டமின்றி விட்டுக் கொடுக்காது, முதலாளித்துவ அமைப்பைப் பாதுகாக்க அது சக்திகள் அனைத்தையும் செல்விடும். ஆனால் தவிர்க்க இயலாததை அதனால் தடுக்க முடியாது. முதலாளித்துவத்தின் முரண்பாடுகள் மேன்மேலும் கூர்மையடைந்து அதன் அழிவிற்கு இட்டுச் செல்லுகின்றன.

உழைப்பாளிகளைச் சுரண்டுவதன் மூலம் தனது செல்வங்களைப் பெருக்கும் ஏகபோக முதலாளி வர்க்கம் இவர் களுடைய வளர்ந்து வரும் எதிர்ப்பைச் சந்திக்கிறது. முதலாளித்துவ ஒடுக்குமுறையிலிருந்து விடுதலை பெறுவதற்காகவும் சமுதாயத்தின் சோஷலிச மாற்றத்திற்காகவும் தொழிலாளி வர்க்கமும் மக்கள் திரளினரும் நடத்தும் புரட்சிகர இயக்கம் வளர்ந்து மேன்மேலும் பலமடைகிறது.

காலனிகளின் மக்களை அடிமைப்படுத்தி, பின் அவர்களைப் பொருளாதார சார்புநிலை எனும் வலையில் சிக்கவைத்த ஏகபோக முதலாளி வர்க்கம் அவர்களது தேசியச் செல்வத்தைக் கொள்ளையடிப்பதன் மூலம் தொடர்ந்து லாபம் சம்பாதிக்கிறது. இதனால் ஏகாதிபத்திய அடிமை முறைக்கு எதிரான மக்களின் தேசிய விடுதலை இயக்க அலை வளர்ந்து வருகிறது.

அடக்குமுறையைப் பின்பற்றி யுத்தங்களைக் கட்டவிழ்த்து விட்டு ஏகபோக முதலாளி வர்க்கம் தனது சுய நலன்களுக்காகப் பல லட்சக்கணக்கான மனித உயிர்களைப் பழிவாங்குகிறது. பல்லாண்டு மனித உழைப்பால் தோற்றுவிக்கப்பட்ட செல்வங்களைப் போராட்டச் சுவாலையில் இட்டுப் பொசுக்குகிறது. இதனால் ஜனநாயகத்திற்கும் சமாதானத்திற்குமான மக்களின் போராட்டம் வலுவடைந்து வருகிறது.

இந்த மகத்தான சக்திகள் அனைத்தும் ஒரே பெருக்காக ஒன்றுசேர்ந்து ஏகாதிபத்தியத்தை அழிக்கின்றன. முதலாளித்துவ அமைப்பின் தவிர்க்க இயலாத மறைவு கட்டம், முதலாளித்துவத்திலிருந்து சோஷலிசத்தை நோக்கி மாறும் கட்டம் வருகிறது.

முதலாளித்துவம் சமமின்றி வளர்ந்து வருவதால் சோஷலிசத்திற்குச் சமுதாயம் மாறுவதும் ஒரே நேரத்தில் நடைபெறாது. முதலாளித்துவத்தின் அழிவும் சோஷலிசத்தின் வெற்றியும் ஒரு சகாப்தம் முழுவதும் நீடிக்கக் கூடிய நீண்ட நிகழ்ச்சிப் போக்காகும். இச்சகாப்தம் முதலாளித்துவத்தின் பொது நெருக்கடி சகாப்தம்.

முதலாளித்துவ பொது நெருக்கடியின் கட்டங்கள்

முதலாளித்துவத்தின் பொது நெருக்கடிக் காலகட்டத்தில், தனிப்பட்ட நாடுகளைத் தனது ஆதிக்கத்தின் கீழ் இனிமேலும் முதலாளித்துவ அமைப்பு வைத்திருக்க இயலாத அள்விற்கு இதன் உள் முரண்பாடுகள் கூர்மையடைகின்றன; இந்த நாடுகள் ஒன்றன் பின் ஒன்றாக இதிலிருந்து விலகி சோஷலிசப் பாதைக்கு வருகின்றன. மறு புறத்தில் சோஷலிச அமைப்பின் தோற்றமும் அதன் வளர்ச்சியும் பலப்படுத்தலும் ஏகாதிபத்தியத்தின் சிதைவை மேலும் அதிகமாகத் துரிதப்படுத்துகின்றன.

முதலாளித்துவ பொது நெருக்கடியின் முதல் கட்டம் முதல் உலக யுத்தத்தையடுத்து, குறிப்பாக அக்டோபர் சோஷலிசப் புரட்சியின் வெற்றியோடு துவங்கியது. அக்டோபர் புரட்சி தொழிலாளர் மற்றும் தேசிய விடுதலை இயக்கத்தின் மீது பெரும் செல்வாக்கு செலுத்தியது, சமுதாய வளர்ச்சி முழுவதற்கும் பெரும் உந்து சக்தியை அளித்தது. சோஷலிசம் தத்துவத்திலிருந்து நடைமுறையாகியது, முதலாளித்துவத்தின் தவிர்க்க இயலாத அழிவைப் பற்றியும் அதைப் புதிய சமுதாய அமைப்பால் மாற்றுவதைப் பற்றியும் மார்க்சிய-லெனினியப் போதனை கூறிய ஆரூடத்தின் உண்மை முதன் முதலாக மெய்ப்பிக்கப்பட்டது.

