Friday, 23 May 2014

K.R.அதியமான் அவர்களின் “"உபரி மதிப்பு” என்னும் மாயை” என்ற கருத்தின் மீதான எனது எதிர்வினை:-

K.R.அதியமான் அவர்களின் “"உபரி மதிப்புஎன்னும் மாயை (http://nellikkani.blogspot.in/2009/11/blog-post.html) என்பதைப் படித்து எனது எதிர்வினையை பதிவுசெய்கிறேன்.

மார்க்சியம் எல்லோரும் ஏற்றுக்கொள்ளும்படியானது கிடையாது. அதனால் மார்க்சியம் எனக்கு விஞ்ஞானமானது என்றால் அது உங்களுக்கும் விஞ்ஞானமாக இருக்கும் என்று கட்டாயப்படுத்த முடியாது. இது சமூக வீஞ்ஞானம், இயற்கை விஞ்ஞானத்தைப் போல் ஒருவகைப்பட்டது அல்ல. இயற்கை விஞ்ஞானத்தைப் போல் பொதுத்தன்மையுடைவை கிடையாது. சமூக விஞ்ஞானம் சார்ப்புத் தன்மையுடையது. இந்த சார்ப்புத் தன்மையை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற கட்டாயப்படுத்த முடியாது. ஆனால் இந்தப் பொருளில் தான் மார்க்சியம் பேசுகிறது என்று புரிந்து கொள்ள முயற்சியுங்கள்.

மார்க்சியம் அரசியல் பொருளாதாரத்தை வரலாற்றியல் பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தில் அணுகுகிறது. கருத்துமுதல்வாதக் கண்ணோட்டத்தில் அணுகும் போது வேறுவிடையே கிடைக்கும். தத்துவச் சார்பின்படி கருத்துக்கள் மாறுபடுகின்றன.

மார்க்சிய அரசியல் பொருளாதாரம், சரக்கைப் பற்றி பேசும் போது அதன் மதிப்பை இரண்டு விதங்களில் கூறுகிறது. ஒன்று பயன்மதிப்பு மற்றொன்று பரிவர்த்தனை மதிப்பு. ஆனால் நீங்கள் அதன் பயன் மதிப்பை மட்டும் குறிப்பிடுகிறீர்கள். உங்கள் உதாரணத்தில், பாலைவனத்தில் குடிநீருக்கு ஏங்குபவரின் நீர் தேவையை குறிப்பிடுவது அவர்களின் பயன்மதிப்பே.

ஒரு பொருளின் (விலை) பண மதிப்பை தீர்மானிப்பது அதன் பரிவர்த்தனை மதிப்பே ஆகும். இரண்டு சரக்குகளின் பணமதிப்பை அதன் பயன்மதிப்பால் அறிந்திடமுடியாது, பரிவர்த்தனை மதிப்பைக் கொண்டே மதிப்பிடப்படுகிறது. உதாரணத்துக்கு இரண்டு கிலோ அரிசி ஒரு சட்டைக்கு சமமானது என்பது அதன் பரிவர்த்தனை மதிப்பைக் கொண்டு ஒப்பிடப்படுகிறது. இந்த ஆய்வுக்குள் நீங்கள் இன்னும் வரவேயில்லை.

பரிவர்த்தனை மதிப்பு பற்றி மார்க்ஸ்:-
"பார்த்த மாத்திரத்தில். பரிவர்த்தனை-மதிப்பானது ஓர் அளவு வழிப்பட்ட உறவாக, ஒரு வகைப்பட்ட பயன்-மதிப்புகள் இன்னொரு வகைப்பட்ட உறவாக, ஒரு வகைப்பட்ட பயன்-மதிப்புகளுக்குப் பரிவர்த்தனை செய்து கொள்ளப்படுகிற  விகிதாசாரமாக, காலத்துக்கும் இடத்துக்கும் ஏற்ப இடைவிடாமல் மாறிக் கொண்டிருக்கும் உறவாகக் காட்சி தருகிறது.
..
.. சரக்குகளின் பயன்-மதிப்பைப் பரிசீலனையிலிருந்து விட்டுவிடுவோமானால், உழைப்பின் உற்பத்திப் பொருட்களாக இருத்தல் என்ற ஒரே ஒரு பொதுவான குணமே அவற்றில் எஞ்சி நிற்கிறது. ஆனால் உழைப்பின் உற்பத்திப் பொருளும் கூட நமதுகையில் ஒரு மாற்றத்தை அடைந்துதிருக்கிறது. நாம் உற்பத்திப் பொருளின் பயன்-மதிப்பை நீக்கிவிட்டுப் பர்ர்போமானால், அதே நேரத்தில், அதனைப் பயன்-மதிப்பாக்குகிற பொருட்கூறுகள், உருவங்கள் ஆகியவற்றையும் நீக்கிவிட்டுப் பார்ப்பதாகும். இனியும் நாம் அதன் உருவில் மேசையை, வீட்டை, நூலை அல்லது வேறு ஏதேனும் பயனுள்ள பொருளைப் பார்ப்பதில்லை. பொருளாயதமான ஒன்று என்ற அதன் நிலை பார்வையிலிருந்து அகற்றப்படுகிறது. தச்சர், கொத்தர், நூற்பாளரது உழைப்பின் அல்லது வேறு திட்டமான வகைப்பட்ட திறனுடைய உழைப்பு எதனுடையவும் உற்பத்திப் பொருளாக இனி அதனைக் கருதவும் முடியாது. உற்பத்திப் பொருடகளின் பயனுள்ள பண்புகளோடு கூடவே, அவற்றில் உருக்கொண்ட உழைப்பின் பல்வேறு வகைகளது பயனுள்ள தன்மை, அந்த உழைப்பின் ஸ்தூல வடிவங்கள் (concrete labour) ஆகிய இரண்டையுமே பார்வையில் இருந்து அகற்றி விடுகிறோம். அவை அனைத்துக்கும் பொதுவானது எதுவோ, அது மட்டுமே எஞ்சி நிற்கிறது, அனைத்துமே ஒரே வகை உழைப்பாக, ஸ்தூலமற்ற மனித உழைப்பாகப் பெயர்க்கப்படுகின்றன.
..
..இவை இப்போது நமக்குச் சொல்வதெல்லம், மனித உழைப்புச் சக்தி அவற்றின் உற்பத்தியில் செலவிடப்பட்டிருக்கிறது, மனித உழைப்பு அவற்றில் உருக்கொண்டிருக்கிறது என்பதையே. அவை அனைத்துக்கும் பொதுவான இந்த சமூக சாரத்தின் படிகங்களாக நோக்குங்கால். அவையே மதிப்புகள் (Values)

சரக்குகள் பரிவர்த்தனை செய்யபடும் போதுஅவற்றின் பரிவர்த்தனை-மதிப்பு அவற்றின் பயன்-மதிப்பை சற்றும் சார்ந்திராத ஒன்றாகத் தன்னைக் காண்பித்துக் கொள்கிறது." (மூலதனம் முதல் தொகுதி பக்கம் 61-63)

அதே நேரத்தில் சரக்கின் தேவையை மார்க்சியம் அறிந்திடாமலோ, புரிந்திடாமலோ, புறக்கணிக்கவோ இல்லை.

சரக்கின் தேவையைப் பற்றி மார்க்ஸ்:-
"சரக்கு (commodity) என்பது, முதலாவதாக நமக்குப் புறத்தேயுள்ள பொருள், தனது குணங்களைக் கொண்ட எதேனும் ஒருவிதமான மனிதத் தேவைகளை நிறைவு செய்கிற ஒன்று.

இந்தத் தேவைகளின் தன்மை எப்படிப்பட்டதாய் இருந்தாலும் சரிதான், உதாரணமாக அவை வயிற்றிலிந்து உதித்தாலும் சரி, அல்லது கேளிக்கையிலிருந்து உதித்தாலும் சரி-எல்லாம் ஒன்றுதான். இந்தத் தேவைகளை அப்பொருள் எப்படி நிறைவு செய்கிறது - என்பது குறித்தும் இங்கு நமக்குக் கவலை இல்லை." (மூலதனம் முதல் தொகுதி பக்கம் 59)

முதலாளி என்ற சொல் உங்களைப் போன்றோர்களின் பொதுபுத்தியில் வில்லத்தனமான அர்த்தம் ஏற்பட்டிருப்பது போல் உபரிமதிப்பு என்பதும் சம்பளம் என்று தவறாக உங்களது பொதுபுத்தியில் ஏறியிருக்கிறது. அதனால் தான், "தொழில்முனைவோரின் 'உபரி மதிப்பு' என்ன ?" என்று கேட்க முடிகிறது.