இரண்டாவது உலக யுத்தம் முதலாளித்துவத்தின் பொது நெருக்கடியைக் கூர்மையாக்கி ஆழப்படுத்தியது; ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் பல நாடுகள் முதலாளித்துவ அமைப்பிலிருந்து விலகியதையடுத்து இந்த நெருக்கடியின் இரண்டாவது கட்டம் துவங்கியது. சோஷலிசம் ஒரு நாட்டின் வரம்பை விட்டு வெளியேறி உலக அமைப்பாக மாறியது. அதே பொழுது தேசிய விடுதலைப் புரட்சிகள், பல முந்தைய காலனிகள் மற்றும் அரைக் காலனிகளின் இடத்தில் சுயமான அரசுகளைத் தோற்றுவித்தன.

50ம் ஆண்டுகளின் இரண்டாம் பாதியிலிருந்து முதலாளித்துவ பொது நெருக்கடியின் மூன்றாவது கட்டம் ஆரம்பமாகியது, இது உலக யுத்தத்தோடு தொடர்பின்றி துவங்கியது என்பதில் தான் இதன் சிறப்பியல்பு அடங்கியுள்ளது. முன்பு சமாதானக் காலத்தில் உழைப்பாளிகளின் சோஷலிச இயக்கத்தையும் அடிமைப்படுத்தப்பட்ட மக்களின் தேசிய விடுதலை இயக்கத்தையும் நசுக்கக் கூடிய அளவிற்கு முதலாளித்துவம் சக்தி வாய்ந்ததாக இருந்தது; பரஸ்பர வேறுபாடுகளால் பலவீனமடைந்து, அவர்களாலேயே மூட்டி விடப்பட்ட உலக யுத்தங்களில் மும்முரமாயிருந்ததால் தான் ஏகாதிபத்தியவாதிகளால் விடுதலை இயக்கங்களின் பெரும் வெற்றிகளுக்குத் தடைவிதிக்க இயலவில்லை.

இப்போது அவர்களால் சமாதானக் காலத்திலும் கூட இதைச் செய்ய இயலவில்லை. காலனியாதிக்க முறையின் சிதைவு இதைத் தெளிவாக நிரூபிக்கிறது.”
(சமூக விஞ்ஞானம் – முன்னேற்றப் பதிப்பகம் -1985- பக்கம் 169 - 172)


உபரி மதிப்பு – கி.ஷஹ்நஸாரவ், அ.போபரீக்கின், யூ.கிராஸின், வி.சுகதேயெவ்


“முதலாளிகளைச் செல்வந்தர்களாக ஆக்குவது தான் முதலாளித்துவ உற்பத்தியின் ஒரே நோக்கம். யாரைப் பலி கொடுத்து இது அடையப்படுகிறது?

சந்தையில் பண்டங்களை விற்று பணம் சம்பாதிக்கும் முன்பாக இவற்றை உற்பத்தி செய்ய வேண்டும், உழைப்பால் மட்டுமே மதிப்பைத் தோற்றுவிக்க இயலும். முதலாளி அடிமைச் சொந்தக்காரனோ, நிலப்பிரபுவோ இல்லை, தனது சொத்தாகப் பாவிக்கக் கூடிய அடிமைகளோ, பண்ணையடிமைகளோ அவனிடம் இல்லை. ஆனால் அவனிடம் உற்பத்திச் சாதனங்கள் உள்ளன, சமுதாயத்தில் இவை மறுக்கப் பட்ட பாட்டாளி வர்க்கம் உள்ளது. தொழிலாளி முதலாளியைத் தனிப்பட்ட முறையில் சார்ந்திருக்கவில்லை, ஆனால்  வாழ்வதற்காக அவன் தனது உழைப்புச் சக்தியை விற்க வேண்டியவனாகிறான். இதனை வாங்கும் முதலாளி மதிப்பை உருவாக்க வல்ல ஓரே பண்டத்தைப் பெறுகிறான்.

பண்டம் என்ற முறையில் உழைப்புச் சக்தி குறிப்பிட்ட ஒரு மதிப்பிற்கு விற்கப்படுகிறது. மனிதனின் அவசியத் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டால் தான் அவனால் உழைக்க இயலும். ஒரு நாளில் தொழிலாளி குறிப்பிட்ட அளவு ரொட்டி, இறைச்சி, வெண்ணெய், சர்க்கரையைப் பயன் படுத்துகிறான், ஆடைகள், காலணிகளை அணிந்து அவற்றை குறிப்பிட்ட அளவு தேய்மானம் அடையச் செய்கிறான், வீட்டு வாடகைக்காகக் குறிப்பிட்ட அளவு பணத்தைச் செலவழிக்கிறான்; முதலாளிக்கான புதிய உயிருள்ள "பண்டம்” வளர்ந்து வரும் குடும்பத்தை அவன் பராமரிக்க வேண்டும். இதிலிருந்து உழைப்புச் சக்தியின் மதிப்பு, தொழிலாளியையும் அவனது குடும்பத்தையும் பராமரிப்பதற்கு அவசியமான வாழ்க்கைச் சாதனங்களின் மதிப்பிற்குச் சமமானது.

உழைப்புச் சக்தியின் மதிப்பின் முழுமுதல் அளவு பல்வேறு நாடுகளில் வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு மாதிரியானது. இது இயற்கைச் சூழ்நிலைகளையும் வரலாற்று ரீதியாக உருவாகியுள்ள உழைப்பாளிகளின் வாழ்க்கைத் தரத்தையும் பொறுத்தது. உற்பத்தியின் வளர்ச்சி, தொழில்நுட்ப முன்னேற்றம் போன்ற பொருளாதாரக் காரணங்களும் இதைப் பாதிக்கின்றன. ஒரு புறம் உழைப்பின் உற்பத்தித் திறன் வளர்ச்சி தொழிலாளர்களுடைய வாழ்க்கைச் சாதனங்களின் மதிப்பைக் குறைப்பதால் உழைப்புச் சக்தி மதிப்பைக் குறைக்கிறது. மறு புறம் நகரங்கள் வளர்ந்து வருவதால் போக்குவரத்துச் செலவினங்கள் அதிகமாகின்றன, எரிவாயு, தொலைபேசி போன்ற புதிய வீட்டு வசதிகளுக்கான செலவுகள் கூடுதலாகின்றன. புதிய கலாச்சாரத் தேவைகள் தோன்றுகின்றன. வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நாடுகளிலுள்ள நவீன தொழிலாளியால் பத்திரிககைகள், திரைப்படம், வானொலி, தொலைக்காட்சி இல்லாமல் இருக்க இயலாது. தொழிலாளியின், அவனது குடும்பத்தின் தேவைகள் வளருகின்றன என்றால் உழைப்புச் சக்தியின் மதிப்பு கூடுதலவாகிறது.

தமது நிலைமையை மேம்படுத்துவதற்காக முகலாளிகளுக்கு எதிராக பாட்டாளி வர்க்கம் நடத்தும் வர்க்கப்போராட்டமும் உழைப்புச் சக்தியின் மதிப்பின் அளவு மீது தாக்கம் செலுத்துகிறது.

உழைப்புச் சக்தியை வாங்கிய முதலாளி இதை உற்பத்திச் சாதனங்களுடன் ஒன்றிணைக்கிறான், ஆலைகள் கட்டப்பட்டு மூலப்பொருள் கொணரப்பட்டு தொழிலாளி இயந்திரத்தின் முன் நின்றதும் காரியம் துவங்குகிறது.

உழைப்புச் சக்தியின் பங்கும் உற்பத்திச் சாதனங்களின் பங்கும் வெவ்வேறானவை. உழைப்புச் சக்தி புதிய மதிப்பைத் தோற்றுவிக்கிறது. ஆனால் உற்பத்திச் சாதனங்களால் எந்தவித மதிப்பையும் தோற்றுவிக்க இயலாது. உற்பத்திச் சாதனங்களின் மதிப்பு தொழிலாளிகளின் உழைப்பால் தக்க வைக்கப்பட்டு, இந்தச் சாதனங்கள் தேய்மானம் அடைவதைப் பொறுத்து புதிதாக உற்பத்தி செய்யப்படும் பண்டங்களுக்கு மாற்றப்படுகிறது. உதாரணமாக, ஒரு இயந்திரத்தால் 10 ஆண்டுகள் வேலை செய்ய முடியுமெனில் ஒவ்வொரு ஆண்டும் இது தனது மதிப்பில் பத்திலொரு பங்கை இழக்கிறது, இந்தப் பகுதி புதிதாக உற்பத்தி செய்யப்பட்ட பண்டத்தின் மேல் மாற்றப்படுகிறது. மூலப் பொருள், உதாரணமாக பருத்தி தயாரான வடிவத்தில் புதிய பொருளாகிய பருத்தித் துணியில் முற்றிலுமாக இடம் பெறுகிறது, பருத்தியின் மதிப்பு முழுவதும் துணியின் மதிப்பிற்கு மாற்றப்படுகிறது.

குளிர்கால மேலாடைக்குத் தேவையான துணி, உள்துணி, பொத்தான்கள் போன்றவற்றின் விலை 50 டாலர்கள், தையற்கூலி 30 டாலர்கள் என்றால் தயாரான இந்த மேலாடையின் விலை 80 டாலர்களாயிருக்கும். 50 டாலர்களுக்குச் சமமான பழைய மதிப்பு தையற்காரனால் தக்கவைக்கப்பட்டு மேலாடைக்கு மாற்றப்பட்டது. குறிப்பிட்ட உழைப்பின் போக்கில் தையற்காரனால் உருவாக்கப்பட்ட புதிய மதிப்பு 30 டாலர்களாகும்.

முதலாளித்துவ உற்பத்திப் போக்கில் தொழிலாளியால் தோற்றுவிக்கப்படும் புதிய மதிப்பு தனது அளவில் அவனது உழைப்புச் சக்தியின் மதிப்பைவிட அதிகமாயிருக்கிறது.

ஒரு மணி நேரத்தில் தொழிலாளி 2 டாலர்களுக்குச் சமமான புதிய மதிப்பைத் தோற்றுவிக்கிறான், ஒரு நாள் உழைப்புச் சக்தியின் மதிப்பு 10 டாலர்கள் என்று வைத்துக் கொள்வோம். இப்படிப்பட்ட நிலையில் அவன் இதை ஈடு செய்வதற்காக 5 மணி நேரம் வேலை செய்ய வேண்டும். ஆனால் தொழிலாளி ஏதோ ஒரு அளவு உழைப்பை விற்கவில்லை, மாறாக தனது உழைப்புச் சக்தியை விற்கிறான், இதை வாங்குபவன் இதை விருப்பப்படி பயன்படுத்துகிறான். எனவே பாட்டாளி வேலை நாள் முழுவதும் உழைக்கிறான். இந்த வேலை நாள் 8 மணி நேரம் நீடிக்கும் என்றால் தொழிலாளி . இந்நேரத்தில் 16 டாலர்களுக்குச் சமமான புதிய மதிப்பைத் தோற்றுவிக்கிறான். இவ்வாறாக உற்பத்திப் போக்கில் தொழிலாளி தனது உழைப்பின் மூலம் தனது உழைப்புச் சக்தியின் மதிப்பைவிட அதிக மதிப்பைத் தோற்றுவிக்கிறான்.