உபரி மதிப்பு பற்றி மார்க்ஸ் கூறுகிறார்:-
"உழைப்பாளி உழைப்பு நிகழ்முறையில் ஒரு பகுதியின் போது, தன் உழைப்புச் சக்தியின் மதிப்பை மட்டுமே, அதாவது தன்வாழ்வுச் சாதனங்களின் மதிப்பை மட்டுமே உற்பத்தி செய்கிறார்.. , இப்போது, அவரது வேலை சமுதாய உழைப்புப் பிரிவினையை அடிப்படையாகக் கொண்ட ஓர் அமைப்பின் அங்கமே என்பதால், அவர் உள்ளபடியே தான் நுகர்கிற அவசியப் பண்டங்களை தானே நேரடியாக உற்பத்தி  செய்வதில்லை, பதிலுக்கு அவர் அந்த அவசியப் பண்டங்களின் அல்லது அவற்றை வாங்குவதற்கான பணத்தின் மதிப்புக்கச் சமமான மதிப்புடைய குறிப்பிட்ட ஒரு சரக்கை, .. உற்பத்தி செய்கிறார்.
..
படைக்கப்படும் புதிய மதிப்பு முன்னீடு செய்யப்பட்ட மாறும்-மூலத்தை மாற்றீடு செய்வதோடு சரி. இக்காரணத்தால் மூன்று ஷில்லிங் என்ற புதிய மதிப்பின் உற்பத்தி வெறும் மறுவுற்பத்தியின் சாயலைப் பெறுகிறது. ஆகவே, வேலை-நாளில் இந்த மறுவுற்பத்தி நடைபெறும் பகுதியை "அவசிய" உழைப்பு நேரம் என்றும், அந்த நேரத்தில் செலவிடப்படும் உழைப்பை "அவசிய உழைப்பு" ("necessary" labour) என்றும் அழைக்கிறேன். தொழிலாளியைப் பொறுத்தவரை அவசியம் என்பது எப்படியென்றால், இது அவரது உழைப்பின் குறிப்பிட்ட சமூக வடிவத்தை சார்ந்ததன்று, மூலதனத்தையும் முதலாளிகளின் உலகையும் பொறுத்த வரை அவசியம் என்பது எப்படி என்றால், தொழிலாளி இல்லையேல் முதலாளியும் இல்லை.

தொழிலாளி ஆனவர் உழைப்பு நிகழ்முறையின் இரண்டாவது காலப் பகுதியிலும்-அவரது உழைப்பு அவசிய-உழைப்பாய் இராத அப்பகுதியிலும்-உழைக்கிறார், உழைப்புச் சக்தியைச் செலவிடுகிறார் என்பது மெய்தான், ஆனால், அவரது உழைப்பு முன்போல் அவசிய-உழைப்பாய் இராததால் தனக்கென அவர் மதிப்பேதும் படைப்பதில்லை. அவர் உபரி-மதிப்பைப் படைக்கிறார், முதலாளியைப் பொறுத்த வரை, இவ்வுபரி-மதிப்பு ஒன்றுமே இல்லாமல் படைக்கப்படும் படைப்பில் அருமைபெருமைகளை எல்லாம் கொண்டதாகிறது. வேலை-நாளின் இந்தப் பகுதிக்கு உபரி-உழைப்பு நேரம் என்றும், அந்த நேரத்தில் செலவிடப்படும் உழைப்புக்கு உபரி-உழைப்பு (surplus-labour) என்றும் பெயர் சூட்டுகிறேன்." (மூலதனம் முதல் தொகுதி பக்கம் 294-296)

இதன் படி, நீங்கள் குறிப்பிடுகின்ற தொழில்முனைவோருக்கு உபரி மதிப்பு எங்கிருந்து வரும்?

தொழில்முனைவோருக்கு சம்பளம் அல்லது லாபம் அல்லது தம்மிடம் உள்ள பங்குகளுக்கான ஈவுத் தொகை என்பது, உருவான உபரிமதிப்பில் இருந்து பகிரப்படுகிறது என்கிறது மார்க்சியம். அதாவது தொழில்முனைவோர், தொழிற்சாலை நிர்வாகிகள், நில வாடகை, கட்டிட வாடகை முதலியவை எந்த மதிப்பையும் தோற்றுவிப்பதில்லை அவைகளுக்கான பணப்பட்டுவாடா உபரிமதிப்பிலிருந்து பகிர்ந்தளிக்கப்படுகிறது.

உபரிமதிப்பு என்ற சொல் மார்க்சிய அரசியல் பொருளாதாரத்தில் என்ன பொருளில் பயன்படுத்தப்படுகிறது என்பதை நீங்கள் அறிந்து கொண்டதாக தெரியவில்லை. அப்படி அறிந்து மார்க்சிய வழியில் இதனை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் மார்க்சியத்தை எதிர்க்க வேண்டும் அல்லது மறுக்க வேண்டும் என்று நினைத்திடும் நீங்கள், மார்க்சிய அரசியல் பொருளாதாரம் என்ன கூறுகிறது என்பதை புரிந்து மறுக்க முனையுங்கள்.

ஒரு தொழிற்பேட்டையில், ஒரே வகையான இரு தொழிற்சாலைகள் (சம அளவிலான முதலீட்டில்), ஒரே நாளில் துவக்கப்படுகின்றன என்று வைத்துக்கொள்வோம். என்று தொடங்கும் உங்களது உதாரணம் மதிப்பை படைக்காத நிகழ்வுகளைத் தான் பேசுகிறது என்பதை புரிந்து கொள்ள முயற்சியுங்கள். உற்பத்தி செய்முறையில் அல்லது உற்பத்தி செய்யப்பட்ட பொருள் தேவைப்படுகின்ற இடத்துக்கு எடுத்துச் செல்வதில் குளறுபடி என்பது மதிப்பை படைக்கின்ற பகுதிகள் கிடையாது, படைக்கப்பட்ட மதிப்பை நுகர்வுக்கு கொண்டு செல்லும் பகுதிகள். இந்தப் பகுதிகளை தேவையற்றதாகவோ, பயனற்றதாகவோ மார்க்சிய அரசியல் பொருளாதாரம் கூறவில்லை. ஆனால் அவைகள் மதிப்பை படைப்பதில்லை, படைக்கப்பட்ட உபரிமதிப்பை அல்லது மூலதனத்தை பகிர்ந்து கொள்கிறது.

தொழில்முனைவோர் தம்மிடம் உள்ள மூலதனத்தைக் கொண்டு, தொழில் புரிவதற்கு கட்டிடங்கள் கட்டுகிறார், இயந்திரங்களை வாங்கி நிறுவுகிறார், கச்சாப் பொருட்களை வாங்குகின்றார். இதற்கு செலவிடும் மூலதனம், மாறா மூலதனம் என்கிறார் மார்க்ஸ். ஏன் என்றால் இதற்கு செலவிடப்பட்ட மூலதனம் மதிப்பைப் படைக்கவில்லை. உழைப்பாளியின் கூலியாக கொடுக்கப்பட்ட மூலதனத்தை மாறும் மூலதனம் என்கிறார். ஏன் என்றால் இது மதிப்பைப் படைக்கிறது.

இவைகளை நீங்கள் புரிந்து கொள்வதற்கு, உழைப்புச் சக்திஉழைப்பின்  இரட்டைத் தன்மை, மாறும் மூலதனம், மாறா மூலதனம் என்பது பற்றிய அறிதல் அவசியப்படுகிறது. மார்க்சின் கண்டுபிடிப்பான உபரிமதிப்பு கோட்பாட்டை விஞ்ஞான பூர்வமாக விளக்குவதில் இவைகள் பெரும் பங்காற்றுகின்றன.

1. உழைப்புச் சக்தி (Labour-Power) :-
"உழைப்புச் சக்தி அல்லது உழைக்கும் திறன் என்று சொல்லும் போது ஒரு மனிதனிடம் உள்ள மூளையாற்றல்கள், உடலாற்றல்கள் ஆகியவற்றின்-ஏதேனும் ஒரு வகைப் பயன்-மதிப்பை உற்பத்தி செய்யும் போதெல்லாம் அவன் பயன்படுத்துகிற இந்த ஆற்றல்களின்-ஒட்டுமொத்தம் என்றே புரிந்து கொள்ள வேண்டும்.