முதலாளியால் இலவசமாக அபகரிக்கப்படும் இந்த வித்தியாசம் தான்--உபரி மதிப்பு-அவனது செல்வத்தின் மூல ஊற்றகும்.

இவ்வாறாக உபரி மதிப்பை உற்பத்தி செய்து அதை முத லாளிகள் அபகரிப்பதில்தான் முதலாளித்துவச் சுரண்டலின் சாரம் அடங்கியுள்ளது. எனவே கூலியுழைப்பு முறை என்பது கூலி அடிமை முறையாகும்.”
(சமூக விஞ்ஞானம் – முன்னேற்றப் பதிப்பகம் -1985- பக்கம் 144 - 147)

Wednesday, 26 June 2019

மார்க்சின் “மூலதனம்” நூல் பொருளாதாரத்தை மட்டும் பேசுகிறதா? இது பொருளாதார நூலா? அரசியலைப் பேசுகின்ற அரசியல் பொருளாதார நூலா?


மார்க்ஸ் மூலதன நூலுக்கு முன்பு எழுதிய "அரசியல் பொருளாதார விமர்சனத்துக்கு ஒரு பங்களிப்பு" என்ற நூலுக்கு எழுதிய முன்னுரையில் கூறப்பட்டுள்ளதை படித்தால், கம்யூனிஸ்டுகளுக்கு பொருளாதாரத்தின் மீதான அரசியல் என்ன என்பதை அறிந்து கொள்ளலாம். அது சமூக மாற்றமே அதாவது சமூக புரட்சியேயாகும். சமூக மாற்றம் அற்ற பாடமாக முதலாளித்துவ பொருளாதார அறிஞர்கள் மார்க்சின் மூலதனத்தை வெறும் பொருளாதார நூலாக, முதலாளித்துவ அமைப்பை விமர்சனம் மட்டும் செய்கின்ற நூலாக அறிமுகம் செய்கின்றனர்.

"மனிதர்கள் தங்களுடைய வாழ்க்கைக்காக ஈடுபடும் சமூக உற்பத்தியில் திட்டவட்டமான உறவுகளில் தவிர்க்க முடியாத வகையில் ஈடுபடுகிறார்கள். இந்த உறவுகள் அவர்களுடைய சித்தங்களிலிருந்து தனித்து நிற்பவையாகும், அதாவது அவர்களுடைய உற்பத்தியின் பொருளாயத சக்திகளில் வளர்ச்சியில் அந்தக் குறிப்பிட்ட கட்டத்துக்குப் பொருத்தமான உற்பத்தி உறவுகளாகும்.

இந்த உற்பத்தி உறவுகளின் கூட்டுமொத்தமே சமூகத்தின் பொருளாதார அமைப்பாக, அதன் உண்மையான அடித்தளமாக அமைகிறது. இதன் மீது சட்டம், அரசியல் என்ற மேற்கட்டமைப்பு எழுப்பப்பட்டு, அதனோடு பொருந்தக் கூடிய சமூக உணர்வின் குறிப்பிட்ட வடிவங்களும் உருவாகின்றன. பொருளாயத வாழ்க்கையின் உற்பத்தி முறை சமூக, அரசியல், அறிவுத்துறை வாழ்வின் பொதுவான போக்கை நிர்ணயிக்கிறது. மனிதர்களின் உணர்வுநிலை அவர்களுடைய வாழ்நிலையை நிர்ணயிப்பதில்லை, அவர்களுடைய சமூக வாழ்நிலையே அவர்களுடைய உணர்வுநிலையை நிர்ணயிக்கிறது.

வளர்ச்சியின் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில், சமூகத்தின் பொருளாயத உற்பத்திச் சக்திகள் அன்றைக்கிருக்கின்ற உற்பத்தி உறவுகளோடு - அல்லது அவற்றைச் சட்டபூர்வமான வார்த்தைகளில் வெளிப்படுத்துகின்ற சொத்துரிமை உறவுகளோடு - இதுவரை அவை இயங்கி வந்திருக்கின்ற சுற்றுவட்டத்துக்குள் மோதுகின்றன. இந்த உறவுகள் உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சிக்கான வடிவங்கள் என்பதிலிருந்து அவற்றின் மீது மாட்டப்பட்டிருக்கும் விலங்குகளாக மாறிவிடுகின்றன. இதன் பிறகு சமூகப் புரட்சியின் சகாப்தம் ஆரம்பமாகிறது."
(அரசியல் பொருளாதார விமர்சனத்துக்கு ஒரு பங்களிப்பு முன்னுரை)

மார்க்ஸ் எழுதிய மூலதன நூலைப் பற்றிய மதிப்புரையில் எங்கெல்ஸ் எழுதிகிறார்:-

"மூலதனத்தின் ஒரு முகமான குவிதல் மற்றும் திரட்சி என்பதோடு அக்கம்பக்கமாயும் அதே வேகத்தோடும் உழைக்கும் மக்கள் உபரி தொகையின் திரட்சியும் நடைபெறுகிறது. இவ்விரண்டும் சேர்ந்து முடிவில் ஒரு புறம் சமூகப் புரட்சியை அவசியமாக்கும் மறு புறத்தில் அதை சாத்தியமாக்கும் என்பதை நிரூபிக்கச் செய்யும் மார்க்சின் தற்படைப்பான சாதனையாகும்."
(மார்க்சின் "மூலதனம்" முதல் தொகுதி பற்றிய மதிப்புரை பக்கம் 15)

சோஷலிச சமூக மாற்றத்தை பேசாத, முதலாளித்துவ பொருளாதார அமைப்பை மட்டும் மூலதன நூல் பேசுகிறது என்பது அபத்தம் மட்டும் அல்ல, ஆபத்தானதாகும். சோஷலிச சமூக மாற்றத்தை சாத்தியமாக்கும் பொருளாயாத விளக்கத்தையே மூலதன நூல் நமக்கு சொல்கிறது.

எங்கெல்சின் வழிகாட்டுதலுடன் கீழ்காணும் மார்க்சின் வரிகளைப் படிக்கும் போது மூலதனம் என்னும் நூல் முதலாளித்துவம் பற்றிய நூல் மட்டும் கிடையாது, முதலாளிததுவத்தின் முடிவைப் பற்றியதும் ஆகும் என்பதை அறியலாம்.

மார்க்ஸ்:-
“முடிவில், உற்பத்திச் சாதனங்களின் மையப்பாடும் உழைப்பின் சமூகமயமாதலும் வளர்ந்து செல்கையில், அவற்றின் முதலாளித்து மேலோடு அவற்றுக்கு ஒவ்வாததாகி விடும்நிலை வருகிறது. ஆகவே அந்த மேலோடு உடைத்தெளியப்படுகிறது. முதலாளித்துவத் தனியுடைமையின் சாவு மணி ஒலிக்கிறது. உடைமை பறிப்போரின் உடைமை பறிக்கப்படுகிறது” மூலதனம் (முதல் தொகுதி பக்கம் 1027)

முதலாளித்துவத்தின் முடிவும், சோஷலிச சமூகத்தின் தொடக்கமும் பற்றியே மூலதன நூல் பேசுகிறது.

அதுமட்டும் அல்லாது மூலதன நூல் கம்யூனிச சமூகம் பற்றியும் பேசுகிறது. சமூக மாற்றத்துக்கு அஞ்சுகிற முதலாளித்துவ அறிஞர்கள், மார்க்சின் மூலதன நூலை வெறும் முதலாளித்துவ அமைப்பைப் பற்றி விமர்சிக்கிறது என்பதாக சுருக்கிக் காட்டுகின்றனர்.

மூலதன நூல் வெறும் பொருளாதார நூல் தான் என்பதே முதலாளித்துவத்தின் சதி.

அரசியல் பொருளாதாரம் என்பது மனிதச் சமூக வாழ்வின் அடித்தளமான பொருளாயாச் செல்வ உற்பத்தியை எடுத்துரைக்கிறது. அதாவது உற்பத்தியின் சமூக அமைப்பு, உற்பத்தி நிகழ்வின் போது மனிதர்களிர்களுக்கு இடையே ஏற்படுகிற பொருளாதார உறவுகள், மனித சமூக வளர்ச்சியில் தோன்றுகின்ற பொருளாயத நலன்கள், மற்றும் உற்பத்தி, வினியோகம், பரிவர்த்தனை போன்றவற்றை நிர்வகிக்கும் விதிகளை ஆராய்கிறது.

இந்த விதி எவ்வாறு சோஷலிசப்புரட்சிக்கு இட்டுச் செல்கிறது என்பதையே மூலதன நூல் நமக்கு விளக்குகிறது. சோஷலிசப் புரட்சிக்கான விஞ்ஞானத் தன்மையை மூலதன நூல் நமக்கு அளிக்கிறது. அதனால் இது வெறும் பொருளாதார நூல் அல்ல அரசியல் பேசுகிற அரசியல் பொருளாதார நூலாகும்.

Thursday, 20 June 2019

சோஷலிச சமூகத்தில் உழைப்புக்கேற்ற பங்கீடு என்னும் பொருளாதார விதி – பி.நிக்கிடின்


ஒவ்வோர் உற்பத்தி முறைக்கும் அதற்கென்று அமையும் பங்கீட்டு முறை உண்டு; உற்பத்தி உறவுகளே பங்கீட்டு உறவுகளை நிர்ணயிக்கின்றன.

முதலாளித்துவத்தில், சுரண்டும் வர்க்கங்களின் நலன் கருதியே பங்கீடு நடைபெறுகிறது. தொழிலாளர் உழைப் பால் உருவான சமூக உற்பத்திப் பொருளின் பெரும் பகுதியை, அதாவது உபரி மதிப்பு என்பதனைச் சுரண்டும் வர்க்கம் அங்கே தன தாக்கிக் கொள்கிறது. இப்பங்கீடு உழைப்பின்படி நடக்காமல் மூலதனத்தின்படி நடக்கிறது.

சோஷலிசத்தில், மொத்தச் சமூக உற்பத்திப் பொரு ளின் பங்கீடு சோஷலிச விரிவாக்க புனருற்பத்தியின் தொடக் கமும் பொருளாயத அடிப்படையும் ஆகும். அந்த மொத்தச் சமூக உற்பத்திப் பொருளின் ஒரு பங்கு, உற் பத்திச் சாதனங்கள் பயன்படுத்தப்பட்ட பிறகு அவற்றிற்குப் பதிலாக உபயோகிக்கப்படுகிறது. இன்னொரு பங்கு தேசிய வருவாயாக விளங்குகிறது. முழுச் சமூக நலன் கருதி அது வினியோகம் செய்யப்படுகிறது, உழைப் டபின் தரம், அளவு ஆகியவற்றைப் பொறுத்து அந்தத் தேசிய வருவாயின் ஒரு பங்கு (இது அவசியமான உழைப்பால் படைக்கப்படும்) கூலி என்கிற வடிவில் பங்கீடு செய்யப்படுகிறது. பங்கீட் டின் தலையாய வடிவம் இது தான்.