ஆனால் நமது பணபுடைமையாளர் ஒரு சரக்காக விலைக்கு வரும் உழைப்புச் சக்தியைக் காண வேண்டுமானால் முதற்கண் பல்வேறு நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும். சரக்குகளின் பரிவர்த்தனை தன்னளவில், தன் சொந்த இயபிலிருந்தே விளைகின்றவற்றைத் தவிர வேறு எந்தச் சார்பு உறவையும் குறிப்பதில்லை. இந்த அனுமானத்தின் பேரில், உழைப்புச் சக்தியைப் பெற்றிருப்பவர்-உழைப்புச் சக்தி யாருடையதோ அந்தத் தனியாள்-அந்த உழைப்புச் சக்தியை ஒரு சரக்காக விற்பனைக்கு முன்வைக்கவோ விற்கவோ செய்தால்தான்-அப்படிச் செச்கிற அளவில் தான்- உழைப்புச் சக்தி ஒரு சரக்காக விற்பனைக்கு முன்வைக்கவோ விற்கவோ செய்தால்தான்-அப்படிச் செய்கிற அளவில் தான்-உழைப்புச் சக்தி ஒரு சரக்காக சந்தைக்கு வரமுடியும். அவர் இதைச் செய்ய வேண்டுமானால், அதைத் தன் விருப்பத்துக்குப் பயன்படுத்தும் நிலையில் இருக்க வேண்டும், தன் உழைக்கும் திறனின், அதாவது தன் சரீரத்தின் வில்லங்கமற்ற உடைமையாளராக இருக்க வேண்டும். அவரும் பணவுடைமையாளரும் சந்தையில் சந்தித்து, ஒருவர் வாங்குபவர், மற்றவர் விற்பவர் என்ற ஒரே ஒரு வேறுபாடு மட்டும் நிலவ சம உரிமைகளின் அடைப்பயில் ஒருவரோடு ஒருவர் பேரம் செய்கின்றனர், எனவே இருவரும் சட்டத்தின் பார்வையில் சமம் ஆகின்றனர்.
..
பணவுடைமையாளர் சந்தையில் உழைப்புச் சக்தி ஒரு சரக்காக இருக்கக் காண்பதற்கு இரண்டாவது அத்தியாவசிய நிபந்தனை, உழைப்பாளி தன் உழைப்பாலான சரக்குகளை விற்கிற  நிலையில் இருப்பதற்குப் பதிலாக உயிரும் உடலுமான அவரையே உறைவிடமாய்க் கொண்ட அவ்வுழைப்புச் சக்தியையே ஒரு சரக்காக விலைக்குக் கொடுக்கும் கட்டாயத்துக்கு ஆளாக வேண்டும்.
..
பணத்தை வைத்திருப்பவரோடு சந்தையில் நேருக்கு நேர் வருவது, உண்மையில் உழைப்பல்ல, உழைப்பாளியே. உழைப்பாளி விற்பது அவரது உழைப்புச் சக்தியையே. அவரது உழைப்பு உளளபடியே தொடங்கியதும் அது அவருக்குச் சொந்தமானதாயில்லை. எனவே அதனை அவர் விற்க முடியாது" (மூலதனம் முதல் தொகுதி பக்கம் 232-233-721)

2. ஸ்தூல உழைப்பு (concrete labour):-
சட்டையானது குறிப்பிட்ட ஒரு தேவையை நிறைவு செய்யும் பயன்-மதிப்பாகும். அது ஒரு தனி வகைப்பட்ட உற்பத்தி நடவடிக்கையின் விளைவாய் உருவாகிறது. இந்நடவடிக்கையின் இயல்பு அதன் நோக்க்ததாலும, இயங்கு முறையாலும், இலக்குப் பொருளாலும், சாதனங்களாலும், விளைவாலும் நிர்ணயிக்கப்படுகிறது. இவ்வாறு எதன் உபயோகம் அதன் உற்பத்திப் பொருளின் பயன்-மதிப்பால் குறிக்கப்படுகிறதோ, அல்லது எது அதன் உற்பத்திப் பொருளை பயன்மதிப்பாக்குவதன் மூலம் வெளிப்படுகிறதோ, அந்த உழைப்பைப் பயனுள்ள உழைப்பு என்று அழைக்கிறோம். இது தொடர்பாக அதன் பயன்தரு விளைவை மாத்திரமே நோக்குகிறோம்.
..
சட்டையைத் துணியின் சமதையாக்குவதன் மூலம் சட்டையில் உருக்கொண்ட உழைப்பை துணியில் உருக்கொண்ட உழைப்புக்குச் சமன் செய்கிறோம். சட்டை தைக்கிற தையலானது துணி நெய்கிற நெசவுக்கு மாறான வகையைச் சேர்ந்த ஸ்தூலமான உழைப்புதான் (மூலதனம் முதல் தொகுதி பக்கம் 68-79)

3. சூக்கும உழைப்பு (abstract labor):-
"சமதையாகப் பயன்படுகிற சரக்கின் தசையுரு, சுக்கும மனித உழைப்பின் பொருள்வடிவமாக்கமாக இடம்பெறுகிறது, அதே நேரத்தில் குறிப்பிட்ட பயனுள்ள ஸ்தூலமான உழைப்பின் உற்பத்திப் பொருளாகவும் உள்ளது. எனவே, இந்த ஸ்தூலமான உழைப்பு சுக்கும மனித உழைப்பைத் தெரிவிப்பதற்கான ஊடகம் ஆகிறது. ஒரு புறம், சட்டை சுக்குமமான மனித உழைப்பின் உருவாகவே இடம்பெறுகிறது என்றால், அப்படியே மறுபுறம், அதில் உள்ளபடியே உருக்கொண்டுள்ள தையல் அந்த சுக்கும மனித உழைப்பு ஈடேற்றம் பெற்றுள்ள வடிவமாகவே கணக்கிடப்படுகிறது. துணியின் மதிப்புத் தெரிவிப்பில், தையலின் பயன்பாடு அடங்கியிருப்பது உடைகள் தயாரிப்பதில் அன்று. மதிப்பு என்று, எனவே உழைப்பின் இறுகல் என்று, ஆனால் துணியின் மதிப்பில் ஈடேற்றம் பெற்ற உழைப்பிலிருந்து வேறுபடுத்த முடியாத உழைப்பின் இறுகல் என்று உடனே ஏற்றுக் கொள்ளும் படியான ஒரு பொருளைத் தயாரிப்பதிலேயே அப்பயன்பாடு அடங்கியுள்ளது. மதிப்பின் இததகையதொரு கண்ணாடியாகச் செயல்பட வேண்டுமானால், தையலுழைப்பு பொதுவான மனித உழைப்பாயிருக்கும் தனது சுக்கும பண்பை அல்லாமல் வேறு எதையும் பிரதிபலிக்கலாகாது.

..ஸ்தூலமான உழைப்பு அதன் எதிர்க் கூறாகிய சூக்குமமான மனித உழைப்பின் புலப்பாட்டு வடிவமாகிறது.." (மூலதனம் முதல் தொகுதி பக்கம் 89-90)

4. மாறா-மூலதனம், மாறும்-மூலதனம் (Constant Capital and Variable Capital):-
"..உற்பத்திச் சாதனங்கள், அதாவது கச்சாப் பொருள், துணைப் பொருள், உழைப்புச் சாதனங்கள் ஆகியவை மூலதனத்தின் எந்தப் பகுதியைக் குறிக்கின்றனவோ அந்தப் பகுதி உற்பத்தி நிகழ்முறையில் அளவுவழியிலான மதிப்பு மாறுபாடு எதையும் அடைவதில்லை. எனவே, நான் அதை மூலதனத்தின் மாறாப் பகுதி, அல்லது சுருக்கமாக மாறா-மூலதனம் (constant capital) என்று அழைக்கிறேன்.

மறுபுறம், உற்பத்தி நிகழ்முறையில், உழைப்புச் சக்தி குறிக்கிற மூலதனப் பகுதியின் மதிப்பு மாறுபாடு அடையவே செய்கிறது. அது தன் சொந்த மதிப்பின் சமதையை மறுவுற்பத்தி செய்வது மட்டுமல்லாது ஒரு மிகையையும், அதாவது உபரி-மதிப்பையும் உற்பத்தி செய்கிறது, இந்த மிகை அல்லது உபரி-மதிப்பு மாறுபடக் கூடியது, சூழ்நிலைகைகேற்ப அதிகமாகவும் இருக்கலாம், குறைவாகவும் இருக்கலாம். மூலதனத்தின் இந்தப் பகுதி மாறாப் பருமன் என்ற நிலையிலிருந்து மாறும் பருமனாகத் தொடர்ந்து மாற்றப்படுகிறது. எனவே, நான் அதை மூலதனத்தின் மாறும் பகுதி அல்லது சுருக்கமாக மாறும்-மூலதனம் (variable capital) என்று அழைக்றேன்." (மூலதனம் முதல் தொகுதி பக்கம் 286)

மார்க்சிய அரசியல் பொருளாதாரத்தில், உபரிமதிப்பு என்ற கோட்பாட்டை விஞ்ஞானத் தன்மையில் புரிந்து கொள்வதற்கு உழைப்புச் சக்தி, உழைப்பாளியின் இரட்டைத் தன்மை, மாறும் மூலதனம், மாறா மூலதனம் என்பவைகளை புரிந்து கொள்ள வேண்டும். இதனை புரிந்து ஏற்றவர்களால் தான் விஞ்ஞான மார்கசிய அரசியல் பொருளாதாரத்தை அறிந்து கொண்டவர்களாவர்.