வளர்ந்த சோஷலிசச் சமூகத்தின் பங்கீட்டுப் பண்பை சோவியத் ஒன்றியத்தின் அரசியலமைப்புச் சட்டத்தின் 14 ஆம் விதி வரையறுக்கிறது. 'சோவியத் மக்களின் உழைப்பு சுரண்டலுக்கு அப்பாற்பட்டது; அதுவே மக்களின் சமூகச் செல்வ வளர்ச்சிக்கும் நலனுக்கும் ஊற்றாக இருப்பது: ஒவ்வொரு தனிமனிதனின் சமூகச் செல்வ வளர்ச்சிக்கும் நலனுக் கும் கூட அதுவே மூல ஊற்றாகும்,

“’திறமைக்கேற்ற உழைப்பு; உழைப்புக்கேற்ற ஊதியம்' என்பதே சோஷலிசக் கோட்பாடு; அதன் அடிப்படை யில் தான் உழைப்பு, நுகர்வு ஆகிய இரண்டின் அளவையும் அரசு நிர்ணயம் செய்கிறது.''

உழைப்புக்கேற்ற பங்கீடு என்பது சோஷலிசத்தில் ஒரு புறவயத் தேவையாகும். அங்கே உற்பத்தி என்பதே உற் பத்திச் சாதனங்களின் பொது சொத்தைப் பொறுத்தது. சோஷலிசக் கட்டத்தில், தேவைக்கேற்ற ஊதியம் என்கிற அளவுக்கு உற்பத்திச் சக்திகள் வளர்ச்சி பெறவில்லை. வாழ் வின் முதன்மைத் தேவை என்கிற கட்டத்தை உழைப்பு எய் தவில்லை, இன்றும் வாழ்க்கைச் சாதனமாகவே உழைப்பு விளங்குகிறது; அதற்கேற்ற வருவாயை எதிர்பார்க்கக் கூடிய நிலையிலேயே இருக்கிறது. இறுதியாக, சோஷலிசத் தில் மூளை உழைப்புக்கும் உடலுழைப்புக்கும் வேறுபாடுகள் இன்றும் நில வு கின் றன; நுண்ணிய உழைப்புக்கும் நுண்மை யற்ற உழைப்புக்கும் இடையேயான வேறுபாடுகளும் இன்றும் மறையவில்லை, ஆகவே உழைப்புக்கேற்ற பங்கீடு இயல் பாகவே நிகழ்ந்தாக வேண்டும்.

சோஷலிசத்தின் கீழ், சமூகத்தில் ஒருவரது நிலையையும் தல னையும் நிர்ணயிக்கும் ஒரே காரணி அவரது உழைப்பே; இதன் அடிப்படையில் நுகர்வுப் பொருள்களின் பங்கீடு சமூ கத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் ஆற்றும் உழைப்பின் அளவையும் தரத்தையும் பொறுத்தே அமைகிறது.

உழைப்புக்கேற்ற பங்கீடு என்பது சோஷலிசச் சமூகத்தின் பொருளாதார விதி.

உற்பத்தி உயர்வு, உழைப்பின் தரம், உற்பத்தித் திறன் ஆகியவற்றின் வளர்ச்சி, உழைப்பாளரின் ஊக்க அதிகரிப்பு - இவற்றை உந்துவிக்கும் நெம்புகோலாகவே உழைப்புக் கேற்ற பங்கீடு விளங்குகிறது எனக் கருதினார் லெனின்.

உழைப்புக்கேற்ற பங்கீடு என்ற சோஷலிசத்தில் காணப் படும் சாதகக்கூறு முதலாளித்துவத்தில் இல்லை. அத் குகை ய பங்கீட்டின் காரண மாக, சோஷலிசச் சமூகத்தில் உழைக்காத வருவாய், ஒட்டுண் ணியம் ஆகிய ஊறுகள் இல்லை. எனவே சோஷலிசத்தில் உற்பத்தி ஊற்றுகளுக்கும் தொழிலாளர் திருப்திக்கும் இடையூறுகள் இல்லை. மாறாக உழைப்புக்கேற்ற பங்கீடு உற்பத்தி வளர்ச்சியின் மாபெரும் உந்து சக்தியாக விளங்கி உழைப்பாளிகளின் திறமைகளின் எல்லைகளை விரிவடையச் செய்கிறது. “உழைக்காதவன் உண்ணலாகாது'' என்றார் லெனின். அந்தக் கூற்றில் “சோஷ லிசத்தின் அடிப்படை காணக்கிடக்கிறது; அதன் வலிமையின் தவிர்க்க முடியாத ஆதாரமும், அதன் இறுதி வெற்றியின் அழிக்க முடி யாத உறுதியின் அறிகுறியும் காணக் கிடக்கின்றன” (வி. இ. லெனின், தேர்வு நூல்கள், தொகுதி 8, பக்கம் 18).)

உழைப்புக்கேற்ற பங்கீட்டு விதியில் பொதிந்துள்ள பொருள் இது தான். 1) சமூகத்திற்காக ஒருவர் ஆற்றும். உழைப்பின் அளவையும் தரத்தையும் ஒட்டி அவருக்கான நுகர்வு நிதிப் பங்கீடு செய்யப்படுவ தன் அவசியம்; அதன் மூலம் உழைக்கும் மக்களது உழைப்பு நேரம் முழுமையாக வும் சரியாகவும் பயன்படுத்தப்படுகிறது என்கிற உத்தர வாதம். 2) ஒரு குறிப்பிட்ட நேரம் ஆற்றப்படுகிற நுண் ணு ழைப்புக்கு அதே நேரத்தில் ஆற்றப்படும் நுண்மையற்ற உழைப்பை விட அதிகமான கூலி வழங்கப்படுவ தன் அவ சியம்; அதன் மூலம் தமது திறமைகளை வளர்த்துக் கொள்ள வும் கலாசார, தொழில் நுட்ப நிலைகளை உயர்த்திக் கொள் ளவும் உழைக்கும் மக்களைத் தூண்ட வேண்டிய கட்டாயம். 3) கடின மான சூழ்நிலைகளில் இரும்பு, எஃகு, நிலக்கரி போன்ற தொழிற்சாலைகளில்) பணிபுரியும் தொழிலாள ருக்கு உயர்ந்த பொருளாய த ஊக்கிகளை வழங்க வேண்டிய தேவை, அதன் மூலம் அவர்களது உயரிய உழைப்புச் செல் விற்குச் சரியான ஈடு செய்யும் அவசியம்.

ஒவ்வொருவரது உழைப்பின் அளவையும் தரத்தையும் பொறுத்தே பொருட்செல்வம் பங்கீடு செய்யப்பட வேண். டும், பால், வயது, இனம், தேசியம் என்கிற வேறுபாடுகள் கருதாமல் மக்களது உழைப்புக்கு ஏற்ற ஊதியம் வழங்கப்பட வேண்டும்: இந்த இரு அவசியங்களையே உழைப்புக்கேற்ற பங்கீட்டுப் பொருளாதார விதி வெளிப்படுத்துகிறது எனலாம்.

கம்யூனிசத்தைக் கட்டும் காலக்கட்டம் முழுவதிலும் இவ்விதி செயல் படுகிறது. பொருளாயத மற்றும் கலாசாரச் செல்வச் செழிப்பு ஏற்பட்டு, உழைப்பு மக்களின் முதன்மைத் தேவை யாகப் பரிணமிக்கத் தொடங்கும் போது கம்யூனிசப் பங்கீட்டிற்கான நிலையைச் சமூகம் எய் தும் எனலாம்.

உழைப்புக்கேற்ற பங்கீடு என்கிற நிலையில், முழு மொத்தச் சமூக உற்பத்திப் பொருளின் ஒரு பகுதியே வினி யோகம் செய்யப்படுகிறது.

1) உற்பத்திச் சாதனங்கள் நுகரப்படும் போது அவற் றிற்குப் பதிலாக மற்றவற்றைப் பயன்படுத்தும் காலை நேரும் செலவுகள், 2) உற்பத்தி வி ஸ் தரிப்பிற்கான ஒரு பணத் தொகை, 3) காப்பு நிதி, இருப்பு நிதி, 4) நிர்வாகம் செய்ய வும்: பள்ளிகள், மருத்துவமனைகள் ஆகியவற்றைப் பரா மரிக்கவும் ஆகும் செலவுகள், 5) உழைப்புக்கான உடலுறுதி யில் லாதோர் காப்பு நிதி ஆகிய மேற்குறித்த செலவுகளை மொத்தச் சமூக உற்பத்திப் பொரு ளி லிருந்து கழிக்க வேண் டி யதன் அவசியத்தை மார்க் ஸ் கோத்தா வேலைத்திட்டத் தின் விமர்சனம் என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். அப்போது தான் சோஷலிசச் சமூகம் சரிவர இயங்கவும் முன் னேறவும் இயலும் என்பது அவரது கருத்து. மேற்கூறியவற்றுடன் நாட்டின் பாதுகாப்புச் செலவை யும் மொத்தச் சமூக உற் பத்திப் பொரு ளி லிருந்து கழித் தாக வேண்டும்.

விளைவாக, தனிமனித நுகர்வு நிதி மட்டுமே) உழைப்புக் கேற்ற பங்கீடு செய்யப்படுகிறது. | உழைப்பால் புதிதாக உருவான உற்பத்திப் பொருளின் ஒரு பங்கு பொருளுற்பத்தித் தொழிலாள ரின் சொந்த நுகர்வு நிதியில் சேர்க்கப்படுகிறது. அதுவே அவசிய உற்பத்திப் பொருள் என வழங்கப்படுகிறது. அப்பொருளை உரு வாக்கப் பயன்படும் உழைப்பே அவசிய உழைப்பு என வழங்கப்படுகிறது.

அவசிய உற்பத்திப் பொருளின் அளவுக்கு மேலும், உற்பத்தித் துறையிலும் சேவைத் துறையிலும் புதிதாக உரு வான உற்பத்தி பொருள் சமூக நிதியில் சேர்கிறது (அதற்கு முன் பயன் படுத்தப்பட்ட உற்பத்திச் சாதனச் செலவு கழிக்கப்படுகிறது). அது உபரி உற்பத்திப் பொருள் எனவும், அதற்கான உழைப்பே உபரி உழைப்பு எனவும் வழங்கப்படும். சோஷலிசத்தின் கீழ், உபரி உழைப்பால் படைத்துள்ள உபரி உற்பத்திப் பொருள் சமூகத் தேவைகளை நிறைவு செய்யப் செயன் படுகிறது. உற்பத்தியின் தொடர் வளர்ச்சிக்கும், மேம்பாட்டிற்கும், காப்பு நிதி, இருப்பு நிதி ஆகியவற்றின் உரு வாக்கத்திற்கும், நாட்டின் பாதுகாப்புச் செலவுக்கும், பொருளுற்பத்தி அல் லாத துறை சார்ந்த தொழிலாளர் தேவை நிறைவுக்கும் அது பயன் படுகிறது.