16 comments:

  1. Marx predicted that each depression will be progressively worser than the previous one, while the standard of living of workers will also get worse with each cycle. and in the end capitalism will collapse on its own. the past 150 year history disproves this hypothesis. the workers standard of living had improved dramatically, esp in developed nations. and the depressions did not progress as he predicted. hence my arguments is sort of ‘reverse engineering’ ; Marx’s predictions did not occur. hence his basic premise of labour theory of surplus value itself is deeply flawed.

    ReplyDelete
  2. எமது பொருளாதார பேராசிரிய நண்பர், எனது கட்டுரை பற்றி எழுதிய மின்மடல் :

    Dear Athiyaman,

    Value determination is looked at by Adam Smith from the demand and supply angles. From the demand side, it is the estimation of the person who wants the good which determines value. From the supply side, in the primitive economy, where there was no property rights, it was the amount of labour which determined the value. After property rights entered the scene, he concluded that cost of production would determine the value. Since cost of production consisted of prices for the use of land, labour and capital, the conclusion that prices are determined by other prices was challenged by Ricardo. Marx was trying for the elusive measure of value, like a metre, which is having unvarying quality at all times and tried to locate it in abstract labour. He did not succeed. Piero Shraffa did attempt another route to arrive at the solution and partially succeeded.

    Your critique of Marx on the empirical plane is certainly valid.

    However, the quest for an unvarying measure of value would continue to haunt the minds of people in the future, as it did in the past. IMHO, Marx would continue to remain an enigma and would be relevant then also.

    S.Neelakantan. (ஆடம் ஸ்மித் முதல் மார்க்ஸ் வரை : செவ்வியல் பொருளாதாரம் என்று நூலை எழுதியவர். காலசுவடு பதிப்பகம்)

    ReplyDelete
  3. பரிவர்த்தனை மதிப்பு, பயன் மதிப்பு பற்றி மார்க்ஸின் கருத்துகள் சரி என்றே வைத்து கொள்வோம். இதை அடிப்படையாக கொண்டு அவர் கட்டமைக்கும் மாடல் தோற்கிறது. அதை தான் மேலே உள்ள இரு பின்னூட்டங்களில் சொல்லியிருக்கிறேன். அவரின் அடிப்படை கணிப்பு சரியாக இருந்திருந்தால், அதன் மூலம் அவர் derive செய்யும் inferences / projections சரியாக இருக்க வேண்டும். ஆனால் அப்படி நடக்கவில்லை. எத்தனையோ விஞ்ஞான கருத்தாக்கங்கள் பின்னாட்களில் பொய்பிக்கப்பட்டுள்ளன. உபரி மதிப்பு கோட்பாடு அப்படி பொய்பிக்கபடவே முடியாத கோட்பாடா என்ன ? எதுவும் அறுதியில்லை.

    ReplyDelete
  4. உபரி மதிப்பு ஆழமான குறைபாடுள்ளது என்பதை மார்க்சிய அரசியல் பொருளாதாரத்தை எதிர்க்கின்ற அனைத்து அறிஞர்களும் கூறிவருகிற ஒன்றே, இது ஒன்றும் புதியதானது கிடையாது. அவர்கள் மார்க்சின் உபரி மதிப்புக் கோட்பாட்டை மார்க்ஸ் கூறியபடி புரிந்து அதனை மறுக்கின்றனர். ஆனால் நீங்கள் "தொழில்முனைவோரின் 'உபரி மதிப்பு' என்ன ?" என்பது போன்ற மார்க்சிய அரசியல் பொருளாதரத்தின் அடிப்படையை புரிந்திடாமல் கேள்விகள் அவர்கள் கேட்பதில்லை. எந்த உபரி உழைப்பு நேரத்தையும் செலுத்தாத, தொழில்முனைவோரின் 'உபரி மதிப்பு' என்ன? என்ற கேள்வி உபரி மதிப்பைப் பற்றி புரிதல் இல்லாமையை வெளிப்படுத்துகிறது.

    முதலாளித்துவ பொருளுற்பத்தி சந்திக்கின்ற நெருக்கடியின் போதெல்லாம், முதலாளித்துவ பொருளாதார அறிஞர்களே மார்க்சின் பொருளதார முடிவுகளை ஆராய்ந்து கொண்டு தான் இருக்கின்றனர். பொருளதார நெருக்கடியின் போது வங்கிகளும் பெரிய நிறுவனங்களும் திவாலாகிக் கொண்டிருக்கின்றன. இதனைத் தொடர்ந்து தொழிலாளர்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகின்றனர். வேலையற்றோரின் எண்ணிக் கூடிக் கொண்டே செல்கிறது. சகஜ நிலை திரும்புவதற்கு பத்து ஆண்டுகளுக்கு மேல் செல்கிறது.

    தொழிலாளர்களின் மேம்பட்ட நிலை என்பது முதலாளித்துவ உற்பத்தி முறையின் சார்புநிலையில் தான் இருக்கிறது. தற்போது அமெரிக்க பொருளாதார நிலையினால் தொழிலாளர்கள் அனுபவிக்கும் இன்னல்களை நிங்கள் கணக்கில் கொள்ளவேயில்லை. வளர்ச்சியடைந்த நாட்டில் தான் பொருளாதார நெருக்கடி பெரிய அளவில் சந்தித்துள்ளன. அமெரிக்காவில் வேலையற்றோர்களின் விகிதம் பற்றி நீங்கள் கவலைக் கொண்டதாகத் தெரியவில்லை. குறிப்பாக 2010 முதல் 2013 வரையிலான ஆண்டுகளில் வேலையற்றோரின் எண்ணிக்கை மிகவும் அதிகம். அதே போல் பொருளாதார நெருக்கடி காலகட்டத்தில் நூறு ஆண்டுகாளக நிலைத்து நின்ற வங்கிகள் அமெரிக்காவில் திவாலாகிப் போன தகவல்கள் உங்களுக்கு முதலாளித்துவத்தின் வெற்றியாகப்படுகிறது. இந்த சார்பு நிலையையே நான் குறிப்பிட்டுக் கூறியுள்ளேன்.

    முதலாளித்துவ உற்பத்தி முறையும் பல ஏற்ற இறக்கத்துடன் தான் செயற்பட்டுக் கொண்டிருக்கிறது. சோஷலிச அரசின் இறக்கம் அல்லது வீழ்ச்சி என்பது உங்களுக்கு கம்யூனிசத்தின் வீழ்ச்சியாகப்படலாம் ஆனால் எங்களுக்கு அப்படிப்படவில்லை. அனைத்து நாடுகளும் கம்யூனிச நாடாக மாறிவிட்டப் பின்பும், உங்களைப் போன்ற கடைசி ஒருவர் இந்த உலகத்தில் இருப்பார், அவரையும் நாங்கள் சந்திக்க வேண்டிவரும் என்பது தெரிந்த ஒன்றே.

    முதலாளித்துவ உற்பத்தி முறையில் பொருளாதார நெருக்கடி தவிர்க்க முடியாது என்று மார்க்ஸ் சொன்னது எப்படி உண்மையாக நிகழ்ந்து கொண்டிக்கிறதோ, அதே போல் முதலாளித்துவ உற்பத்தி முறையின் இறுதி விளைவு பற்றி என்ன கூறினாரோ அதுவும் உறுதியானது.

    "ஒரு புதிய நெருக்கடியின் பின்விளைவாக மட்டுமே ஒரு புதிய புரட்சி சாத்தியம். ஆயினும் இது இந்த நெருக்கடி எவ்வளவு நிச்சயமானதோ அவ்வளவுக்கு அதுவும் நிச்சயமானது" , (பிரான்சில் வர்க்கப் போராட்டங்கள் 1848 முதல் 1850 வரை) என்கிற மார்க்சின் கருத்துக்கள் எங்களுக்கு மெய்பித்துக் கொண்டு தான் இருக்கிறது.