சோஷலிசத்தில் உபரி உற்பத்திப் பொருள் ஒரு சிலர் நலனுக்காகப் பயன்படுவதில்லை; அதற்கு மாறாக முழுச் சமூகத்தின், ஒவ்வொரு தனிப்பட்ட உழைப்பாளியின் தேவை நிறைவுக்காகவே பயன்படுகிறது. அது உபரி மதிப்பு எனக் கருதப்படலாகாது. ஏனெனில் அங்கே சுரண்டல் இல்லை; சுரண்டும் வர்க்கங்களும் இல்லை.

சோஷலிசத்தில், முதலாளித்து வத்தைப் போல், அவசிய உற்பத்திப் பொருளுக்கும் உபரி உற்பத்திப் பொருளுக்கும் இடையே பகை முரண்பாடுகள் இல்லை. இங்கே பொருளும் பத்தித் தொழிலாளருக்கும் உபரி உற்பத்திப் பொருள் தேவைப்படுகிறது. ஏனெனில் அது எல்லா உழைக்கும் மக்களின் தேவைகளையும் நிறைவு செய்கிறது. அத்துடன் சமூக உற்பத்தி வளர்ச்சிக்கும் உதவுகிறது.

உழைப்புக்கேற்ற பங்கீடு, உற்பத்தி விளைவுகளில் மக்களின் பொருளார்வத்தை உத்தரவாதம் செய்கிறது, உழைப்பின் உற்பத்தித் திறன் வளர்ச்சியைப் பெருக்குகிறது, நுண்மை உழைப்பை அதிகரிக்கிறது, உற்பத்தி நுட்பங்களை விருத்தி செய்கிறது. சோஷலிச ஒழுங்கை மக்களிடையே அறிமுகப் படுத்தி உழைப்பை எல்லாருக்கும் கட்டாயமாக்கி ஒரு படிப் பினையும் தருகிறது.

சோஷலிசத்தில் பொரு ளார்வம் அவசியமே. ஏனெனில் இன்னும் அந்தக் கட்டத்தில் உழைப்பு என்பது எல்லா மனி தர்களின் வாழ்வின் முதன் னை L.)த் தேவை என் கிற நிலையை அடையவில்லை. மக்கள் உணர்விலிருந்து முதலாளித்துவ எச்சங்கள் முழுமையாகத் தகர்க்கப்படவில்லை. பெரும் பான்மைத் தொழிலாளர் தமக்குரிய சமூகக் கடமைகளை உணர்வு பூர்வமாக ஆற்றுகின்றனர். ஆனாலும் சிற்சிலர் அவ்வாறு இல்லாமல் உழைப்பு ஒழுங்கை மீறவும் செய்கின்றனர்.

பொருளார்வக் கோட்பாட்டைச் செயல்படுத்துதல் என் பதன் பொருள் உழைப்புக் குறித்த கம்யூனிசப் பார்வையை உருவாக்குதல் ஆகும். மக்கள் உணர்வு நிலையிலிருந்து கடந்த கால எச்சங்களை நீக்கும் போராட்டத்தின் படைக்கலனாக அது விளங்குகிறது. உழைப்புக் குறித்த பழைய நோக்கி லிருந்து மக்களை விடுவிக்கிறது.

பொருளார்வக் கோட்பாடு, பொருட்செல்வம் ஒரே சமமாக பங்கீடு செய்யப்படுவதைத் தவிர்க்கிறது. அத் தகைய சரிசமப் பங்கீடு சோஷலிசத்துக்கு எதிரிடையானது . ஏனெனில் உழைப்புக்கேற்ற பங்கீடு என்பதே பொருளாதார விதி. குட்டி பூர்ஷ்வா முயற்சிகள் மார்க்சிய-லெனினியத்தை ஒரு முழுச் சமத்துவ மாக நிறுவ முனைகின் றன; அம் முயற்சிகள் திரிபு முயற்சிகளே. சோஷலிசத் தின் கீழ், சமத்து வம் என்பதன் பொருள் தனிப்பட்ட தேவைகள், வாழ்க்கை நுகர்வுகள் அனைத்தையும் ஒரே மட்டமாக்கி விடுவது என் பதில்லை, அதற்கு மாறாக ஒரு சமூக சமத்து வத்தை நிறுவு வதே அதன் நோக்கம். உற்பத்திச் சாதனங்கள் பொறுத்த சரிசம் உறவுகள், சுரண்டலிலிருந்து உழைக்கும் மக்கள் அனைவரின் சரிசம விடுதலை, உற்பத்திச் சாதனங்களின் தனிச் சொத்தின் சரிசமத் தகர் எ, உழைக்கவும், உழைப்புக் கேற்ற அவசியத் தேவைகளைப் பெறவுமான சரிசம உரிமை ஆகியவற்றையே சமூக சமத்துவம் என்று கூற வேண்டும்.

இவ்வாறாக, ஒரே மாதிரியான சமன் செய்தவற்றை சோஷலிசம் குறிக்கவில்லை; உழைப்புக்கேற்ற பங்கீட்டையே குறிப்பிடுகிறது. அப்பங்கீடு இரு வகைப்படும். ஒன்று ஆலை , அலு வ ல கத் தொழிலாளருக்குக் கூலி; இன்னொன்று கூட்டுப் பண்ணை , சஈட்டுறவுத் தொழில் கூலி ஆகியவை, இவ் விரண்டு வகைப் பங்கீடுகளும், உற்பத்திச் சாதனங்களின் இரு வகைச் சொத்து களுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை யொட்டி நடைபெறுகின்றன. அவ்விரு வகைச் சொத்துகள் அரசுச் சொத்து, கூட்டுப் பண்ணைக் கட்டுறவுச் சொத்து ஆகியவை.
(அரசியல் பொருளாதாரத்தின் அடிப்படைகள்,
முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ, 1988)