    ReplyDelete
  5. டாஸ் கேபிடலின் இறுதியில் அவர் கணித்தது நடக்கவில்லை. முக்கியமான மூன்று விசியங்கள் பற்றி பல முறை பல மார்க்சியர்களிடம் கேட்டும் இதுவரை பதிலில்லை : as surplus value is derived only from labour (and nothing else) the net surplus value in a system keeps reducing as capitalists add more and more labour saving machinery ; each business cycle will be worse than the previous one (the troughs will be lower than the previous trough) ; ultimately the system will collapse on its own : இவை முன்றும் நடக்கவில்லை. காரணம் உபரி மதிப்பு கோட்பாடே பிழையானது.

    முதலாள்த்துவம் என்று clear definition எதுவும் இல்லை. (கம்யுனிசம் போல்) ; மேலும் பல சோசியலிச கூறுகள் உள்ள இருப்பதால் ஏற்படும் distortionsகளால தான் அடிக்கடி மந்தங்கள், சிக்கல்கள் உருவாகிறது. இதை பற்றி எனது பதிவுகள் : http://nellikkani.blogspot.in/2013/01/blog-post.html

    ReplyDelete
  6. i had missed one last point in my previous comment : 3. the living conditions of labour will keep on getting worse and there is no scope for any improvement. but the opposite happened.

    மேலும் எனது முக்கிய பதிவையும் பார்கவும் :

    http://nellikkani.blogspot.in/2010/02/blog-post.html
    கம்யூனிசம் ஏன் வெற்றி பெற முடியாது ?

    ReplyDelete
  7. Athiyaman de Libertarian @ மார்க்சிவாதிகளான நாங்கள் இயற்கையையும் சமூகத்தையும் பொருள்முதல்வாதக் கணோட்டத்தில் அணுகுகிறோம். இயற்கையை பற்றிய தத்துவத்தை இயக்கவியல்பொருள்முதல்வாதம் என்றும் சமூகம் பற்றி தத்துவத்தை வரலாற்றியல் பொருள்முதல்வாதம் என்கிறோம். அரசியல் பொருளாதாரத்தை, மார்க்சியர்களான நாங்கள், வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தின் படியே அணுகுகிறோம். எங்களுக்கு இந்த அணுகுமுறையே சரியாகப் படுகிறது, முதலாளித்துவ சுரண்டலை இதுவே தெளிவாக வெளிப்படுத்துகிறது. அதனால் இதனையே பின்பற்றுகிறோம்.

    முதலாளித்துவ உற்பத்தி முறையில் தோன்றும் பொருளாதார நெருக்கடியை, மார்க்சிய வழியில் புரிந்து கொள்ளாமல் //2003 இருந்து 2008 வரை உலக பொருளாதரமே செயற்க்கையாக ‘வளர்ந்தது’ ; ஒரு பலூனில் தொடர்து காற்றை செலுத்துவது போல் ஊதி பொருகியது.// என்றும் "பொருளாதார மந்தங்களை தவிர்க்க தேவையானவை" என்று நீங்கள் பட்டியல் இடுவது அனைத்துவம் நிர்வாக தொடர்பானவையாகவே இருக்கிறது. ஆனால் மார்க்சியர்களுக்கு பொருளாதார நெருக்கடி முதலாளித்து உற்பத்தி முறையின் உள்ளார்ந் சிக்கலாகப் படுகிறது. இங்கே எங்களது பொருளாதாரத்துக்கான அரசியல் பாட்டாளி வர்க்க சார்புடையதாக இருக்கிறது. உங்களது பொருளாதாரத்துக்கான அரசியல் முதலாளித்துவத்துக்கான சார்பாக இருக்கிறது.

    "இதுநாள் வரையில் நிலவி வந்துள்ள சமுதாயத்தின் எழுதப்பட்ட வரலாறு அனைத்தும் வர்க்கப் போராட்டங்களின் வரலாறே ஆகும்." கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை நூலில் எங்களது சமூகப் பார்வை தெளிவாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. பாட்டாளி வர்க்கக் கோட்பாட்டை எதிர்க்கும் உங்களை முதலாளி வர்க்கக் கோட்பாளர் என்று கூறாமல் எப்படி இருக்க முடியும். மார்க்சியத்தை விமர்சிக்க வந்தவருக்கு, இந்த வார்த்தையைக் கேட்டாளே கொதிப்படைவது வியப்பையே தருகிறது. //இதுனால தான் இது போன்ற ஆட்டங்களுக்கு நான் வர விரும்புவதில்லை.// மார்க்சியத்தை விமர்சிப்பீர்கள் அதனை எங்களது கண்ணோட்டத்தில் பதிலளிக்காமல் வேறுவிதமாக எப்படி விமர்சிக்க முடியும்.

    மார்க்ஸ், எங்கெல்ஸ் இருவரும் "ஜெர்மன் சித்தாந்த்தம்" என்ற நூலில் கூறுகிறார்கள்:- “ஒவ்வொரு சகாப்தத்திலும் ஆளும் வர்க்கங்களின் கருத்துக்களே கோலோச்சும் கருத்துக்களாக விளங்கும். அதாவது, சமுதாயத்தின் பொருள்வகை சக்தியை ஆளும் வர்க்கம், அதே சமயம் அதன் கோலோச்சும் அறிவுத்துறை சக்திகளாகவும் விளங்கும். பொருள் உற்பத்தி சாதனங்களைத் தனது செயலாட்சியில் வைத்திருக்கும் வர்க்கம், அதேசமயம் அறிவுத்துறை உற்பத்தி சாதனங்கள் மீது கண்காணிப்புச் செலுத்தும், எனவே அதன் மூலம், பொதுப்படச் சொன்னால், அறிவுத்துறை உற்பத்தி சாதனங்கள் தம் வசம் இல்லாதவர்கள், அதற்குக் கீழடங்கி இருப்பார்கள். கோலோச்சும் கருத்துக்கள் என்பவை மேலோங்கி நிற்கும் பொருள்வகை உறவுகளின் லட்சிய வெளிப்பாடும், கருத்துக்களாகப் புரிந்து கொள்ளப்பட்ட மேலோங்கி நிற்கும் பொருள்வகை உறவுகளும் தவிர வேறு எதுவுமல்ல."

    கோலோச்சும் கருத்துக்கள் என்பவை மேலோங்கி நிற்கும் பொருள்வகை உறவுகளின் லட்சிய வெளிப்பாடும், கருத்துக்களாகப் புரிந்து கொள்ளப்பட்ட மேலோங்கி நிற்கும் பொருள்வகை உறவுகளும் தவிர வேறு எதுவுமல்ல என்பதே எங்களது முடிவு. இன்றை சமூகத்தில் கோலோச்சும் கருத்தை நீங்கள் பறைசாற்றிக் கொண்டிருக்கும் போது உங்களை முதலாளித்துவ வர்க்கத்தின் கருத்துரையாளர் என்று கூறாமல், முதலாளியையும் பாட்டாளியையும் விடுவிக்க வந்த இறைதூதன் என்றா கூறமுடியும்.

    சமூகம் வர்க்கமாக பிளவுட்டுள்ள நிலையில் கருத்துக்கள் வர்க்க சார்புடையவையாகவே இருக்கும், நீங்கள் பாட்டாளி வர்க்கத்தை சுரண்டுகிற, முதலாளித்துவ கருத்துரையாளர் என்று கூறுவது எங்களைப் பொருத்தளவில் சரியாது. கம்யூனிஸ்டுகள் எதனையும் மறைப்பது கிடையாது. அதனால் தான் பாட்டாளி வாக்கத்தின் ஆட்சி என்பது, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்று கூறுகிறோம். இன்றைய ஆட்சி முதலாளித்துவ வர்க்க சர்வாதிகாரம் என்று கூறுவதற்கு உங்களுக்கு வேண்டுமானால் சங்கடமாக இருக்கலாம். நாங்கள் யாதாத்த உண்மையே பேசுகிறோம்.
    //. பாட்டளி வர்கத்தின் நலன்களை பேண சரியான சந்தை பொருளியல் பாணி தான் சிறந்தது என்று தரவுகளுடன் பேசுகிறேன். // தரவுகளுடன் பேசினால் முடிவுகள் ஒரே மாதிரியாக இருக்குமா என்ன? பொருளாதார நெருக்கடிப் பற்றிய தரவுகள் உங்களை வேறுமாதிரி பேசவைக்கிறது, எங்களை வேறுமாதிரி பேசவைக்கிறது. இந்த வர்க்க சார்ப்பை புரிந்து கொள்ளாமல் மார்க்சியர்களுடம் விமர்சனத்துக்கு வராதீர்கள். வர்க்கத்துக்குப் அப்பாற்பாட்ட பார்வை எங்களுக்குக் கிடையாது.

    ReplyDelete
  8. ///இதுநாள் வரையில் நிலவி வந்துள்ள சமுதாயத்தின் எழுதப்பட்ட வரலாறு அனைத்தும் வர்க்கப் போராட்டங்களின் வரலாறே ஆகும்." கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை// இதை பற்றி அம்பேத்கார் சொன்னதை பற்றி பேசுங்களேன். அறிக்கையில் சொன்னால் அது தான் இறுதியாகிவிடுமா என்ன ? ///சமூகம் வர்க்கமாக பிளவுட்டுள்ள நிலையில் கருத்துக்கள் வர்க்க சார்புடையவையாகவே இருக்கும், நீங்கள் பாட்டாளி வர்க்கத்தை சுரண்டுகிற, முதலாளித்துவ கருத்துரையாளர் என்று கூறுவது //// முதலாளித்துவ கருத்துரையாளர் என்று சொல்லுங்கள். ஓகே. ஆனால் பாட்டளி வர்கத்தினரின் ‘எதிரி’ அல்லது அவர்களின் நலன் பற்றி அக்கரையில்லாதவன் என்ற முடிவு தவறானது. உங்களை போன்றவர்களை செலுத்தும் அதே மனிதனேயம் மற்றும் லட்சியவாதம் தான் எம்மை போன்ற மாற்றுகருத்தாளர்களையும் செலுத்துகிறது என்பதை புரிந்து கொள்ள மறுக்கிறீர்கள். கடந்த 150 வருட வரலாற்றில் இருந்து பாடம் கற்று கொள்ள மறுக்கிறீர்கள். சீனா 1978க்கு பின் ஏன் இப்படி மாறியது, மாற்றம் என்ன விளைவுகளை ஏற்படுத்தியது : இதை எல்லாம் சரியாக ஆய்வு செய்வதில்லை. இஸ்லாமிய அன்பர்களிடன் விவாதித்தால் அவர்கள் குரானை தவிர வேறு எதையும் ஏற்க்க மறுத்து, நவீன சிந்தனையை மறுப்பார்கள். மார்க்ஸ், ஏஞ்சென்ல்ஸ், லெனின், மாவோ தவிர வேறு யாருடைய சிந்தனைகளையும் நீங்க ஏற்பதில்லை. சரி, பரவாயில்லை. this kind of closed minds and obstinate refusal to look at reality will keep you people in the sidelines forever.

    ReplyDelete
  9. வெங்கடேஸ் ஆதிரயிவின் நூலை பற்றிய ‘விமர்சனத்தில்’ அவர் முதலாளிகளுக்கு சார்பாக பேசுகிறார் என்று ஒரு வரியை கொண்டு முடிவு செய்கிறிர்கள். சூப்பர் தோழர். இப்படியே எல்லோரையும் நிராகரித்து கொண்டு தொடருங்கள். ஊர் இரண்டு பட்டால்....

    /distortions are caused by 'socalistic concepts' deeply ingrained in many ruling elites. Keynesian economic polices is one version of this. மார்க்ஸ் காலத்தில் இதெல்லாம் உருவாகவே இல்லை. அப்ப gold standard for currencies in most areas while fiat money (free to print) that is quite common today was almost not there in his time. இதை பற்றி எனது பதிவில் தெளிவாக சொல்லியிருக்கிறேன், சுருக்கமாக. முதலாளித்துவம் என்பது a generic term and loosely defined (even by marxisits). credit expansion by central banks, forex manipulation by exporting nations, subsidies for housing companies, tax breaks : all these are symptoms of 'socialistic' thinking. that is anti-market thinking. all these issues cannot be understood from within Marxist idealogy. you have to understand modern economics.// இவை பற்றி மார்க்சிய ஏடுகளில் எதுவும் இருக்காது. but you will continue to use only those old texts to interpret all world events. அதனால் என்ன. யார் எதை வேண்டுமானாலும் நம்பலாம்.

    ///அமெரிக்க அரசுக்கு எதிரான கருத்துரைத்தவர் அமெரிக்காவில் வாழ முடியாத நிலையை ஜனநாயகமாகப் பார்க்கிறீர்கள்.
    /// snowden worked for US army and stole its secrets. hence he is prosequeted . அதை சரி என்று சொல்லவில்லை. ஆனால் அமெரிக்காவில் அமெரிக்க அரசின் மீறல்களை மிக கடுமையாக விமர்சிக்கும் பலர் தாரளமாக இயங்குகின்றனர். அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சியும் இயங்கி கொண்டு தான் இருக்கிறது. பல குறைகள் இருந்தாலும் அடிப்படை ஜனனாயக ம் அங்கு இந்தியாவை விட செம்மையாகவே இருக்கிறது. local goverments and basic democracy. ஆனாலும் நீங்க 100 சதம் perfectஆக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்த்து கொண்டு, ஸ்டாலின், மாவோ செயத ஜனனாயக படுகொலைகளை, மானிட அழிப்புகளை நியாயப்படுத்துகொண்டிருக்கிறீர்கள். இது பெரிய நகைமுரண். இப்பவே இப்படி சொல்கிறீர்கள் : ////பாட்டாளி வர்க்கத்தின் அரசு பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்று கூறித்தான் செயல்படுகிறது. அதனால் கண்டிப்பாக உங்களைப் போன்றவர்களின் கருத்துக்கு அங்கே இடம் இருக்காது./// அதாவது என்னை போன்றவர்களை போட்டு தள்ளு விடுவீர்கள். ஜனனாயகம், மாற்று கருத்து பற்றி நீங்க பேசறீங்க. சரியான ஃபாசிச பாணியை நீங்க முன்மொழிந்து கொண்டு. நல்ல வேளையாக அதிகாரம் உங்க கைக்கு எப்போதும் செல்லாது.

    ReplyDelete
  10. //அறிக்கையில் சொன்னால் அது தான் இறுதியாகிவிடுமா என்ன ?// அறிக்கையின் மார்க்ஸ் எங்கெல்ஸ் முன்னுரைகளைப் படித்திருந்தால், அறிக்கை இறுதியாகிவிடுமா என்பது போன்ற கேள்விகைகளை நீங்கள் எழுப்பியிருக்க மாட்டீர்கள்.

    அறிக்கையில் சொன்னது எனக்கு ஏற்புடையதாக இருப்பதால் அதனையே நான் ஏற்கிறேன். அறிக்கையில் கூறப்பட்ட அடிப்படைக் கோட்பாடுகள் தான் எங்களுக்கு வழிகாட்டி. உங்களுக்கு யாரெல்லாம் ஏற்புடையவரோ அவர்களை எல்லாம் நான் படித்து ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று எதிர்ப்பார்க்கிறீர்கள். உங்களுக்கு ஏற்புடையதேயே ஏற்கிறீர்கள். அதே போல் எனக்கு ஏற்புடையதையே நான் ஏற்கிறேன்.

    அறிக்கையில் காணப்படும் கருத்து எனக்கு ஏற்புடையதாக இருக்கிறது என்பதனால் அதனை நான் பின்பற்றுகிறேன். அறிக்கையில் காணப்படும் கருத்து உங்களோடு முரண்படுவதால் அதனை நீங்கள் மறுக்கிறீர்கள். இதனை புரிந்து கொள்ள முயற்சியுங்கள்.

    உங்கள் கருத்தோடு உறுதியாக நிற்பதற்கு என்ன உரிமை உங்களுக்கு இருக்கிறதோ அதே உரிமையும் எனக்கும் இருக்கிறது. உங்களது கருத்துக்களை கேட்டவுடன் நான் மாறியாக வேண்டும் என்ற உங்களது நினைப்பை நினைக்கும் போது வியப்பையே ஏற்படுத்துகிறது.

    முதலாளித்துவ உற்பத்தி முறையில் தொழிலாளர்களை சுரண்டும் விதத்தை அம்பலப்படுத்திய உபரிமதிப்பை ஏற்காதவரை, பாட்டாளி வாக்க நல விரும்பி என்று எவ்வாறு கூறமுடியும்.

    இஸ்லாமியர்களுக்கு குரான், கிருத்துவர்களுக்கு பைபிள், இந்துக்களுக்கு பிரஸ்தானதிரியம், எங்களுக்கு மார்க்ஸ், உங்களுக்கு மார்க்சிய எதிரியான அனைத்து பொருளாதார நூல்களும் இதில் ஆச்சரியப்படுவதற்கு என்ன இருக்கிறது.

    ReplyDelete
  11. //உபரி மதிப்பு கோட்பாடு அப்படி பொய்பிக்கபடவே முடியாத கோட்பாடா என்ன ? எதுவும் அறுதியில்லை.// பொய்பிக்க வேண்டும் என்ற உங்களது விருப்பத்தை எங்கள் மீது எப்படி திணிக்க முடியும். நீங்கள் பேசுவது அனைத்தும் எனக்குப் பொய்யாகத் தான் படுகிறது, அதனால் அதை எல்லாம் நீங்கள் விட்டுவிடுங்கள் என்று கூறமுடியுமா?

    உபரி மதிப்பை எதிர்க்கின்ற உங்களது கோட்பாடு என்பது புதியதா என்ன? உபரி மதிப்பை மார்க்ஸ் கண்டுபிடித்தது முதல் சந்தித்து வருகின்ற ஒன்றே அது.

    மார்க்சியத்தின் மீது நாங்கள் பிடிப்போடு இருப்பது உங்களை வேதனைப்படுத்துகிறது. அதற்கு நாங்கள் செய்வதற்கு ஒன்றும் இல்லை.

    டெனிஸ் கொலன் எழுதிய "மார்க்ஸின் கொடுங்கனவு" போன்ற மார்க்சிய எதிர்ப்பான நூல்கள் ஆயிரக்கணக்காக வந்தாலும் எங்களது மார்க்சிய சிந்தனையை சிதைத்திட முடியாது என்பதே உண்மை. இது போன்ற நூல்களை சந்தித்த எங்களுக்கு, உங்களது கருத்துக்கள் பெரிதாகப்படவில்லை என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.

    //பல குறைகள் இருந்தாலும் அடிப்படை ஜனனாயக ம் அங்கு இந்தியாவை விட செம்மையாகவே இருக்கிறது// உங்களது அமெரிக்க பற்றை என்வென்பது.

    அடுத்த நாட்டினுள் நுழைந்து தனது நலன்களை திணிக்கும் அமெரிக்கா உங்களுக்கு சிறந்த ஜனநாயக நாடாகத் தெரிகிறது. எண்ணை வயல்கள் நிறைந்த நாட்டின் மக்கள் மீது அமெரிக்காவின் ஜனநாயக!!!! பாய்ச்சல் எல்லாம் உங்களுக்கு சிறந்த ஜனநாயகமாகத் தெரிகிறது. எண்ணை வயல் கொண்ட நாட்டின் அதிபர், அமெரிக்க முதலாளிகளின் நலன்களுக்கு எதிராய் நின்றால் நயவஞ்சகமாக கொல்லும் போக்கு உங்களுக்கு சிறந்த ஜனநாயகமாகத் தெரிகிறது.

    இந்த நிலைப்பாடுகளின் வெளிப்பாடே //உபரி மதிப்பு கோட்பாடு அப்படி பொய்பிக்கபடவே முடியாத கோட்பாடா என்ன ? எதுவும் அறுதியில்லை.// என்ற உங்களது கருத்துக்கள் என்பதை நான் தெரிந்தே உங்களோடு பேசிவருகிறேன். நீங்கள் அமெரிக்க தொழில்முனைவோர்களின் நலன்களைப் பிரதிபலிக்கலாம், மார்க்சியத்தை ஆதரித்து நாங்கள் தொழிலார்களின் நலனில் அக்கறை செலுத்தினால் கடுப்பாவீர்கள்

    ReplyDelete
  12. K.R.அதியமான் @ //வெங்கடேஸ் ஆதிரயிவின் நூலை பற்றிய ‘விமர்சனத்தில்’ அவர் முதலாளிகளுக்கு சார்பாக பேசுகிறார் என்று ஒரு வரியை கொண்டு முடிவு செய்கிறிர்கள்.// மார்க்ஸ் எழுதிய "அரசியல் பொருளாதார விமர்சனத்துக்கு ஒரு பங்களிப்பு" என்ற நூலிற்கு, எங்கெல்ஸ் தமது மதிப்புரையில் எழுதியுள்ளார், "இந்தக் கட்சி (ஜெர்மன் பாட்டாளி வர்க்கக் கட்சி) தோன்றியதில் இருந்துதான் தனிப்பட்ட விஞ்ஞானம் என்ற முறையில் ஜெர்மன் அரசியல் பொருளாதாரம் தொடங்குகிறது. வரலாற்றைப் பற்றிய பொருள்முதல்வாதம் இந்த ஜெர்மன் அரசியல் பொருளாதாரத்தின் அவசியமான அடிப்படையாகும்,..." ஆக வரலாற்றியல் பொருள்முதல்வாதம் அரசியல் பொருளாதாரத்துக்கு அவசியமான அடிப்படையாகும். இந்த வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தை வெங்கடேஷ் ஆத்ரேயா ஏற்றுக் கொள்ளாமல் சிதைந்த வகையில் வெளிப்படுத்துயுள்ளார்:-
    “உற்பத்தி சக்திகளையும் உற்பத்தி உறவுகளையும் ஒரு சமூதாயத்தின் கட்டுமானம் அல்லது பொருளாதார அடித்தளம் என்று பல மார்க்சிய எழுத்தாளர்கள் குறிப்பிடுகின்றனர். .. ..

    சில மேற்கட்டுமானமும் அடித்தளத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கிறது. ஆனால், அடிக்கட்டுமானம் தான் மேல்கட்டுமானத்தின் மீது தீர்மானகரமான செல்வாக்கைச் செலுத்துகிறது என்பதும் வலியுறுத்தப்படுகிறது."

    உற்பத்தி சக்திகளையும் உற்பத்தி உறவுகளையும் சமூகத்தின் அடித்தளம் என்று மார்க்ஸ், எங்கெல்ஸ், மற்றும் லெனின் கூறியிருக்க, பல மார்க்சிய எழுத்தாளர்கள் என்று குறிப்பிடுகின்றனர்.

    மேலும் எனது விமர்சனத்தில்:-

    "பொருளாதார நியதிவாதம் என்றால் என்ன? அடித்தளம் மேல்கட்டுமானத்தை தீர்மானிக்கிறது என்பதை மட்டும் ஏற்றுக் கொண்டு, மேல்கட்டமைப்பினுடைய அடித்தளத்தின் மீதான வரம்விற்குட்பட்ட தாக்கத்தை, ஏற்றுக்கொள்ளாமல் இருப்பதாகும். அது மட்டுமல்லாது அடித்தளம் மேற்கட்டமைப்பை தானே நிறுவிக் கொள்ளும் என சோம்பியிருப்பதுமாகும். இதை புரியவைப்பதற்கு எந்த சிரமும் எடுக்கத் தேவையில்லை. ஆனால், மேல்கட்டுமானத்தின் சுதந்திரம் சார்புநிலையானது என்பதை வெங்கடேஷ் ஆத்ரேயா அவர்கள் ஏற்றுக்கொள்ளாமல் இருப்பதனால் தான் சிக்கல் ஏற்படுகிறது.

    “சித்தாந்த .. .. துறைகளை மற்றவற்றுடன் ஒப்பிடும்போது கணிசமான அளவில் சுதந்திரமாகச் செயல்படுகின்றன என்பதை வெளிப்படையாக ஏற்றுக் கொள்கிறது. ஆனால், அதே நேரத்தில் மேலே விளக்கப்பட்ட விரிவான பொருளில் அடிப்படையில் பொருளாதாரம் இறுதியாகத் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கிறது என்று வரலாற்றுப் பொருள்முதல்வாதம் குறிப்பிடுகிறது.” (பக்கம் 26)

    அது எப்படி மேல்கட்டுமானம் சுதந்திரமாகவும், அதே நேரத்தில் பொருளாதாரம் இறுதியாக தீர்மானிக்கும் சக்தியாகவும் இருக்கிறது என்று சொல்லமுடியும். அடித்தளம் மேற்கட்டமைப்பை தீர்மானித்தால், மேற்கட்டமைப்பு முழுமையான சுதந்திரம் பெற்றதாகக் இருக்கமுடியாது. மேற்கட்டமைப்பு முழுச் சுதந்திரமாக செயல்படும் என்றால், அடித்தளத்தின் தீர்மானிக்கும் பங்கை ஏற்றுக் கொள்ள முடியாது. இதற்கு பதிலாக வெங்கடேஷ் ஆத்ரேயா கூறுகிறார்."

    வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தை மார்க்சிய வழியில் ஏற்றுக்கொள்ளாமல் போனால் அரசியல் பொருளாதாரத்தில் மார்க்சின் முடிவுக்கு வரமுடியாது என்பதை நான் விமர்சனத்தில் எழுதியிருக்கிறேன். "சூப்பர் தோழர். இப்படியே எல்லோரையும் நிராகரித்து கொண்டு தொடருங்கள். ஊர் இரண்டு பட்டால்...." என்று நான் எழுதியதை புரிந்து கொள்ளும் திறமில்லாமல் கருத்துரைத்துள்ளீர்கள்.

    இதனை புரிந்து கொள்ள முடியாத அறிவுடன் தான் மார்க்சியத்தைப் பற்றி விமர்சித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை இன்றாவது புரிந்து கொள்ளுங்கள்.

    மார்க்சியத்தை மார்க்சியமாக புரிந்து கொண்டு எதிர்க்க முயலுங்கள். மார்க்சியத்தை எதிர்பதற்கான தகுதியை முதலில் பெற்றுக்கொள்ள முயற்சியுங்கள்.

    ReplyDelete
  13. K.R.அதியமான் அவர்களும் நானும் நடத்திய முகநூல் உரையாடல்;-
    https://www.facebook.com/eswaran.ak/posts/507375576060940?comment_id=509914105807087&offset=0&total_comments=45

    ReplyDelete
  14. K.R.அதியமான் அவர்களும் நானும் நடத்திய முகநூல் உரையாடல்;-
    https://www.facebook.com/photo.php?fbid=507383096060188&set=a.137688413029660.28762.100003655058620&type=1&theater

    ReplyDelete
  15. மார்க்சியத்தைப் பற்றிய சிறிய தொகுப்பு நூலை, நாடெங்ககும் பரப்புவதால் மார்க்சியப் புரிதல் பயந்தரும் நன்றி.

    ReplyDelete
    Replies
    1. உபரி மதிப்பு கோட்பாட் டை குழப்புகிறவர்கள் கவணத்திற்கு
      1) உ ழைப்பு தான் ஒரு பொருளுக்கு மதிப் பை கொடுக்கிறது, என்பது மார்க்சின் கண்டுபிடிப்பல்ல, இதனு டைய பெற் றோர்கள் பி ரெஞ்சு ஃபிசி யோகிராட்ஸ். ஆடம்ஸ்மித். மற்றும் டேவிடட் ரிக்கார்டோ போன்ற 18ம் நூற்றாண்டு ஐ ரோப்பிய மற்றும் பிரிட்டன் நாட்டு பொருளாதார நிபுணர்கள்

      2) ஆடம்ஙஸமித்தும். டேவிட் ரிக்கார் டோவும் முன் மொ ழிந்த உழைப்புக் கோட்பாட் டைமார்க்ஸ் மேன் மை படுத்தினார், உழைப்பு கோட்பாட்டினுள் இருக்கும் முரன்படும் இய லை அவர்தான் கண்டுபிடித்தார். அதற்கு அவர் உ ழைப் பை அ தைச் செலுத்துபவனிடடமிருந்து பிரித்து உ ழைப்பு சக்தி, கு றைந்த பட்ச உ ழைப்பு நேரம் என்ற கற்பிதங்க ளை உருவாக்கி விளக்கினார், இல்லாத ஒன் றை வைத்து இருக்கிற ஒன்றை தேடுவது மானுட இயல்பு என்று மார்க்ஸ் கூறி யே விளக்குகிறார், 3) கடவுள், பூஜ்யம், , ஸ்குயர் ரூட் ஆஃப் மைனஸ் ஒன் , பணம் இந் நான்கும் கற்பிதங்க ளே , கடவுள் என்ற கற்பிபதம் ஆண்மீக வாத த த்துவத் தை மட்டுமல்ல மூடநம்பபிக் கை க ளை பரப்பிடவும் உதவுகிற கற்பிதமாகும், பூஜ்யம் கற்பிதம் இல்லாமல் கூட்டல், கழித்தல், வகுத்தல் பெருக்கல் சாத்திய மே இல் லை, ஸ்குயர் ரூட் ஆஃப் மைனஸ் ஒன் என்ற கற்பிதம் இல்லாமல் மினசாரத் தை அளந்திட இயலாது, கம்பூயுட்டர் மொழி யை ப டைக்க இயலாது. கற்பிதங்கள் எவ்வாறு எதார்த் உலகில் எழும் சிக்கல்க ளை தீர்க்க உதவுகிறது என்ப தை புரிய ஸ்குயர் ரூட் ஆஃப் மைனஸ் ஒன் பற்றி மார்க்சும் எங் கெல்சும் கருத்து பறிமாறிக் கொண்ட தை கடிதங்கள் காட்டுகின்றன. பணமில்லாமல் பரிவத் த னை போன்ற பொருளதார உறவுகள் அ மைதியாக இருக்க இயலாது.
      4) ஆடம் ஸ்மித்தின் வாரிசுகள் என்று மார்தட்டும் தாராளமய பொருளாதார நிபுணர்கள் ஸ்மித் சொன்ன ஒ ரு கருத் தை கண்டு கொள்வ தே இல் லை
      மூலதனம் என்பது டெட் லேபர் கன்ட் ரோல்ஸ் ஓவர் லிவ்விங்க லேபர் என்றார், அதாவது செத்துப் போன உ ழைப் பே ஜீவனுள்ள உ ழைப் பை அடக்கி ஆள்வதாகும் என்கிறார், பின்னர் மூலதனம் என்பது உ ழைப்பால் திரளுகிற ஒன்று என்ப தை யே மார்க்ஸ் ஆதாரங்களுடன் விளக்குகிறார், ஈவிரக்கமற்ற தன் மை யை கிழித்து காட்டுகிறார்,
      ,
      வி லை யை சந் தை நிர்ணயிக்கிறது வி லைன்பது உப எரி ம திப் பையும் உள்ளடக்கியது முதலாளித்துவ உற்பத்தி மு றையில் உ ழைப்பு சக்தியும் சந் தை சரக்காவதால் அதன் மதிப்பிற்கும், அது உருவாக்கும் சரக்குகளின் மதிப்பிற்கும் உள்ள வித்தியாச மே உபரி மதிப்பாகிறது, முதலாளித்துவ நிபுணர்கள் தொழிலாளி வே லை செய்யாமல் உளத்தினால் அடுத்தவன் உ ழைப் பை சுரண்டுபவன் என்று இடிக்கின்றனர், அ தே நிபுணர்கள்
      ஆப் சென்டி லாண்ட் லார்டு ஆப் சென்டி முதலாளிகள் ( பங்குச் சந் தை முதலீட்டாளர்கள் போன்றவர்கள்) உழைக்காம லே பணத் தை குவிப்பதை நியாயப் படுத்த எழுதிக் குவிக்கின்றனர், சோசியல் டார்வினச கோட்பாடுக ளை ஆதாரமாக காட்டுகின்றனர்,
      இன்று பணத்தை. வைத்திருப்பவன் கா லையும் ஆட்ட வேண்டாம். மூ ளை யையும் கசக்க வேண்டாம் பண த் தை வைத்து பணத் தை எளிதில் குவித்திடமுடியும், இன்று நாம் காண்கிற பன் நாட்டு நிறுவனங்கள் வங்கிகள் முதலாளிக ளே இல்லாத அ மைப்புகளாகிவிட்டன, டாட்டா நிறுவனமும் மு தலாளி இல்லாத நிறுவனமாயிற்று , அ தே வே ளையில் டாட்டாவின் சம்மதமில்லாமல் ஒருவரும் நிர்வாகத்தில் இடம் பெற முடியாது அந்த முதலாளிகள் பங்குகள் மூலம் நிறுவனங்க ளை இயக்குகிறார்கள், கூலி ஆட்க ளே நிர்வாக வே லைக ளை செய்கின்றனர்., முதலாளித்துவ உற்பத்தி மு றையின் முரன் பா டே சொந்த உ ழைப்பால் பெறுகிற வருவாய், அடுத்தவன் உ ழைப் பை சுரண்டித் திரளும் வருவாய் இவ்விரண்டும் மோதுகிறது, முதலாளித்துவ நிபுணர்க ளோ தொழிலாளி உளத்தினால் அடுத்தவன் உ ழைப் பை சுரண்டுகிறான் என்று சாடுகின்றனர் அ தை யே முதலாளி நேரடியாக வோ ம றைமுக மாக வோ செய்தால் அடி மை புத்தி யோடு நமஸ்காரம் செய்கின்றனர்,
      கீழ் கண்டவாறு மார்க்ஸ் சொன்னதை நானும் வழிமொழிகிறேன்

      The sycophant—who in the pay of the English oligarchy played the romantic laudator temporis acti against the French Revolution just as, in the pay of the North American colonies at the beginning of the American troubles, he had played the liberal against the English oligarchy—was an out-and-out vulgar bourgeois. "The laws of commerce are the laws of Nature, and therefore the laws of God." (E. Burke, l.c., pp.31,32) No wonder that, true to the laws of God and Nature, he always sold himself in the best market.

      Delete